தெலூரியம் மூவாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலூரியம் மூவாக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தெலூரியம்(VI) ஆக்சைடு
இனங்காட்டிகள்
13451-18-8
ChemSpider 75319 Y
InChI
  • InChI=1S/O3Te/c1-4(2)3 Y
    Key: IIXQANVWKBCLEB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/O3Te/c1-4(2)3
    Key: IIXQANVWKBCLEB-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83481
SMILES
  • O=[Te](=O)=O
பண்புகள்
TeO3
வாய்ப்பாட்டு எடை 175.6 கி/மோல்
தோற்றம் மஞ்சள் ஆரஞ்சு படிகங்கள் (α-TeO3)
அடர்த்தி 5.07 கி/செ.மீ³, திண்மம்
உருகுநிலை 430 °C (806 °F; 703 K)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தெலூரியம் மூவாக்சைடு (Tellurium trioxide) என்பது TeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். தெலூரியம் மற்றும் ஆக்சைடு சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தில் தெலூரியம் +6 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.

பல்லுருவ அமைப்பு[தொகு]

மஞ்சள் கலந்த சிவப்பு நிற α-TeO3 மற்றும் சாம்பல்நிற β-TeO3 என்ற இரண்டு உருவ அமைப்புகளில் தெலூரியம் மூவாக்சைடு காணப்படுகிறது. FeF3 அமைப்புடன் எல்லா முனைகளையும் பகிர்ந்து கொள்ளும் எண்முக TeO6 அலகுகள்[1]
போன்ற அமைப்பை α-TeO3 உருவமும் செஞ்சாய்சதுர அமைப்புடன் வினைத்திறன் குறைந்த[2]
β-TeO3 உருவமும் பெற்றுள்ளன.

தயாரிப்பு[தொகு]

ஆர்தோ தெலூரிக் அமிலத்தை (Te(OH)6) 300° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் α-TeO3 உருவாகிறது. ஆல்பா வடிவ தெலூரியம் மூவாக்சைடை ஒரு மூடிய குழாய்க்குள் ஆக்சிசன் மற்றும் கந்தக அமிலம் சேர்த்து சூடாக்கினால் β-TeO3 வடிவமும் உருவாகின்றன.

α-TeO3 வடிவ i தெலூரியம் மூவாக்சைடு தண்ணீரில் வினைபுரிவதில்லை. ஆனால் இதைச் சூடாக்கும் போது ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகச் செயல்படுகிறது. காரங்களுடன் சேர்ந்து இது தெலூரேட்டுகளாக உருவாகிறது. α-TeO3 வடிவம் சூடாக்கும் போது ஆக்சிசனை இழந்து முதலில் Te2O5 ஆகவும் பின்னர் TeO2 ஆகவும் மாறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  2. Inorganic Chemistry,Egon Wiberg, Arnold Frederick Holleman Elsevier 2001 ISBN 0-12-352651-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலூரியம்_மூவாக்சைடு&oldid=2697379" இலிருந்து மீள்விக்கப்பட்டது