உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டிமனி நான்காக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிமனி நான்காக்சைடு
Antimony tetroxide

     An      O
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆண்டிமனி(III,V) ஆக்சைடு
இனங்காட்டிகள்
1332-81-6 N
பப்கெம் 74002
பண்புகள்
SbO2; Sb2O4
வாய்ப்பாட்டு எடை 153.7588; 307.5176 கி/மோல்
தோற்றம் வெண்மையான திடப்பொருள்
அடர்த்தி 6.64 கி/செ.மீ3 (சாய்சதுர வடிவம்) [1]
உருகுநிலை > 930 °C (1,710 °F; 1,200 K) (சிதைவடையும்)
கொதிநிலை சிதைவடையும்
கரையாது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.0
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம்
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஆண்டிமனி நான்காக்சைடு அல்லது ஆண்டிமனி டெட்ராக்சைடு (Antimony tetroxide) என்பது Sb2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். இயற்கையில் இச்சேர்மப் பொருள் செர்வண்டைட் என்ற கனிமப்பொருளாகக் காணப்படுகிறது[2]. வெள்ளை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் சூடுபடுத்தும்போது மஞ்சள் நிறமாக மாறுகிறது. SbO2 என்ற ஆண்டிமனி நான்காக்சைடின் முற்றுப்பெறா வாய்ப்பாடு, இரண்டு ஆண்டிமனி மையங்களின் இருப்பைத் தெரிவிக்கிறது.

தயாரிப்பு மற்றும் அமைப்பு

[தொகு]

ஆண்டிமனி மூவாக்சைடை காற்றில் சூடாக்கும்போது ஆண்டிமனி நான்காக்சைடு உருவாகிறது:[3]

Sb2O3 + 0.5 O2 → Sb2O4 ΔH = −187 கி.யூ/மோல்.

800 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆண்டிமனி(V) ஆக்சைடு ஆக்சிசனை இழந்து ஆண்டிமனி நான்காக்சைடு உருவாகிறது:

Sb2O5 → Sb2O4 + 0.5 O2 ΔH = −64 kJ/mol

இச்சேர்மம் கலப்பு இணைதிறன் அமைப்பைக் கொண்டு ஆண்டிமனி(V) மற்றும் ஆண்டிமனி(III) உலோக மையங்களைப் பெற்றுள்ளது. ஆண்டிமனி நான்காக்சைடு சாய்துரம் மற்றும் ஒற்றைசரிவு உருவமைப்பு என்ற இரண்டு வகையான பல்லுருவத் தோற்றங்களில் காணப்படுகிறது[1]. இரண்டு வடிவங்களிலும் நான்கு ஆக்சைடுகளால் கட்டப்பட்ட உருக்குலைந்த ஆண்டிமனி(III) மையங்கள் அடுக்கப்பட்டு உருவான எண்முக அமைப்புகள் வெளிப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Amador, J.; Puebla, E. Gutierrez; Monge, M. A.; Rasines, I.; Valero, C. Ruiz (1988). "Diantimony Tetraoxides Revisited". Inorganic Chemistry 27: 1367–1370. doi:10.1021/ic00281a011. 
  2. "Cervantite". Webminerals. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
  3. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமனி_நான்காக்சைடு&oldid=2898496" இலிருந்து மீள்விக்கப்பட்டது