கோபால்ட்(II) ஆக்சைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) ஆக்சைடு
| |
வேறு பெயர்கள்
கோபால்டசு ஆக்சைடு
கோபால்ட் ஓராக்சைடு | |
இனங்காட்டிகள் | |
1307-96-6 ![]() | |
ChemSpider | 8117730 ![]() |
EC number | 215-154-6 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 9942118 |
வே.ந.வி.ப எண் | GG2800000 |
| |
UN number | 3288 |
பண்புகள் | |
CoO | |
வாய்ப்பாட்டு எடை | 74.9326 கி/மோல் |
தோற்றம் | கருப்புநிறத் தூள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 6.44 கி/செ.மீ3 [1] |
உருகுநிலை | 1,933 °C (3,511 °F; 2,206 K) |
தண்ணீரில் கரையாது[2] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம், cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1551 |
ஈயூ வகைப்பாடு | தீங்கானது (Xn) சுற்றுச் சூழலுக்கு அபாயமானது (N) |
R-சொற்றொடர்கள் | R22, R43, R50/53 |
S-சொற்றொடர்கள் | (S2), S24, S37, S60, S61 |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
202 மி.கி/கி.கி |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கோபால்ட்(II) சல்பைடு கோபால்ட்(II) ஐதராக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு(II) ஆக்சைடு நிக்கல்(II) ஆக்சைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | கோபால்ட்(II,III) ஆக்சைடு கோபால்ட்(III) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கோபால்ட்(II) ஆக்சைடு (Cobalt(II) oxide or cobalt monoxide) என்பது CoO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிவப்பு ஆலிவ் பச்சை படிகங்களாக அல்லது சாம்பல் அல்லது கருப்பு தூளாக இச்சேர்மம் தோற்றமளிக்கிறது[3] . பீங்கான் தொழிலில் நீலநிறப் பளிங்கை உருவாக்கும் கூட்டுப்பொருளாகவும் மிளிரியாகவும் வேதித் தொழிற்சாலைகளில் கோபால்ட்(II) உப்புகளைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
அமைப்பு மற்றும் பண்புகள்
[தொகு]அணிக்கோவை மாறிலி மதிப்பு 4.2615 Å உள்ள பெரிகிளாசு (பாறை உப்பு) அமைப்பை கோபால்ட்(II) ஆக்சைடு படிகங்கள் ஏற்றுள்ளன[4].
16°செல்சியசு வெப்பநிலைக்குக் கீழ் எதிரயகாந்தப்பொருளாக உள்ளது[5].
தயாரிப்பு
[தொகு]950° செல்சியசு வெப்பநிலையில் கோபால்ட் (II,III) ஆக்சைடு சிதைவடைந்து கோபால்ட்(II) ஆக்சைடாக மாறுகிறது.:[6]
- 2 Co3O4 → 6 CoO + O2
வர்த்தகரீதியாக கிடைத்தாலும் கோபால்ட்(II) ஆக்சைடு ஆய்வகங்களிலும் கோபால்ட்(II) குளோரைடு கரைசலை மின்னாற்பகுப்பு முறையில் தயாரிக்கிறார்கள்[7]
CoCl2 + H2O → CoO + H2 + Cl2.
கோபால்ட் ஐதராக்சைடை வெப்ப நீர்நீக்கம் செய்து பின்னர் வீழ்படிவாக்கும் முறையிலும் கோபால்ட்(II) ஆக்சைடை தயாரிக்கப்படுகிறது.
- CoX + 2 KOH → Co(OH)2 + K2X
- Co(OH)2 → CoO + H2O
வினைகள்
[தொகு]கோபால்ட்(II) ஆக்சைடு கனிம அமிலங்களுடன் வினைபுரிந்து தொடர்புடைய கோபால்ட் உப்புகளை உருவாக்குகிறது.
- CoO + 2 HX → CoX2 + H2O
பயன்பாடுகள்
[தொகு]பல நூற்றாண்டுகளாக மட்பாண்டத் தொழிலில் வண்ணமூட்டும் முகவராகக் கோபால்ட்(II) ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. இக்கூட்டுப்பொருள் ஆழ்ந்த நீல நிறத்தை (கோபால்ட் நீலம்) வழங்குகிறது. கோபால்ட்(II) ஆக்சைடின் பட்டை இடைவெளி சுமார் 2.4 எலக்ட்ரான் வோல்ட் ஆகும் கோபால்ட் நீலக் கண்ணாடிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Patnaik, Pradyot (2003). Handbook of Inorganic Chemical Compounds. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
- ↑ Advanced Search – Alfa Aesar – A Johnson Matthey Company பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம். Alfa.com. Retrieved on 2011-11-19.
- ↑ "Safety (MSDS) data for cobalt oxide". The Physical and Theoretical Chemistry Laboratory, Oxford University. Archived from the original on 2010-10-28. பார்க்கப்பட்ட நாள் 2008-11-11.
- ↑ Kannan, R.; Seehra, Mohindar S. (1987). "Percolation effects and magnetic properties of the randomly diluted fcc system CopMg1-pO". Physical Review B 35 (13): 6847. doi:10.1103/PhysRevB.35.6847.
- ↑ Silinsky, P. S.; Seehra, Mohindar S. (1981). "Principal magnetic susceptibilities and uniaxial stress experiments in CoO". Physical Review B 24: 419. doi:10.1103/PhysRevB.24.419.
- ↑ US 4389339, "Process for making a cobalt oxide catalyst"
- ↑ Kern, S. (1876). J. Chem. Soc.: 880.