உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமித்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமித்தியம்
61Pm
-

Pm

Np
நியோடைமியம்புரோமித்தியம்சமாரியம்
தோற்றம்
உலோக தோற்றம்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் புரோமித்தியம், Pm, 61
உச்சரிப்பு /pr[invalid input: 'ɵ']ˈmθiəm/
pro-MEE-thee-əm
தனிம வகை இலாந்தனைடு
நெடுங்குழு, கிடை வரிசை, குழு n/a6, f
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[145]
இலத்திரன் அமைப்பு [Xe] 6s2 4f5
2, 8, 18, 23, 8, 2
Electron shells of Promethium (2, 8, 18, 23, 8, 2)
Electron shells of Promethium (2, 8, 18, 23, 8, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு சியென் ஷியிங் யு, எமீலியோ சேக்ரே, ஹான்ஸ் பெத் (1942)
முதற்தடவையாகத்
தனிமைப்படுத்தியவர்
சார்லஸ் கோரியெல், ஜேகப் மரின்ஸ்கி, லாரன்ஸ் கிலென்டெனின், ஹாரல்டு ரிச்டர் (1945)
பெயரிட்டவர் கிரேஸ் மேரி கோரியெல் (1945)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம் (இயற்பியல்)
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 7.26 g·cm−3
உருகுநிலை 1315 K, 1042 °C, 1908 °F
கொதிநிலை 3273 K, 3000 °C, 5432 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 7.13 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 289 கி.யூல்·மோல்−1
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 3 (குறைந்த கார ஆக்சைடு)
மின்னெதிர்த்தன்மை ? 1.13 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 540 kJ·mol−1
2வது: 1050 kJ·mol−1
3வது: 2150 kJ·mol−1
அணு ஆரம் 183 பிமீ
பங்கீட்டு ஆரை 199 pm
பிற பண்புகள்
படிக அமைப்பு hexagonal
புரோமித்தியம் has a hexagonal crystal structure
காந்த சீரமைவு paramagnetic[1]
மின்கடத்துதிறன் (அ.வெ.) மதி. 0.75 µΩ·m
வெப்ப கடத்துத் திறன் 17.9 W·m−1·K−1
வெப்ப விரிவு (அ.வெ.) (α, poly)
மதி. 11 µm/(m·K)
யங் தகைமை (α form) மதி. 46 GPa
நழுவு தகைமை (α form) மதி. 18 GPa
பரும தகைமை (α form) மதி. 33 GPa
பாய்சான் விகிதம் (α form) மதி. 0.28
CAS எண் 7440-12-2
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: புரோமித்தியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
145Pm செயற்கை 17.7 y ε 0.163 145Nd
146Pm செயற்கை 5.53 y ε 1.472 146Nd
β 1.542 146Sm
147Pm trace 2.6234 y β 0.224 147Sm
·சா

புரோமித்தியம் அல்லது புரோமீத்தியம் (ஆங்கிலம்: Promethium (prəˈmiːθiəm/, /proʊˈmiːθiəm) ஒரு வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள தனிமம். இதன் வேதியியல் குறியீடு Pm, இதன் அணுவெண் 61. இதன் அணுக்கருவில் 84 நொதுமிகள் உள்ளன.

குறிப்பிடத்தக்க பண்புகள்

[தொகு]

புரோமீத்தியத்தின் நீண்ட வாழ்வுக்காலம் கொண்ட ஓரிடத்தான் 145Pm பீட்டாத் துகள் வெளியிடும் பொருள். இதன் அரை-வாழ்வுக்காலம் 17.7 ஆண்டுகளாகும். இது காமாக் கதிர்களை வெளியிடுவதில்லை என்றாலும் வெளிவிடும் பீட்டாத் துகள்கள் அதிக அணுவெண் கொண்ட தனிமங்களின் மீது விழுந்தால் அவை புதிர்க் கதிர்கள் (X-கதிர்கள்) வெளிவிடும். 145Pm என்னும் பொருள் எக்ஸ் கதிர்களும் பீட்டாக் கதிர்களும் வெளிவிடுகின்றன.

பயன்பாடுகள்

[தொகு]

வரலாறு

[தொகு]

பொகுஸ்லாவ் பிரௌனர் என்பவர் 1902இல் இத்தனிமம் இருக்கவேண்டும் என்பதை முன்கூறினார். ஹென்றி மோஸ்லி என்பவரும் 1914 ஆம் ஆண்டு, தனிம அட்டவணையில் உள்ள இடைவெளியைக் கொண்டு (61 ஆம் அணுவெண்ணுக்கான இடைவெளி) இக்கருத்துக்கு வலுவிருப்பதாகக் கூறினார். கடைசியாக 1945 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாட்டு ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் ஜாக்கப் மரின்ஸ்கி, லாரன்ஸ் கிளெண்டனின், சார்லஸ் கோர்யெல் ஆகியோர் யுரேனிய சிதைவு இயக்கத்தின் விளைபொருட்களை ஆய்வு செய்தபொழுது புரோமித்தியத்தைக் கண்டுபிடித்து தனியே பிரித்தெடுத்துக் காட்டி நிறுவினார்கள். எனினும் 19477 இல்தான் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர் [2] புரோமித்தியம் என்னும் பெயர் கிரேக்கத் தொன்மக் கதைகளில் வரும் புரோமீத்தியஸ் என்னும் டைட்டன் இனத்தவன் ஒலிம்ப்பஸ் மலையில் இருந்து நெருப்பை எடுத்து வந்து மாந்தகுலத்திற்குத் தந்தவன் என்பதில் இருந்து எடுத்து இட்டப் பெயர். இப்பெயரைச் சார்லஸ் கோர்யெல்லின் மனைவி மேரி கோர்யெல் பரிந்துரைத்தார் என்பர்.

1963ல், மின்மவணு-பரிமாற்ற முறை (ion-exchange methods) வழி அணு உலையின் கழிவுப்பொருளில் இருந்து 10 கிராம் புரோமித்தியத்தை அமெரிக்காவில் உள்ள நாட்டு ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் உருவாக்கினார்கள்.

கிடைக்கும் அளவு (மலிவு)

[தொகு]

புரோமித்தியம் யுரேனிய சிதைவு அல்லது பிளவில், விளைபொருளாகக் கிடைக்கின்றது. மிக மிகச் சிறிய இம்மியப் பொருளாகவே இயற்கையில் கிடைக்கின்றது. யுரேனியக் கனிமமாகிய யுரேனினைட் என்னும் கனிமத்தில் நிறையளவில் குவிண்ட்டில்லியனில் ஒரு பங்களவே (1018) கிடைக்கின்றது. யுரேனினைட் என்னும் கனிமம் பிட்ச் பிளெண்டு என்றும் பரவலாக அறியப்படும் கனிமம் ஆகும்[3].

புரோமித்தியம் ஆண்ட்ரொமெடா நாள்மீன்பேரடையில் உள்ள HR 465 என்னும் விண்மீனில் இருந்து வெளிவரும் ஆற்றல் அலைகளில் இருந்தும் (ஒளி முதலான மின்காந்த அலைகள்), பிரிசிபைலிஸ்கி விண்மீன் என்னும் HD 101065 விண்மீனில் இருந்தும், HD 965. என்னும் விண்மீனில் இருந்தும் வெளிவரும் ஆற்றல் அலைகளில் இருந்து அங்கெல்லாம் புரோமித்தியம் இருப்பதற்கான தடயம் இருப்பதாக விண்ணியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள்.[4]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.
  2. "Discovery of Promethium". ORNL Review 36 (1). 2003. http://www.ornl.gov/info/ornlreview/v36_1_03/article_02.shtml. பார்த்த நாள்: 2006-09-17. 
  3. Attrep, Moses, Jr.; and P. K. Kuroda (May 1968). "Promethium in pitchblende". Journal of Inorganic and Nuclear Chemistry 30 (3): 699–703. doi:10.1016/0022-1902(68)80427-0. 
  4. Cowley, C. R.; W. P. Bidelman, S. Hubrig, G. Mathys, and D. J. Bord (2004). "On the possible presence of promethium in the spectra of HD 101065 (Przybylski's star) and HD 965". Astronomy & Astrophysics 419: 1087–1093. doi:10.1051/0004-6361:20035726. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமித்தியம்&oldid=3221974" இலிருந்து மீள்விக்கப்பட்டது