இண்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
49 காட்மியம்இண்டியம்வெள்ளீயம்
Ga

In

Tl
In-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
இண்டியம், In, 49
வேதியியல்
பொருள் வரிசை
குறை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
13, 5, p
தோற்றம் siபளபளப்பான வெண் சாம்பல்
In,49.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
114.818(3) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d10 5s2 5p1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 18, 3
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
7.31 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
7.02 g/cm³
உருகு
வெப்பநிலை
429.75 K
(156.60 °C, 313.88 °F)
கொதி நிலை 2345 K
(2072 °C, 3762 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
3.281 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
231.8 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
26.74 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1196 1325 1485 1690 1962 2340
அணுப் பண்புகள்
படிக அமைப்பு tetragonal
ஆக்சைடு
நிலைகள்
3
(இருதன்மை ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.78 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 558.3 kJ/(mol
2nd: 1820.7 kJ/mol
3rd: 2704 kJ/mol
அணு ஆரம் 155 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
156 pm
கூட்டிணைப்பு ஆரம் 144 pm
வான் டெர் வால்
ஆரம்
193 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை தரவு இல்லை
மின் தடைமை (20 °C) 83.7 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 81.8
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 32.1 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 1215 மீ/நொடி
யங்கின் மட்டு 11 GPa
மோவின்(Moh's) உறுதி எண் 1.2
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
8.83 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-74-6
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: இண்டியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
113In 4.3% In ஆனது 64 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
115In 95.7% 4.41×1014y Beta- 0.495 115Sn
மேற்கோள்கள்

இண்டியம் (ஆங்கிலம்: Indium (IPA: /ˈɪndiəm/) ஓரளவிற்கு அரிதாகவே கிடைக்கும் ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு In என்பதாகும். இதன் அணுவெண் 49, மற்றும் இதன் அணுக்கருவினுள் 66 நொதுமிகள் உள்ளன. இண்டியம் எளிதாக மழுங்கி, ஒடுங்கி, இணையவல்ல ஆனால் மாழைப்பன்பு குறைந்த குறைமாழை வகையைச் சேர்ந்த ஒரு மாழை. வேதியியல் பண்புகளின் படி, இது அலுமினியம், காலியம் போன்ற தனிமங்களுடன் ஒருவாறு ஒத்ததாக உள்ளது எனினும் துத்தநாகத்தை மிகவும் ஒத்துள்ளது. துத்தநாகம் கிடைக்கும் கனிமங்களில் இதுவும் பெரும்பாலும் இருக்கின்றது. இண்டியம் டின் ஆக்ஸைடு (இண்டியம் வெள்ளீயம் ஆக்ஸைடு) (ITO) என்னும் சேர்மம், கண்ணாடி போல ஒளி ஊடுருவும் பண்பு கொண்டது, ஆனால் அதே பொழுது நன்றாக மின்கடத்தும் திறமும் கொண்டுள்ளது. எனவே, இது ஒளிகடத்தும் மின்முனைகளாகப் பயன்படுகின்றது. கணித்திரைகளிலும், இன்றைய தட்டையான தொலக்காட்சிக் கருவிகளிலும் பயன்படும் படிகச்சீர் நீர்ம திரைகளில் இவை ஒளிகடத்தும் மின்னிணைப்புப் பொருளாகப் பயன்படுகின்றது. ஈயம் கலவாத மின்னிணைப்புதரும் உருகிணைவிகளில் இது குறைந்த வெப்பநிலையில் உருகும் ஒரு பொருளாகப் பயன்படுகின்றது.

குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]

இண்டியம் மென்மையான, வெள்ளிபோல் பளபளப்பாகவும், வெண்மையாகவும் உள்ள ஒரு தனிமம். இது அரிதாகவே கிடைக்கின்றது. மிக அரிதாகவே தனி மாழையாகக் கிடைக்கின்றது. இதனை வளைக்கும் பொழுது உயர் அதிர்வென் கொண்ட ஒலி எழுப்புகின்றது. காலியம் போல் இதுவும் கண்ணாடியில் சற்று பற்றி "நனை"க்கவல்ல பொருள் (பார்க்க: நனைப்புமை).

அரிதில் கானப்படும் ஒரு பண்பு, இதன் பரவலாக கிடைக்கும் ஓரிடத்தான் சிறிதளவு கதிரியக்கம் கொண்ட ஒன்று. ஆனால் அது மிகவும் மெதுவாக சிதைந்து வெள்ளீயம் ஆக மாறுகின்றது. இதன் அரைவாழ்வு 4.41×1014 ஆண்டுகள். இது அண்டம் தோன்றிய காலத்தைவிட 10,000 மடங்கு அதிகமானது. இயற்கையில் கிடைக்கும் தோரியம் என்னும் கதிரியக்கத் தனிமத்தை விட 50,000 மடங்கு அதிகமான கால அளவு. இந்த கதிரியக்கம் சிறியதென்பதால் கெடுதல் தராத ஒன்று ஆகும். இண்டியமானது, காமியம் போல கூடக்கூட நச்சுத்தன்மை பெறாத ஒரு நெடுங்குழு 5 ஐச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும்.

வரலாறு[தொகு]

கிடைக்கும் அளவும் பயன்கொள்ளும் அளவும்[தொகு]

Ductile Indium wire

நில உருண்டையில் ஏறத்தாழ 0.1 மிஒப (ppm) (மிஒப (ppm) = மில்லியலின் ஒரு பங்கு) உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இது ஏறத்தாழ வெள்ளி போலும் அருகியே கிடைக்கும் ஒரு பொருள். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட எடைக்கு வெள்ளியை விட இண்டியம் மூன்று மடங்கு விலை உயர்ந்தது. 1924 ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதிலும் மொத்தம் ஏறத்தாழ ஒரேஎ ஒரு கிராம் அளவே இண்டியம் பிரித்து எடுக்கப்பட்டிருந்தது. அண்மையில் கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டெக் கோமின்க்கோ தூய்ப்பிரிப்பு ஆலையில் 2005 ஆம் ஆண்டு 32,500 கிலோ கிராம் பிரித்தெடுத்திருக்கிறார்கள் (2004 ஆம் ஆண்டில் 42,800 கி.கி, 2003 ஆம் ஆண்டில் 36,100 கி.கி). இண்டியம் துத்தநாகம் பிரித்தெடுக்கும் தொழிலில் துணைவிளை பொருளாக கிடைக்கின்றது. 2002 ஆம் ஆண்டு ஒரு கி.கி $94 இருந்தது, ஆனால் 2005 ஆம் ஆண்டு இண்டியத்தின் விலை ஒரு கி.கி ஐக்கிய அமெரிக்க டாலர் $900/kg ஆக உயர்ந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டியம்&oldid=2437498" இருந்து மீள்விக்கப்பட்டது