சிஏஎசு எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(CAS எண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சி.ஏ.எசு எண் (CAS registry number) என்பது அமெரிக்க வேதியியல் குமுகம் ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தரும் தனியொரு அடையாளப் பதிவெண். அமெரிக்க வேதியியல் குமுகம் வேதியியல் பொருள்களின் அறிவியல் குறிப்புகளைத் தொகுத்துத் தரும் பணி (Chemical Abstracts Service (CAS)) ஒன்றை நடத்தி வருகின்றது. இப்பணியின் ஒரு செயலே இப்பதிவெண் தருவது. இந்த எண்ணைக் கொண்டு ஒரு பொருளைப்பற்றிய துல்லியமான வேதியியல் உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டு 'சூன் மாதம் வரையிலும் சுமார் 28,250,300 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன[1]. சனவரி 2008 அன்றுவரை 33,565,050 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன (செப்டம்பர் 11, 2007 அன்று வரை 32,449,591 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு இருந்தன). இது தவிர 59,584,048 தொடர்கள் (sequences) பதிவு செய்யப்பட்டுளன.ஒரு கிழமைக்கு (ஒரு வாரத்திற்கு) ஏறத்தாழ 50,000 புதிய வேதியியல் பொருள்களுக்கான செய்திகள் சேர்க்கப்படுகின்றன. சூன் 17, 2013 வரை 71 மில்லியன் வேதியியல் பொருளுக்கான தரவுகள் எண் குறிப்பிடப்பெற்று தொகுக்கப்பெற்றுள்ளன.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. CAS பதிவேட்டு எண் பொருட்களின் எண்ணிக்கை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஏஎசு_எண்&oldid=2740456" இருந்து மீள்விக்கப்பட்டது