உள்ளடக்கத்துக்குச் செல்

இண்டியம்(I) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இண்டியம்(I) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இண்டியம்(I) புரோமைடு
இனங்காட்டிகள்
14280-53-6 Y
ChemSpider 21106449 Y
InChI
 • InChI=1S/BrH.In/h1H;/q;+1/p-1 Y
  Key: KLRHPHDUDFIRKB-UHFFFAOYSA-M Y
 • InChI=1/BrH.In/h1H;/q;+1/p-1
  Key: KLRHPHDUDFIRKB-REWHXWOFAH
யேமல் -3D படிமங்கள் Image
 • [In+].[Br-]
பண்புகள்
InBr
வாய்ப்பாட்டு எடை 194.722 கி/மோல்
அடர்த்தி 4.960 கி/செ.மீ3
உருகுநிலை 285 °C (545 °F; 558 K)
கொதிநிலை 656 °C (1,213 °F; 929 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இண்டியம்(I) புரோமைடு (Indium(I) bromide) என்பது InBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியமும் புரோமினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சிவப்பு நிறத்தில் படிகச்சேர்மமாக காணப்படுகிறது. β-தாலியம் அயோடைடு கட்டமைப்பையொத்த சமகட்டமைப்புடனும் திரிபடைந்த பாறை உப்பு அமைப்பையும்[1] இண்டியம்(I) புரோமைடு கொண்டிருக்கிறது. இண்டியம் உலோகத்தை இண்டியம் டிரைபுரோமைடு எனப்படும் இண்டியம் முப்புரோமைடுடன் சேர்த்து சூடுபடுத்தும்பொழுது இண்டியம்(I) புரோமைடு உருவாகிறது. இச்சேர்மம் கந்தக விளக்கில் பயன்படுத்தப்படுகிறது. கரிம வேதியியலில், α, α-இருகுளோரோகீட்டோன்களை 1-அரைல்-பியூட்டேன்-1,4-டையோன்களாக்கும்[2] இணைப்பு வினைகளை இச்சேர்மம் முன்நகர்த்துகிறது. ஆல்க்கைல் ஆலைடுகளை ஆல்க்கைல் இண்டியம் ஆலைடுகளாகவும்[3], நிக்கல்புரோமின் அணைவுச்சேர்மங்களை நிக்கல்-இண்டியம் பிணைப்புகளாகவும் மாற்றுவது போன்ற ஆக்சிசனேற்ற கூட்டுவினைகளில் இண்டியம்(I) புரோமைடு பங்களிக்கிறது[4]. தண்ணீரில் நிலைப்புத்தன்மை இல்லாமல் இண்டியம் உலோகமாகவும் இண்டியம் முப்புரோமைடாகவும் சிதைகிறது. இண்டியம் இருபுரோமைடு தண்ணீரில் கரைந்து உண்மையென கருதத்தக்க, நீரில் கரையாத வீழ்படிவாக உருவாகி உடனடியாகசிதைவடைகிறது[5].

மேற்கோள்கள்[தொகு]

 • WebElements
 • Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
 1. Stephenson N.C., Mellor D.P. "The crystal structure of indium monobromide" Australian journal of scientific research A 3 (1950) 581-586
 2. C. Peppe and R. Pavão das Chagas (2004). "Indium(I) Bromide-Mediated Reductive Coupling of α,α-Dichloroketones to 1-Aryl-butane-1,4-diones". Synlett (7): 1187–1190. doi:10.1055/s-2004-825591. 
 3. M. J. S. Gynane, L. G. Waterworth and I. J. Worrall (1972). "Oxidative addition reactions of group III metals in low oxidation states III. Reactions of indium monohalides with alkyl halides". Journal of Organometallic Chemistry 43 (2): 257–264. doi:10.1016/S0022-328X(00)81599-5. 
 4. J. Weiss, T. Priermeier and R. A. Fischer (1996). "Reactions of Elemental Indium and Indium(I) Bromide with Nickel-Bromine Bonds: Structure of (η5-C5H5)(Ph3P)Ni-InBr2(O=PPh3)". Inorg. Chem. 35 (1): 71–75. doi:10.1021/ic950614i. 
 5. R. Dronskowski (1994). "Ambient-Temperature Formation of Crystalline Indium Monohalides from Aqueous Media". Inorg. Chem. 33 (25): 5960–5963. doi:10.1021/ic00103a054. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டியம்(I)_புரோமைடு&oldid=2688087" இலிருந்து மீள்விக்கப்பட்டது