சீசியம் புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் புரோமைடு
Caesium-bromide-3D-ionic.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் புரோமைடு
வேறு பெயர்கள்
சீசியம் புரோமைடு,
சீசியம்(I) புரோமைடு
இனங்காட்டிகள்
7787-69-1 Yes check.svgY
ChemSpider 22994 Yes check.svgY
EC number 232-130-0
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24592
பண்புகள்
CsBr
வாய்ப்பாட்டு எடை 212.81 கி/மோல்
தோற்றம் வெண்மையான திடப்பொருள்
அடர்த்தி 4.44 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை
கொதிநிலை 1,300 °C (2,370 °F; 1,570 K)
1062 கி/லி (15 °செ)
1243 கி/லி (25 °செ)
கட்டமைப்பு
படிக அமைப்பு CsCl
ஒருங்கிணைவு
வடிவியல்
8–8
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது.
Lethal dose or concentration (LD, LC):
1400 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீசையம் புளோரைடு
சீசியம் குளோரைடு
சீசியம் அயோடைடு
சீசியம் அசுட்டாடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் புரோமைடு
பொட்டாசியம் புரோமைடு
ருபீடியம் புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சீசியம் புரோமைடு (Caesium bromide) என்பது CsBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சீசியமும் புரோமினும் சேர்ந்த வேதிச் சேர்மம் ஆகும். சீசியம் குளோரைடு வகை கனசதுர அமைப்பை ஒத்த எளிய கனசதுர படிக அமைப்பை சீசியம் புரோமைடு பெற்றிருக்கிறது. இவ்வமைப்பு Pm3m இடக்குழு வகையையும் அணிக்கோவை மதிப்பு a = 0.42953 நா.மீ. Cs+ மற்றும் Br− அயனிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி 0.37198 நா.மீ ஆகும். எலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கப்பட்டால் இதனுடைய கொல்லும் அளவு 1400 மி.கி/ கி.கி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. [2]

தொகுப்பு முறையில் தயாரிப்பு[தொகு]

பின்வரும் வேதி வினைகள் வழியாக சீசியம் புரோமைடைத் தயாரிக்கலாம்.

நடுநிலையாக்கல் வினை[தொகு]

CsOH (நீர்த்த) + HBr (நீர்த்த) → CsBr (நீர்த்த) + H2O (நீர்மம்) Cs2(CO3) (நீர்த்த) + 2 HBr (நீர்த்த) → 2 CsBr (நீர்த்த) + H2O (நீர்மம்) + CO2 (வாயு)

• நேரடித் தொகுப்பு வினை:

2 Cs (திண்மம்) + Br2 (வாயு) → 2 CsBr (திண்மம்)

சீசியம் உலோகம், உப்பீனிகளுடன் நேரடியாக வினைபுரியும் போது அதி தீவிரமாக வினைபுரிகிறது என்பதாலும் அதிக விலைமதிப்பு கொண்டது என்பதாலும் பெரும்பாலும் இம்முறையில் சீசியம் புரோமைடு தயாரிக்கப்படுவதில்லை.

பயன்கள்[தொகு]

ஒளியியலில் சில சமயங்களில் நிறமாலை ஒளியளவியில், ஒளிக்கற்றைப் பிரிப்பானாக சீசியம் புரோமைடு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் காணக[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_புரோமைடு&oldid=3538530" இருந்து மீள்விக்கப்பட்டது