உள்ளடக்கத்துக்குச் செல்

தாலியம்(I) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலியம்(I) புரோமைடு Thallium(I) bromide
தாலியம்(I) புரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாலியம் மோனோபுரோமைடு
இனங்காட்டிகள்
7789-40-4 Y
ChemSpider 56428 Y
EC number 232-163-0
InChI
 • InChI=1S/BrH.Tl/h1H;/q;+1/p-1 Y
  Key: PGAPATLGJSQQBU-UHFFFAOYSA-M Y
 • InChI=1/BrH.Tl/h1H;/q;+1/p-1
  Key: PGAPATLGJSQQBU-REWHXWOFAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62677
 • Br[Tl]
பண்புகள்
TlBr
வாய்ப்பாட்டு எடை 284.287 கி/மோல்[1]
தோற்றம் மஞ்சள் நிற படிகத் திண்மம்[1]
அடர்த்தி 7.5 கி/செ.மீ3[1]
உருகுநிலை 460 °C (860 °F; 733 K)[1]
கொதிநிலை 819 °C (1,506 °F; 1,092 K)[1]
0.59 கி/லி (25 °செ)[1]
−63.9•10−6 cm3/மோல்[2]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.418 (0.59 µm)
2.350 (0.75 µm)
2.289 (1 µm)
1.984 (5 µm)
2.322 (20 µm)[3]
கட்டமைப்பு
படிக அமைப்பு சீசியம் குளோரைடு
புறவெளித் தொகுதி Pm3m, No. 221[4]
ஒருங்கிணைவு
வடிவியல்
கனசதுரம் (Tl+)
Cubic (Br)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு அதிமான நச்சு (T+)
சுற்றுச்சூழலுக்கு அபாயம் (N)
R-சொற்றொடர்கள் R26/28, R33, R51/53
S-சொற்றொடர்கள் (S1/2), S13, S28, S45, S61
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தாலியம்(I) புளோரைடு,
தாலியம்(I) குளோரைடு,
தாலியம்(I) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இண்டியம்(I) புரோமைடு,
ஈயம்(II) புரோமைடு
பிசுமத் புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தாலியம்(I) புரோமைடு (Thallium(I) bromide) என்பது TlBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாலியமும் புரோமினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அறை வெப்பநிலையில் எக்சு-கதிர், காமா-கதிர், நீல ஒளி மற்றும் அண்மை-அகச்சிவப்பு கதிர்கள் போன்றவற்றை காணும் உணரியாக இது பயன்படுத்தப்படுகிறது. தாலியம்(I) புரோமைடு 2.68 எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் இடைவெளி கொண்ட ஒரு குறைக்கடத்தியாகும் [5].

அறை வெப்பநிலையில் தாலியம்(I) புரோமைடு கனசதுர சீசியம் குளோரைடு வகை கட்டமைப்பு கொண்டதாக உள்ளது. ஆனால் குளிர்விக்கும்போது செஞ்சாய்சதுரப் படிகத் திட்டம் கொண்டதாக மாறுகிறது [6]. மாறும் வெப்பநிலை அளவு இதனுடன் கலந்துள்ள மாசுக்களை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுகிறது. LiF, NaCl அல்லது KBr தளப்பொருட்கள் மீது நானோமீட்டர் அளவு- மெல்லிய தாலியம் புரோமைடு படலங்கள் பாறை உப்பு வகை கட்டமைப்புடன் வளர்கின்றன [4].

தாலியம் மிகவும் நச்சுத்தன்மையுடைய ஒரு தனிமம் ஆகும். தோல் வழியாக உறிஞ்சப்பட்டு ஒட்டுமொத்தமாக இது நச்சாக திரள்கிறது. தாலியம் சேர்மங்களை உட்கொள்வதனால் சோர்வு, மூட்டு வலி, புற நரம்பழற்சி, இணைப்பு வலி, முடி உதிர்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் மத்திய நரம்பு மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு சேதம் உள்ளிட்ட கடுமையான மற்றும் நாள்பட்ட விளைவுகள் தோன்றுகின்றன [7].

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Haynes, p. 4.94
 2. Haynes, p. 4.135
 3. Haynes, p. 10.242
 4. 4.0 4.1 Schulz, L. G. (1951). "Polymorphism of cesium and thallium halides". Acta Crystallographica 4 (6): 487. doi:10.1107/S0365110X51001641. 
 5. Temperature Dependence of Spectroscopic Performance of Thallium Bromide X- and Gamma-Ray Detectors
 6. Blackman, M; Khan, I H (1961). "The Polymorphism of Thallium and Other Halides at Low Temperatures". Proceedings of the Physical Society 77 (2): 471. doi:10.1088/0370-1328/77/2/331. 
 7. Thallium Bromide Material safety data sheet பரணிடப்பட்டது 2007-10-30 at the வந்தவழி இயந்திரம். espimetals.com

துணை நூல்[தொகு]

 • Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(I)_புரோமைடு&oldid=3318968" இலிருந்து மீள்விக்கப்பட்டது