தாலியம்(I) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலியம்(I)ஆக்சைடு
Tl2Ostructure.jpg
Tl2Ostructure2.jpg
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாலசு ஆக்சைடு
இனங்காட்டிகள்
1314-12-1 Yes check.svgY
EC number 215-220-4
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16684203
பண்புகள்
Tl2O
வாய்ப்பாட்டு எடை 424.77 கி/மோல்
தோற்றம் கருப்பு சாய்சதுரப் படிகங்கள்
நீரை உறிஞ்சும் தன்மையது
அடர்த்தி 10.45 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 1,080 °C (1,980 °F; 1,350 K) (சிதைவடையும்)
கரையும்
கரைதிறன் ஆல்ககால் மற்றும் அமிலம் ஆகியவற்றில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hR18[1]
புறவெளித் தொகுதி R-3m, No. 166
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் தாலியம்(III) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

தாலியம்(I) ஆக்சைடு (Thallium(I) oxide) என்பது தாலியம் மற்றும் ஆக்சிசன் இணைந்து உருவாகும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு Tl2O ஆகும். இச்சேர்மத்தில் தாலியம் +1 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. கருப்பு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரையும் பொழுது அடிப்படை மஞ்சள் நிறத்தில் தாலியம்(I) ஐதராக்சைடு (TlOH) கரைசலைத் தருகிறது. திண்ம தாலியம் ஐதராக்சைடு அல்லது தாலியம் கார்பனேட்டை (Tl2CO3) காற்று இல்லாமல் சூடாக்கும் போது தாலியம் ஐதராக்சைடு கரைசல் உண்டாகிறது. சிறப்பு ஒளிவிலகல் எண் கொண்ட கண்ணாடிகள் தயாரிக்க தாலியம் ஆக்சைடு உதவுகிறது. உயர்வெப்பநிலை மீக்கடத்திகளில் தாலியம் ஆக்சைடு பகுதிப்பொருளாக உள்ளது. மேலும் இது அமிலங்களுடன் வினைபுரிந்து தாலியம்(I) உப்புகளை உருவாக்குகிறது.

Tl2O திண்ம நிலையில் எதிர் காட்மியம் அயோடைடு கட்டமைப்பை ஏற்கிறது.[1] இவ்வழியில், Tl(I) மையங்கள் பட்டைக்கூம்பு வடிவிலும் ஆக்சைடு மையங்கள் எண்முக மூலக்கூறு வடிவத்திலும் காணப்படுகின்றன.

மற்ற தாலியம் சேர்மங்களைப் போலவே தாலியம்(I) ஆக்சைடும் அதிக நச்சுத்தன்மை மிக்க சேர்மமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sabrowsky H. (1971). "Zur Darstellung und Kristallstruktur von Tl2O". Zeitschrift fur anorganische und allgemeine Chemie 381 (3): 266. doi:10.1002/zaac.19713810305. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(I)_ஆக்சைடு&oldid=2760875" இருந்து மீள்விக்கப்பட்டது