சைக்ளோபென்டாடையீனைல்தாலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைக்ளோபென்டாடையீனைல்தாலியம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாலியம்(I) சைக்ளோபென்டாடையீனைடு
வேறு பெயர்கள்
தாலியம் சைக்ளோபென்டாடையீனைடு
5- தாலியம் சைக்ளோபென்டாடையீனைல்)தாலியம்
இனங்காட்டிகள்
34822-90-7
ChemSpider 24721800 Y
InChI
  • InChI=1S/C5H5.Tl/c1-2-4-5-3-1;/h1-5H;/q-1;+1
    Key: CVEQRUADOXXBRI-UHFFFAOYSA-N
  • InChI=1/C5H5.Tl/c1-2-4-5-3-1;/h1-5H;/q-1;+1
    Key: CVEQRUADOXXBRI-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 97304
SMILES
  • [cH-]1cccc1.[Tl+]
பண்புகள்
C5H5Tl
வாய்ப்பாட்டு எடை 269.48 g·mol−1
தோற்றம் இளமஞ்சள் திண்மம்
உருகுநிலை 300 °C (572 °F; 573 K)
கரையாது
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Very Toxic T+
R-சொற்றொடர்கள் R26/28, R33, R36/37/38
S-சொற்றொடர்கள் S13, S28, S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சைக்ளோபென்டாடையீனைல்தாலியம் (Cyclopentadienylthallium) என்பது C5H5Tl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வளையபென்டாடையீனைல்தாலியம், தாலியம் சைக்ளோபென்டாடையீனைடு என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். இளமஞ்சள் நிறத்தில் ஒரு திண்மமாகக் காணப்படும் கரிமதாலியம் சேர்மமான இது பெரும்பாலான கரிமக் கரைப்பான்களில் கரையாது. ஆனால் உடனடியாகப் பதங்கமாகிவிடுகிறது. இடைநிலைத் தனிமங்கள் மற்றும் முக்கியக் குழுத் தனிமங்களின் சைக்ளோபென்டாடையீனைல் அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக சைக்ளோபென்டாடையீனைல்தாலியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கரிம சைக்ளோபென்டாடையீனைல் வழிப்பெறுதிகள் தயாரிப்பிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள் [1].

தயாரிப்பும் கட்டமைப்பும்[தொகு]

தாலியம்(I) சல்பேட்டு, சோடியம் ஐதராக்சைடு, சைக்ளோபென்டாடையீன் ஆகியவை சேர்ந்து வினைபுரிவதால் சைக்ளோபென்டாடையீனைல்தாலியம் உருவாகிறது:[2]

Tl2SO4 + 2 NaOH → 2 TlOH + Na2SO4
TlOH + C5H6 → TlC5H5 + H2O

எண்ணற்ற வளைந்த மெட்டலோசீன் சேர்ம வளையங்களாலான பெரிய பலபடி கட்டமைப்பை சைக்ளோபென்டாடையீனைல்தாலியம் ஏற்றுள்ளது.

Tl---Tl---Tl பிணைப்புக் கோணங்கள் 130° ஆகும்.[3]. பதங்கமாகும்போது சைக்ளோபென்டாடையீனைல்தாலியம் என்ற பலபடி C5v சீர்மை கொண்ட ஒருமங்களாக உடைகிறது.

பயன்பாடுகள்[தொகு]

சோடியம் சைக்ளோபென்டாடையீனைடு, CpMgBr மற்றும் Cp2Mg உள்ளிட்ட சைக்ளோபென்டாடையீனைல் மாற்று முகவர்களுடன் ஒப்பிடுகையில் சைக்ளோபென்டாடையீனைல்தாலியம் ஒரு குறைந்த அளவு காற்று உணரியாகக் கருதப்படுகிறது. ஒரு ஒடுக்கும் முகவரைக்காட்டிலும் குறைவான காற்று உணரியாகவும் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. C. Elschenbroich, (2006). Organometallics. Wiley-VCH, Weinheim. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-527-29390-6 
  2. A.J. Nielson; C.E.F. Rickard; J.M. Smith (1986). "Cyclopentadienylthallium (Thallium Cyclopentadienide)". Inorg. Synth. 24: 97–99. doi:10.1002/9780470132555.ch31. 
  3. Falk Olbrich, Ulrich Behrens "Crystal structure of catena-cyclopentadienylthallium, [Tl(C5H5)]" Zeitschrift für Kristallographie - New Crystal Structures 1997, 212, 47-47.