தாலியம் அசைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தாலியம் அசைடு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 15368504 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 22764821 |
| |
பண்புகள் | |
TlN3 | |
வாய்ப்பாட்டு எடை | 246.4035 |
தோற்றம் | மஞ்சள்-பழுப்பு |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நான்முகம், tI16 [1] |
புறவெளித் தொகுதி | I4/mcm, No. 140 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாலியம் அசைடு (Thallium azide) என்பது தாலியம் மற்றும் நைட்ரசன் ஆகியவை இணைந்து உருவாகும் ஒரு கனிமச் சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு TlN3 ஆகும். இது மஞ்சள் கலந்த பழுப்பு நிற படிகங்களாகக் காணப்படுகிறது. இச்சேர்மம் தண்ணீரில் குறைந்த அளவே கரைகிறது. ஈய அசைடு போல இது காணப்பட்டாலும் உராய்வு மற்றும் அதிர்ச்சி ஆகியவற்றால் இது பாதிக்கப்படுவதில்லை. தீப்பொறி அல்லது சுவாலையால் தூண்டி இதை எளிதாக வெடிக்கச் செய்யவியலும். அலோக கொள்கலன்களில் உலர்ந்த நிலையில் இதைப் பத்திரமாக பாதுகாக்க முடியும்.
தயாரிப்பு
[தொகு]
தாலியம்(I)சல்பேட்டை தண்ணீரில் கரைத்து அதனுடன் சோடியம் அசைடு கரைசலைச் சேர்த்தால் தாலியம் அசைடு வீழ்படிவாகிக் கிடைக்கிறது. குளிரூட்டியில் உறைய வைப்பதன் மூலமாக இதன் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் முடியும்.
பாதுகாப்பு நடவடிக்கை
[தொகு]தாலியம் சேர்மங்கள் அனைத்தும் நச்சுத்தன்மை உள்ளவையாகும். எனவே அவற்றை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். தாலியம் துகள், அல்லது ஆவியை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mauer F.A., Hubbard C.R., Hahn T.A. (1973). "Thermal expansion and low temperature phase transition of thallous azide". J. Chem. Phys. 59 (7): 3770–3776. doi:10.1063/1.1680549.