தாமிர(I) சயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிர(I) சயனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிரம்(I) சயனைடு
வேறு பெயர்கள்
குப்ரசு சயனைடு, தாமிர சயனைடு, குப்ரிசின், செப்பு சயனைடு
இனங்காட்டிகள்
544-92-3 Y
ChemSpider 10543 Y
EC number 208-883-6
InChI
  • InChI=1S/CN.Cu/c1-2;/q-1;+1 Y
    Key: DOBRDRYODQBAMW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CN.Cu/c1-2;/q-1;+1
    Key: DOBRDRYODQBAMW-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11009
வே.ந.வி.ப எண் GL7150000
SMILES
  • [Cu+].[C-]#N
பண்புகள்
CuCN
வாய்ப்பாட்டு எடை 89.563 கி/மோல்
தோற்றம் வெளிர் வெள்ளை / வெளிர் மஞ்சள் தூள்
அடர்த்தி 2.92 கி/செ.மீ3[1]
உருகுநிலை 474 °C (885 °F; 747 K)
மிகக் குறைவு
கரைதிறன் எத்தனால், குளிர்ந்த நீர்த்த அமிலங்கள் போன்றவற்றில் கரையாது;
NH4OH, KCN போன்றவற்றில் கரையும்
-24.0·10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS
ஈயூ வகைப்பாடு மிக நஞ்சு (T+)
சூழலுக்கு அபாயமானது (N)
R-சொற்றொடர்கள் R26/27/28, R32, R50/53
S-சொற்றொடர்கள் (S1/2), S7, S28, S29, S45, S60, S61
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (Cu ஆக)[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 1 மி.கி/மீ3 (Cu ஆக)[2]
உடனடி அபாயம்
TWA 100 மி.கி/மீ3 (Cu ஆக)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தாமிர(I) சயனைடு (Copper(I) cyanide) என்பது CuCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெளிர் வெள்ளை நிறத்திலுள்ள இத்திண்மச் சேர்மம் இரண்டு பல்லுருவ அமைப்புகளில் காணப்படுகிறது. Cu (II) அசுத்தங்கள் இருப்பதன் காரணமாக தூய்மையற்ற மாதிரிகள் பச்சை நிறமாக இருக்கின்றன. தாமிர(I) சயனைடு ஒரு வினையூக்கியாக பயனளிக்கிறது, மேலும் நைட்ரைல்களை தயாரிப்பதில் ஒரு வினையாக்கியாகவும் தாமிர மின்முலாம் பூசுவதிலும் பயன்படுகிறது [3].

தாமிர சயனைடு ஒர் அணைவுப் பலபடியாகும். இது இரண்டு பல்லுருவ அமைப்புகளில் காணப்படுகிறது. இரண்டு அமைப்புகளிலும் ஒருபடி தாமிர(I) மையங்கள் சயனைடு பாலங்கள் இணைக்கப்பட்டு உருவாகும் [Cu-CN] – சங்கிலிகளைப் பெற்றுள்ளன. உயர் வெப்பநிலை பல்லுருவத் தோற்றத்தில் உவெ-CuCN, இது AgCN உடன் சமகட்டமைப்பு கொண்டதாக உள்ளது. ஒருபடிச் சங்கிலிகள் அறுகோண சட்டகத்திலும், அடுத்துள்ள சங்கிலிகள் +/- 1/3 c குத்தளவிலும் பொதிந்துள்ளன. (படம்1) [4]. குறைந்த வெப்பநிலை பல்லுருவ அமைப்பில் குவெ-CuCN, சங்கிலிகள் நேரியலிலிருந்து விலகி 49 ° இல் சுழன்ற அடுத்துள்ள அடுக்குச் சங்கிலிகளில் ஏபி பாங்கில் குற்றலை அடுக்குகளாகப் பொதிந்துள்ளன. (படம் 2) [5].

குவெ-CuCN பல்லுருவத்தை வினையுறாச் சூழலில் 563 கெல்வின் வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் அது உவெ-CuCN பல்லுருவமாக மாறுகிறது. இரண்டுவகையான பல்லுருவ அமைப்புகளிலும் தாமிரம் கார்பன் மற்றும் தாமிரம் நைட்ரசன் பிணைப்பு நீளங்கள் ~1.85 Å ஆகவும் சயனைடு தொகுதி பாலங்கள் முற்றிலுமாக சீர்குலைந்தும் காணப்படுகின்றன [6].

தயாரிப்பு[தொகு]

தாமிர(I) சயனைடு வர்த்தக முறையில் குவெ-CuCN ஆகக் கிடைக்கிறது. தாமிர(II) சல்பேட்டை சோடியம் பைசல்பைட்டுடன் சேர்த்து 60 ° செல்சியசு வெப்பநிலையில் ஒடுக்குவதால் இதைத் தயாரிக்கமுடியும். வினையின் முடிவில் சோடியம் சயனைடைச் சேர்த்தால் தூய்மையான குவெ-CuCN மஞ்சள் நிறத் தூளாக வீழ்படிவாகிறது [7]

2 CuSO4 + NaHSO3 + H2O + 2 NaCN → 2 CuCN + 3 NaHSO4.

சோடியம் பைசல்பைட்டைச் சேர்க்கும் போது தாமிர சல்பேட்டு கரைசல் நீல நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு மாறுகின்ற அப்புள்ளியில் சோடியம் சயனைடு சேர்க்கப்படுகிறது. வினை முழுவதும் மிதமான அமிலச்சூழலில் நடைபெறுகிறது. சோடியம் சயனைடுடன் சேர்த்து தாமிர(II) சல்பேட்டைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் வரலாற்று ரீதியாக தாமிர சயனைடு தயாரிக்கப்பட்டுள்ளது, இந்த ஏற்ற ஒடுக்க வினையில் தாமிர(I) சயனைடு, சயனோசனுடன் சேர்ந்து உருவாகிறது :[8]

2 CuSO4 + 4 NaCN → 2 CuCN + (CN)2 + 2 Na2SO4.

இந்த செயற்கைமுறை தயாரிப்பு வழி சயனோசனை உருவாக்குகிறது என்பதால், CuCN சேர்மத்திற்கு சமமாக இரண்டு பங்கு சோடியம் சயனைடு வினையில் பயன்படுத்தப்படுகிறது, இதன் விளைவாக உருவாகும் தாமிர சயனைடு தூய்மையற்றதாக உள்ளது, இத்தயாரிப்பு முறை ஒரு தொழில்துறை உற்பத்தி முறை அல்ல. தாமிர சல்பேட்டு மற்றும் சோடியம் அயோடைடு ஆகியவற்றிற்கு இடையே நடைபெறும் வினையில் தாமிர(I) அயோடைடு உருவாகும் வினையை ஒத்த வினையாக இவ்வினை கருதப்படுகிறது. சயனைடு அயனிகள் போலி ஆலைடாக செயல்படும் வினைக்கு இவ்வினை எடுத்துக்காட்டாகும். மேலும், தாமிர(II) சயனைடு Cu(CN)2 தயாரிக்க இயலாமைக்கான காரணத்தையும் இவ்வினை விளக்குகிறது.

வினைகள்[தொகு]

தாமிர சயனைடு நீரில் கரைவதில்லை. ஆனால் CN− அயனிகள் உள்ள கரைசல்களில் விரைவாகக் கரைந்து [Cu(CN)3]2− மற்றும் [Cu(CN)4]3− அயனிகளாக மாறுகிறது. இவை முறையே முக்கோணத்தள மூலக்கூறாகவும், நான்முகி ஒருங்கிணைவு வடிவமைப்பும் கொண்டுள்ளன. இந்த அணைவுகள் தங்கம் மற்றும் வெள்ளி சயனைடுகளிடம் வேறுபடுகின்றன [9]. கரைசலில் இச்சயனைடுகள் [M(CN)2]− அயனிகளாக உருவாகின்றன. [Cu(CN)2]− அலகுகளைப் பெற்றுள்ள KCu(CN)2 அணைவுப் பலபடியானது சுருள்வடிவ எதிர்மின்னயனி சங்கிலிகளுடன் இணைந்து ஒன்றாகிறது [10]. தாமிர சயனைடு செறிவு மிகுந்த அமோனியா, பிரிடின் மற்றும் மெத்தில்பிரோலிடோன் போன்றவற்றிலும் கரைகிறது.

பயன்[தொகு]

தாமிர மின்முலாம் பூசுதலில் தாமிர சயனைடு பயன்படுகிறது [3].

கரிமத் தொகுப்பு வினைகள்[தொகு]

கரிமத்தாமிர வேதியியலில் CuCN ஒரு பிரபலமான வினையாக்கியாகும். கரிமலித்தியம் வினையாக்கிகளுடன் இது வினைபுரிந்து Li[RCuCN] மற்றும் Li2[R2CuCN] போன்ற கலப்புத் தாமிர அணைவுகளை உருவாக்குகிறது. CuCN இன் பயன்பாடானது கில்மான் வினையாக்கி எனப்பட்ட CuR மற்றும் LiCuR2 போன்ற எளிய கரிமத்தாமிர வினையாக்கிகளின் பயன்பாட்டை பரவலாக்கியது. சயனைடு முன்னிலையில் இந்த கலப்புத்தாமிர அணைவுகள் விரைவாகத் தூய்மைப்படுத்தப்பட்டும் மேலும் நிலைத்தன்மைம் பெறுகின்றன. கலப்புத்தாமிர அணைவுகளான Li[RCuCN], Li2[R2CuCN] இரண்டும் கார்பன் எதிர்மின்னயனியின் (R−) மூலமாகச் செயல்படுகிறது. ஆனால், தாய் கரிமலித்தியம் வினையாக்கியுடன் ஒப்பிடுகையில் குறுகிய செயல்திறனாக உள்ளது. இதனால் இவை இணை கூடுகை வினைகளுக்கும் சில இடப்பெயர்ச்சி வினைகளுக்கும் பயனுள்ளதாக உள்ளன [11]. தாமிர சயனைடைக் கொண்டு சிலில் மற்றும் வெள்ளீய வினையாக்கிகளையும் உருவாக்கலாம். R3Si− மற்றும் R3Sn−.அயனிகளுக்கு இவை மூலமாகக் பயன்படுகின்றன[12]. அரைல் ஆலைடுகளை நைட்ரைல்களாக மாற்றவும் தாமிர சயனைடு உதவுகிறது[11].

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R., தொகுப்பாசிரியர் (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0487-3. 
  2. 2.0 2.1 2.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 H. Wayne Richardson "Copper Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a07_567
  4. S. J. Hibble; S. M. Cheyne; A. C. Hannon; S. G. Eversfield (2002). "CuCN: A Polymorphic Matirial. Structure of One Form from Total Neutron Diffraction". Inorg. Chem. 41 (20): 8040–8048. doi:10.1021/ic0257569. 
  5. S. J. Hibble; S. G. Eversfield; A. R. Cowley; A. M. Chippindale (2004). "Copper(I) Cyanide: A Simple Compound with a complicated Structure and Surprising Room-Temperature Reactivity". Angew. Chem. Int. Ed. 43 (5): 628–630. doi:10.1002/anie.200352844. 
  6. S. Kroeker; R. E. Wasylishen; J. V. Hanna (1999). "The Structure of Solid Copper(I) Cyanide: A Multinuclear Magnetic and Quadrupole Resonance Study.". Journal of the American Chemical Society 121 (7): 1582–1590. doi:10.1021/ja983253p. 
  7. H. J. Barber (1943). "Cuprous Cyanide: A Note on its Preparation and Use". J. Chem. Soc.: 79. doi:10.1039/JR9430000079. 
  8. J. V. Supniewski and P. L. Salzberg (1941). "Allyl Cyanide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV1P0046. ; Collective Volume, vol. 1, p. 46
  9. Sharpe, A. G. (1976). The Chemistry of Cyano Complexes of the Transition Metals. Academic Press. பக். 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-638450-9. 
  10. Housecroft, Catherine E.; Sharpe, Alan G. (2008) Inorganic Chemistry (3rd ed.), Pearson: Prentice Hall. ISBN 978-0-13-175553-6.
  11. 11.0 11.1 Steven H. Bertz, Edward H. Fairchild, Karl Dieter, "Copper(I) Cyanide" in Encyclopedia of Reagents for Organic Synthesis 2005, John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rc224.pub2
  12. Dieter, R. K. In Modern Organocopper Chemistry; Krause, N., Ed.; Wiley-VCH: Mörlenback, Germany, 2002; Chapter 3.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர(I)_சயனைடு&oldid=3215850" இலிருந்து மீள்விக்கப்பட்டது