அமோனியம் சீரியம்(IV) சல்பேட்டு
தோற்றம்
வார்ப்புரு:Chembox OHS (set)
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 10378-47-9 | |
| ChemSpider | 17339565 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| H20N4S2O18Ce | |
| வாய்ப்பாட்டு எடை | 632.55 கி/மோல் |
| தோற்றம் | ஆரஞ்சு நிறத் திண்மம் |
| தண்ணீரில் கரையும் | |
| தீங்குகள் | |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
அமோனியம் சீரியம்(IV) சல்பேட்டு (Ammonium cerium(IV) sulfate) என்பது (NH4)4Ce(SO4)4.2 H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாக செயல்படுகிறது. இச்சேர்மத்தின் குறைப்புத் திறன் +1.44 வோல்ட்டு ஆகும். சீரியம்(IV) சல்பேட்டு இச்சேர்மத்துடன் தொடர்புடைய சேர்மமாகும்.
அமைப்பு
[தொகு]இச்சேர்மம் Ce2(SO4)88− எதிர்மின் அயனியைப் பெற்றுள்ளது என்று படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இங்கு சல்பேட்டுத் தொகுதியைச் சேர்ந்த ஒன்பது ஆக்சிசன் அணுக்கள் உருச்சிதைந்த முப்பொதி முக்கோணப் பட்டகத்தில் சீரியம் அணுக்களுடன் ஒருங்கிணைப்பு கொண்டுள்ளன[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shan, Y.; Huang, S. D. (1998). "(NH4)8[Ce2(SO4)8] .4H2O". Acta Crystallographica Section C Crystal Structure Communications 54 (12): 1744–1745. doi:10.1107/S0108270198007057. பன்னாட்டுத் தர தொடர் எண்:0108-2701.