வெள்ளி சயனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி சயனேட்டு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
வெள்ளி(I) சயனேட்டு
இனங்காட்டிகள்
3315-16-0 Yes check.svgY
ChemSpider 69282
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 76827
பண்புகள்
AgOCN
வாய்ப்பாட்டு எடை 149.885 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வெள்ளி சயனேட்டு (Silver cyanate) என்பது AgOCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளி தனிமத்தின் சயனேட்டு உப்பான இச்சேர்மத்தை, பொட்டாசியம் சயனேட்டு அல்லது யூரியாவுடன் வெள்ளி நைட்ரேட்டு உப்பைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கிறார்கள்[1]

AgNO3 + KOCN ---> AgOCN + KNO3
AgNO3 + H2NC(O){-}NH2 ----> AgOCN + NH4NO3

இலேசான மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலிருந்து சாம்பல் நிறமாக வெள்ளி சயனேட்டு காணப்படுகிறது. P21/m என்ற இடக்குழுவுடன் a = 547.3 பைக்கோ மீட்டர், b = 637.2 பைக்கோ மீட்டர் c = 341.6 பைக்கோ மீட்டர் மற்றும் β = 91° என்ற அளபுருக்களுடன் ஒற்றைச் சாய்வு படிக வடிவத்தில் இச்சேர்மம் படிகமாகிறது[2].நைட்ரிக் அமிலத்துடன் வெள்ளி சயனேட்டு வினை புரிந்து அமோனியம் நைட்ரேட்டு மற்றும் கார்பன் டை ஆக்சைடு முதலிய சேர்மங்கள் உருவாகின்றன[3]

AgOCN + 2HNO3 + H2O
AgNO3 + CO2+NH4NO3.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_சயனேட்டு&oldid=2052175" இருந்து மீள்விக்கப்பட்டது