போரான் நைட்ரைடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
போரான் நைட்ரைடு
| |
இனங்காட்டிகள் | |
10043-11-5 | |
ChEBI | CHEBI:50883 |
ChemSpider | 59612 |
EC number | 233-136-6 |
Gmelin Reference
|
216 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | Elbor |
பப்கெம் | 66227 |
வே.ந.வி.ப எண் | ED7800000 |
| |
பண்புகள் | |
BN | |
வாய்ப்பாட்டு எடை | 24.82 g·mol−1 |
தோற்றம் | வண்ணமற்றப் படிகங்கள் |
அடர்த்தி | 2.1 (hBN); 3.45 (cBN) கி/செ.மீ3 |
உருகுநிலை | 2,973 °C (5,383 °F; 3,246 K) sublimates (cBN) |
கரையாதது | |
எதிர்மின்னி நகாமை | 200 செ.மீ2/(V·s) (cBN) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.8 (hBN); 2.1 (cBN) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுங்கோணம், sphalerite, wurtzite |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-250.91 கிஜூ /மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
14.77 ஜூ /மோல் |
வெப்பக் கொண்மை, C | 19.7 ஜூ /மோல் |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Xi |
R-சொற்றொடர்கள் | R36/37 |
S-சொற்றொடர்கள் | S26, S36 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
போரான் நைட்ரைடு (Boron nitride) என்பது BN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். போரான் மற்றும் நைட்ரசன் அணுக்கள் சம எண்ணிகையில் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. போரான் நைட்டிரைடு கனசதுர, அறுகோணப்பட்டக வடிவங்களைக் கொண்டிருந்தாலும், அறுகோணப்பட்டக வடிவ போரான் நைட்டிரைடு (h-BN) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
அறுகோண வடிவமுடைய போரான் நைட்ரைடு கிராஃபைட்டை ஒத்த அமைப்புடையது. இது போரான் நைட்ரைடு பல்லுருக்களிலேயே மிகவும் நிலைத்த, மிருதுவான அமைப்புடையது, மேலும் இது உயவுப்பொருளாகவும், நறுமணப் பொருட்களில் பதனச்சரக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. வைரத்தை ஒத்த வடிவமுடைய போரான் நைட்ரைடு கனச்சதுர வடிவமுடைய போரான் நைட்ரைடு (c-BN) எனப்படுகிறது. இது கடினத் தன்மையில் வைரத்தை விடக்குறைவாகவும், வெப்ப, வேதி நிலைத்தன்மையில் வைரத்தை விட அதிகமான நிலைத்தன்மையையும் உடையது. மிகவும் அரிதான வடிவமான உருசைட்டு போரான் நைட்ரைடு கனச்சதுர வடிவ போரான் நைட்ரைடை விட அதிக கடினத்தன்மை உடையது. இது அறுங்கோண (lonsdaleite-ஒத்த) வடிவமுடையது.
B-க்கும் N-க்குமான பிணைப்பு அயனிப்பண்பு உடையது, ஆகையால் மேலடுக்கில் உள்ள B-அணு கீழடுக்கில் உள்ள N-அணுவுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும். கிராப்ஃபைட்டும் போரான் நைட்டிரைடும் ஒத்த எதிர்மின்னிய அமைப்பை கொண்டிருந்தாலும், கிராஃபைட்டு கருப்பு நிறமுடையது, சிறந்த மின்கடத்தும் பண்பு கொண்டது. இது நன்கடத்தியாகவோ அல்லது குறைக்கடத்தியாகவோ அறியப்படுகிறது. மாறாக, போரான் நைட்டிரைடு வெள்ளை நிறமுடையது, மின்கடத்தாப் பண்பை கொண்டுள்ளது. ஆனாலும், சிறந்த வெப்பக்கடத்தியாக உள்ளது. மேலும், வேதி நிலைத்தன்மை/மந்தத்தன்மை, எந்திர வலிமை/கடினத்தன்மை, அரிமான எதிர்ப்புத்தன்மை ஆகிய பண்புகளையும் கொண்டுள்ளது. இதனால் இதனை உயவுப்பொருளாக, மேற்பூச்சுப் பொருளாக, மின் காப்பியாக, மின்மக்கசிவுத் தடுப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது.