கால்சியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் நைட்ரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கல்சியம் நைட்ரைடு
வேறு பெயர்கள்
முக்கால்சியம் இருநைட்ரைடு
இனங்காட்டிகள்
12013-82-0 Y
EC number 234-592-9
பப்கெம் 3387080
பண்புகள்
Ca3N2
வாய்ப்பாட்டு எடை 148.25 g·mol−1
தோற்றம் செம்பழுப்பு படிகத் திண்மம்
அடர்த்தி 2.670 கி/செ.மீ3
2.63 கி/செ.மீ3 (17 °செ)
உருகுநிலை 1,195 °C (2,183 °F; 1,468 K)
சிதைவடைகிறது.
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cI80
புறவெளித் தொகுதி Ia-3, எண். 206
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

கால்சியம் நைட்ரைடு (Calcium nitride) என்பது Ca3N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். பல்வேறு வடிவங்களில் (சமவளவு) காணப்பட்டாலும் α- கால்சியம் நைட்ரைடு பொதுவாகக் கிடைக்கிறது.

அமைப்பு[தொகு]

α-கால்சியம் நைட்ரைடு, மாங்கனீசு இரும்பு ஆக்சைடு கனிமமான பிக்சுபைட்டு கனிமத்தின் எதிர் வடிவமைப்பை ஏற்றுள்ளது. Mn2O3 சேர்மத்தின் அமைப்பைப் போல ஆனால் அயனிகளின் இருப்பிடங்கள் அதனிலிருந்து மாறுபட்டு தலைகீழாக அமைந்திருக்கும். கால்சியம் (Ca2+) அயனிகள் ஆக்சைடின் (O2−) இடத்திலும் நைட்ரைடு (N3−) அயனிகள் மாங்கனீசு அயனிகளின் (Mn3+) இருப்பிடத்திலும் மாறுபட்டுக் காணப்படுகின்றன. இவ்வமைப்பில் Ca2+ நான்முகத் தளங்களிலும் நைட்ரைடு மையங்கள் இரண்டு வேறுபட்ட எண்முக தளங்களிலும் ஆக்ரமித்துள்ளன[1]

தயாரிப்பு மற்றும் வினைகள்[தொகு]

கால்சியம் காற்றில் எரியும்போது உருவாகும் கால்சியம் ஆக்சைடுடன் சேர்ந்து கால்சியம் நைட்ரைடு உருவாகிறது. மற்றும் பகுதிப்பொருட்கள் நேரடியாக வினைபுரியும் போதும் கால்சியம் நைட்ரைடு உருவாகிறது.[2]

3 Ca + N2 → Ca3N2

கால்சியம் நைட்ரைடு தண்ணீருடன் வினைபுரிந்து அல்லது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அமோனியா மற்றும் கால்சியம் ஐதராக்சைடு சேர்மங்களைக் கொடுக்கிறது.:[3]

Ca3N2 + 6 H2O → 3 Ca(OH)2 + 2 NH3

சோடியம் ஆக்சைடு போலவே கால்சியம் நைட்ரைடும் 350 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் ஐதரசனை ஈர்த்துக் கொள்கிறது.

Ca3N2 + 2 H2 → 2 CaNH + CaH2

மேற்கோள்கள்[தொகு]

  1. Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. ISBN 0-19-855370-6.
  2. P. Ehrlich “Calcium, Strontium, Barium Nitrides Ca3N2, Sr3N2, Ba3N2” in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 940-1.
  3. Heyns, A. (1998). "The Vibrational Spectra and Decomposition of α-Calcium Nitride (α-Ca3N2) and Magnesium Nitride (Mg3N2)". Journal of Solid State Chemistry 137 (1): 33–41. doi:10.1006/jssc.1997.7672. Bibcode: 1998JSSCh.137...33H. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_நைட்ரைடு&oldid=2696580" இலிருந்து மீள்விக்கப்பட்டது