இசுட்ரோன்சியம் சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுட்ரோன்சியம் சல்பைடு[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
இசுட்ரோன்சியம் மோனோசல்பைடு
C.I. 77847
இனங்காட்டிகள்
1314-96-1 Y
InChI
  • InChI=1S/S.Sr
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14820
SMILES
  • S=[Sr]
பண்புகள்
SrS
வாய்ப்பாட்டு எடை 119.68 கி/மோல்
தோற்றம் சாம்பல் தூள்
மணம் ஐதரசன் சல்பைடு
அடர்த்தி 3.70 g/cm3
உருகுநிலை 2,002 °C (3,636 °F; 2,275 K)
சிறிதளவு கரையும்
அமிலங்கள்-இல் கரைதிறன் சிதைவடைகிறது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.107
கட்டமைப்பு
படிக அமைப்பு ஆலைட்டு (கனசதுரம்), cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (Sr2+); எண்முகம் (S2−)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இசுட்ரோன்சியம் ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் சல்பைடு
கால்சியம் சல்பைடு
பேரியம் சல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

இசுட்ரோன்சியம் சல்பைடு (Strontium sulphide) என்பது SrS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம், இசுட்ரோன்சியத்தின் முக்கியத் தாதுப் பொருளான செலசுடைட் தயாரிக்கும் போது இடைநிலைப் பொருளாகத் தோன்றுகிறது. செலசுடைட் தாது உபயோகமுள்ள பல சேர்மங்களைத் தயாரிக்க உதவுகிறது[2].

தயாரிப்பு மற்றும் வினைகள்[தொகு]

இசுட்ரோன்சியம் சல்பேட்டை 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தி ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக இசுட்ரோன்சியம் சல்பைடு தயாரிக்கப்படுகிறது.

SrSO4 + 2 C → SrS + 2 CO2

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300,000 டன்[2] இசுட்ரோன்சியம் சல்பைடு இம்முறையிலேயே தயாரிக்கப்படுகிறது. ஒளிரும் சல்பைடு மற்றும் ஒளிரா சல்பைடு என்ற இரண்டு நிலை சல்பைடுகளும் அறியப்படுகின்றன. மாசுக்கள், குறைபாடுகள் மற்றும் கலக்கப்படும் பொருட்கள் முதலியன் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன[3]

காரமண் உலோகமான இத்தனிமத்தின் சல்பைடு உப்பு நீருடன் விரைவாகச் சேர்ந்து நீராற்பகுப்பு அடைகிறது.

SrS + 2 H2O → Sr(OH)2 + H2S

இக்காரணத்தினால், இசுட்ரோன்சியம் சல்பைடு உப்பு மாதிரிகள் அழுகிய முட்டையின் மணம் கொண்டுள்ளன. இதே தயாரிப்பு முறையில் இசுட்ரோன்சியத்தின் வணிகமுக்கியத்துவம் கொண்ட உப்பான இசுட்ரோன்சியம் கார்பனேட்டும் மற்றும் பல உப்புகளும் தயாரிக்கப்படுகின்றனref name=Ullmann/>

SrS + H2O + CO2 → SrCO3 + H2S

இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு உப்பும் இதே முறையில் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Strontium sulfide, cameochemicals.noaa.gov
  2. 2.0 2.1 J. Paul MacMillan, Jai Won Park, Rolf Gerstenberg, Heinz Wagner, Karl Köhler, Peter Wallbrecht “Strontium and Strontium Compounds” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a25_321.
  3. R. Ward, R. K. Osterheld, R. D. Rosenstein "Strontium Sulfide and Selenide Phosphors" Inorganic Syntheses, 1950, vol. III, pp. 11–24. எஆசு:10.1002/9780470132340.ch4
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்ரோன்சியம்_சல்பைடு&oldid=3361884" இலிருந்து மீள்விக்கப்பட்டது