கால்சியம் புரோமைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் புரோமைடு
| |
வேறு பெயர்கள்
கால்சியம் இருபுரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
7789-41-5 22208-73-7 (dihydrate) | |
ChEBI | CHEBI:31338 |
ChemSpider | 23010 |
EC number | 232-164-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24608 |
வே.ந.வி.ப எண் | EV9328000 |
| |
UNII | 87CNY2EEBH |
பண்புகள் | |
CaBr2 | |
வாய்ப்பாட்டு எடை | 199.89 கி/மோல் (நீரிலி) 235.98 கி/மோல் (இருஐதரேட்டு) |
தோற்றம் | மணமற்றது, தீவிர நீருறிஞ்சி நிறமற்ற படிகங்கள் கூர்மையான உவர்ப்புச் சுவை |
அடர்த்தி | 3.353 கி/செ.மீ3 |
உருகுநிலை | 730 °C (1,350 °F; 1,000 K) |
கொதிநிலை | 1,935 °C (3,515 °F; 2,208 K) (நீரிலி) 810 °செ (இருஐதரேட்டு) |
125 கி/100 மி.லி (0 °செ) 143 கி/100 மி.லி (20 °செ) 312 கி/100 மி.லி (100 °செ) | |
ஆல்ககால், அசிட்டோன்-இல் கரைதிறன் | கரையும் |
காடித்தன்மை எண் (pKa) | 9 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செவ்விணைவகம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-647.9 கி.ஜூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
130 ஜூ/மோல் K |
வெப்பக் கொண்மை, C | 75 ஜு/மோல் K |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | வெப்பப்படுத்தும் போது சிதைவடைகிறது. நச்சுப் புகை வெளியிடுகிறது. |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
4100 mg/kg (rat, oral) 1580 mg/kg (mouse, subcutaneous) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கால்சியம் புளோரைடு கால்சியம் குளோரைடு கால்சியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் புரோமைடு மக்னீசியம் புரோமைடு இசுட்ரான்சியம் புரோமைடு பேரியம் புரோமைடு ரேடியம் புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கால்சியம் புரோமைடு (Calcium bromide) என்பது CaBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். ஐதரோபுரோமிக் அமிலத்தினுடைய கால்சியம் உப்பான இது வெண்மை நிறத்தூளாகக் காணப்படுகிறது. தண்ணீருடன் வினைபுரிந்து இது அறுஐதரேட்டைக் கொடுக்கிறது. துளையிடும் பாய்மமாகப் பயன்படுவதே இச்சேர்மத்தின் முதன்மையான பயன்பாடாகும்.
தயாரிப்பு, அமைப்பு மற்றும் வினைகள்
[தொகு]கால்சியம் ஆக்சைடு, கால்சியம் கார்பனேட்டு முதலிய சேர்மங்கள் ஐதரோ புரோமிக் அமிலத்துடன் வினைபுரிவதால் கால்சியம் புரோமைடு உருவாகிறது. தனிமநிலை கால்சியத்தை தனிமநிலை புரோமினுடன்[1] சேர்த்தும் இதைத் தயாரிக்க முடியும். எண்முக கால்சியம் மையத்துடன் ஆறு புரோமைடு எதிரயனிகள் பிணைந்துள்ள ரூட்டைல் என்ற கனிமத்தின் வடிவமைப்பை இச்சேர்மம் ஏற்றுள்ளது. இதிலுள்ள புரோமைடு அயனிகள் மற்ற கால்சியம் மையங்களுடனும் இணைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
காற்றில் வலிமையாகச் சூடாக்கும்போது கால்சியம் புரோமைடு, கால்சியம் ஆக்சைடு மற்றும் புரோமின் ஆகியனவற்றைத் தருகிறது.
- 2 CaBr2 + O2 → 2 CaO + 2 Br2
காற்று, இவ்வினையில் புரோமைடை புரோமினாக ஆக்சிசனேற்றம் செய்கிறது.
பயன்கள்
[தொகு]அடர்ந்த நீர்மக்கரைசலான இச்சேர்மம் துளையிடும் பாய்மமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது மேலோட்டமான உளவியல் நோய்களுக்கான மருந்து மருத்துவத்திலும், உறை கலவையாகவும், உணவு பாதுகாப்புப் பொருளாகவும் , புகைப்படக்கலை மற்றும் தீத்தடுப்பானாகவும்[2] பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Michael J. Dagani, Henry J. Barda, Theodore J. Benya, David C. Sanders “Bromine Compounds” Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a04_405
- ↑ "Chemical Land 21". பார்க்கப்பட்ட நாள் 25 December 2008.
வெளி இணைப்புகள்
[தொகு]- Calcium bromide at WebElements
- MSDS பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்