பெரிலியம் அயோடைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் அயோடைடு | |
இனங்காட்டிகள் | |
7787-53-3 ![]() | |
ChemSpider | 74209 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82231 |
SMILES
| |
பண்புகள் | |
BeI2 | |
வாய்ப்பாட்டு எடை | 262.821 g/mol |
தோற்றம் | நிறமற்ற ஊசிவடிவ படிகங்கள் |
அடர்த்தி | 4.325 g/cm³ |
உருகுநிலை | 480 °C (896 °F; 753 K) |
கொதிநிலை | 590 °C (1,094 °F; 863 K) |
reacts explosively[1][சான்று தேவை] | |
கரைதிறன் | CS2 இதில் சிறிதளவு கரையும் எத்தனால், இருஈத்தைல் ஈதர் இவற்றில் நன்கு கரையும்.[2] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | orthorhombic |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-192.62 kJ/mol |
Std enthalpy of combustion ΔcH |
19 kJ/mol |
நியம மோலார் எந்திரோப்பி S |
130 J/mol K |
வெப்பக் கொண்மை, C | 71.14 J/(mol × K) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | see Berylliosis |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
பெரிலியம் அயோடைடு (Beryllium iodide) என்பது BeI2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது நீரை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டது. நீருடன் அதிதீவிரமாக வினைபுரிந்து ஐதரயோடிக் அமிலத்தைத் தருகிறது.
தயாரிப்பும் வேதிவினைகளும்[தொகு]
பெரிலியம் உலோகம் தனிம புரோமினுடன் 500 பாகை செல்சியசு முதல் 700 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் பெரிலியம் அயோடைடு கிடைக்கிறது.
பெரிலியம் கார்பைடை ஐதரயோடிக்கமிலத்துடன் சேர்த்து வினைபுரிய வைப்பதாலும் பெரிலியம் அயோடைடு தயாரிக்கலாம்.
பெரிலியம் அயோடைடில் உள்ள அயோடின் மற்ற ஆலசன்களால் எளிதாக இடமாற்றம் செய்யப்படுகிறது. இது புளோரினுடன் வினைபுரிந்து பெரிலியம் புளோரைடு மற்றும் அயோடினின் புளோரைடுகளைத் தருகிறது. மேலும் இது குளோரினுடன் வினைபுரிந்து பெரிலியம் குளோரைடையும் புரோமினுடன் வினைபுரிந்து பெரிலியம் புரோமைடையும் உண்டாக்குகிறது. குளோரேட்டு மற்றும் பெர்மாங்கனேட்டு போன்ற ஆக்சிசனேற்ற முகவர்களுடன் மிகத்தீவிரமாக வினைபுரிந்து அயோடினின் கருஞ்சிவப்பு நிற ஆவியைக் கொடுக்கிறது. திட மற்றும் வாயுரூப பெரிலியம் அயோடைடு காற்றில் எரியும் தன்மை கொண்டவையாகும் [2].
பயன்கள்[தொகு]
பெரிலியம் அயோடைடை சூடான தங்குதன் இழையின் மேல் செலுத்தி அதை சிதைவடையச் செய்து மீத்தூய்மை கொண்ட பெரிலியம் தயாரிக்கலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;hand
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 2.0 2.1 Parsons, Charles Lathrop (1909), The Chemistry and Literature of Beryllium, Easton, Pa.: Chemical Publishing, pp. 22–23, 2007-12-10 அன்று பார்க்கப்பட்டது