உள்ளடக்கத்துக்குச் செல்

சிர்க்கோனியம்(IV) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்க்கோனியம்(IV) அயோடைடு
Zirconium(IV) iodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம் நான்கையோடைடு
இனங்காட்டிகள்
13986-26-0 N
ChemSpider 75903 Y
InChI
 • InChI=1S/4HI.Zr/h4*1H;/q;;;;+4/p-4 Y
  Key: XLMQAUWIRARSJG-UHFFFAOYSA-J Y
 • InChI=1/4HI.Zr/h4*1H;/q;;;;+4/p-4
  Key: XLMQAUWIRARSJG-XBHQNQODAZ
யேமல் -3D படிமங்கள் Image
 • [Zr+4].[I-].[I-].[I-].[I-]
பண்புகள்
ZrI4
வாய்ப்பாட்டு எடை 598.842 கி/மோல்
தோற்றம் ஆரஞ்சு-மஞ்சள் படிகம்
நீருறிஞ்சும்
அடர்த்தி 4.914 கி/செ.மீ3
உருகுநிலை 499 °C (930 °F; 772 K)
(triple point)
கொதிநிலை 431 °C (808 °F; 704 K) (பதங்கமாகிறது)
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு, mP30
புறவெளித் தொகுதி P2/c, No. 13
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சிர்க்கோனியம்(IV) புளோரைடு(IV)
சிர்க்கோனியம்(IV) குளோரைடு
சிர்க்கோனியம்(IV) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தைட்டானியம் நான்கையோடைடு
ஆஃபினியம் நான்கயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

சிர்க்கோனியம்(IV) அயோடைடு (Zirconium(IV) iodide) என்பது ZrI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் தண்ணீர் முன்னிலையில் சிதைவடைகிறது. மிக எளிதாக கிடைக்கக்கூடிய இவ்வுப்பு முற்காலத்தில் சிர்க்கோனியம் உலோகத்தை தூய்மைப்படுத்தும் போது இடைவிளைபொருளாக இருந்தது.

அமைப்பு

[தொகு]

ஈரிணை உலோக ஆலைடுகள் போலவே சிர்க்கோனியம்(IV) அயோடைடும் பல்லுறுப்பி அமைப்பை ஏற்றுள்ளது. Zr(IV) மையங்களில் ஒவ்வொரு மையமும் ஒரிணை விளிம்புநிலை அயோடைடு ஈனிகள் மற்றும் நான்கு இரட்டைப்பால அயோடைடு ஈனிகளையும் கொண்டிருக்கின்றன என்று எக்சு-கதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விளிம்புநிலை Zr-I பிணைப்பின் இடைவெளி அளவு 2.692 மற்றும் 3.030 Å ஆகும்.[1][2]

தொகுப்பு மற்றும் வினைகள்

[தொகு]

எளிதில் ஆவியாகும் இச்சேர்மம் முழுமையான நான்முக ZrI4 மூலக்கூறுகளாகப் பதங்கமாகிறது. தூளாக்கப்பட்ட சிர்க்கோனியம் உலோகத்துடன் அயோடின் நேரடியாக வினைபுரிவதன் மூலம் சிர்க்கோனியம்(IV) அயோடைடைத் தயாரிக்கலாம்.[3]

சூடான கம்பியுடன் தொடர்பு ஏற்படும்போது சிர்கோனியம் (IV) அயோடைடு வெப்பச் சிதைவு அடைந்து தூய்மையான நீட்சியடையும் சிர்கோனியம் தயாரிப்பது முதலாவது தொழிற்சாலை முறை வணிக ரீதியான உற்பத்தியாக விளங்கியது. இந்தப் படிகச் சட்ட செயல்முறை 1925 ஆம் ஆண்டு அன்டன் எடுவார்டு வான் ஆர்கெல் மற்றும் யான் எண்டிரிக் டி போயர் ஆகியோரால் கண்டறியப்பட்டது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
 1. B. Krebs, G. Henkel und M. Dartmann "Kristallstruktur von Zirkoniumtetrajodid ZrI4: ein neuer AB4-strukturtyp" Acta Cryst. 1979, volume B35, pp. 274-278. எஆசு:10.1107/S0567740879003344
 2. Troyanov, S.I. "Crystal structure of gamma-ZrI4" Kristallografiya, 1986, volume 31, p446-449.
 3. Eberly, K. C. "Zirconium (IV) Iodide" Inorganic Syntheses McGraw-Hill: New York, 1963; Vol. 7, pages 52-54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88275-165-4.
 4. van Arkel, A. E.; de Boer, J. H. (1925). "Darstellung von reinem Titanium-, Zirkonium-, Hafnium- und Thoriummetall" (in German). Zeitschrift für anorganische und allgemeine Chemie 148 (1): 345–350. doi:10.1002/zaac.19251480133. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்க்கோனியம்(IV)_அயோடைடு&oldid=3384767" இலிருந்து மீள்விக்கப்பட்டது