உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு
Potassium hexafluorozirconate
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருபொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு, பொட்டாசியம் சிக்கோனியம் அறுபுளோரைடு, பொட்டாசியம் புளோரோசிர்க்கோனேட்டு
இனங்காட்டிகள்
16923-95-8 Y
ChemSpider 11221760
EC number 240-985-6
InChI
  • InChI=1S/6FH.2K.Zr/h6*1H;;;/q;;;;;;2*+1;+4/p-6
    Key: BJZIJOLEWHWTJO-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 56828182
  • F[Zr-2](F)(F)(F)(F)F.[K+].[K+]
பண்புகள்
F6K2Zr
வாய்ப்பாட்டு எடை 283.41 g·mol−1
தோற்றம் வெண்மையான படிகத் தூள்
அடர்த்தி 3.48 கி/செ.மீ3
கரையும்
தீங்குகள்
GHS labelling:
The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
அபாயம்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு (Potassium hexafluorozirconate) என்பது K2ZrF6 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம், புளோரின், சிர்க்கோனியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

தனிமங்களின் கரைசல்களிலிருந்து பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு வீழ்படிவாக்கப்படுகிறது.

2KF + ZrF4 -> K2ZrF6
2KCl + (NH4)2ZrF6 -> K2ZrF6↓ + 2NH4Cl}}

மேலும், தொழில்துறையில், 600–700°செல்சியசு வெப்பநிலையில் பொட்டாசியம் அறுபுளோரோசிலிக்கேட்டுடன் செறிவூட்டப்பட்ட சிர்கோனியம் தாதுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்கலாம்.[1]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு மணமற்ற வெள்ளை படிகத் தூளாக உருவாகிறது.

C 2/c (எண்.15) என்ற இடக்குழுவில் ஒற்றைச்சரிவச்சு படிகக் கட்டமைப்பில் பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு படிகமாகிறது.[2]

பயன்கள்

[தொகு]

உலோக சிர்கோனியத்தின் மின்னாற்பகுப்பு முறை உற்பத்தியில் பொட்டாசியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டு ஓர் இடைநிலைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

தீத்தடுப்பானாகவும்,[3] மக்னீசியம் மற்றும் அலுமினிய கலப்புலோகங்களில் சுத்திகரிப்பானாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lewis, Alison; Olsen, Christine (2007). BIWIC 2007: 14th International Workshop on Industrial Crystallization : September 9th-11th, 2007, University of Cape Town, Cape Town, South Africa (in ஆங்கிலம்). IOS Press. p. 186. ISBN 978-1-58603-790-1. Retrieved 26 February 2024.
  2. Hoppe, R.; Mehlhorn, B. (September 1976). "Die Kristallstruktur von K 2 ZrF 6". Zeitschrift für anorganische und allgemeine Chemie 425 (3): 200–208. doi:10.1002/zaac.19764250303. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19764250303. பார்த்த நாள்: 26 February 2024. 
  3. Lewis, David M.; Rippon, John A. (20 May 2013). The Coloration of Wool and Other Keratin Fibres (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 115. ISBN 978-1-118-62509-5. Retrieved 26 February 2024.
  4. "Potassium hexafluorozirconate | CAS 16923-95-8 | Connect Chemicals". connectchemicals.com. Retrieved 26 February 2024.