புளுட்டோனியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளுட்டோனியம்(III) புளோரைடு
புளுட்டோனியம்(III) புளோரைடு அலகு கூட்டின் பந்து குச்சி வடிவம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம்(III) புளோரைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம்(3+) புளோரைடு
வேறு பெயர்கள்
புளுட்டோனிக் புளோரைடு
புளுட்டோனியம்(III) புளோரைடு
புளுட்டோனியம் டிரைபுளோரைடு
இனங்காட்டிகள்
13842-83-6 Y
ChemSpider 123138 Y
InChI
  • InChI=1S/3FH.Pu/h3*1H;/q;;;+3/p-3 Y
    Key: DBYIUAMLRDFZJJ-UHFFFAOYSA-K Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139624
  • [F-].[F-].[F-].[Pu+3]
பண்புகள்
F3Pu
வாய்ப்பாட்டு எடை 301.00 g·mol−1
தோற்றம் ஊதா நிற ஒளிபுகா படிகங்கள்
அடர்த்தி 9.3 கி செ.மீ−3
உருகுநிலை 1,396 °C (2,545 °F; 1,669 K)[2]
கொதிநிலை 2,000 °C (3,630 °F; 2,270 K) (சிதைவடையும்)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புளுட்டோனியம் (III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சமாரியம்(III) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புளுட்டோனியம்(III) புளோரைடு (Plutonium(III) fluoride) என்பது PuF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் புளோரினும் சேர்ந்து ஊதா நிறப் படிகங்களாக இவ்வுப்பு உருவாகிறது. புளுட்டோனியம் அணுக்களைச் சுற்றிலும் சிக்கலான ஒருங்கிணைப்பு கொண்ட மூவுச்சி முக்கோணப் பட்டகக் கட்டமைப்பான இலந்தனம் புளோரைடின் கட்டமைப்பை புளுட்டோனியம்(III) புளோரைடு ஏற்றுள்ளது.[3]

வினைகள்[தொகு]

அணு மறுசெயலாக்க ஆலையில் புளுட்டோனியத்தை கரைசலில் இருந்து மீட்டெடுப்பதற்கான வழக்கமான புளுட்டோனியம் பெராக்சைடு முறைக்கு மாற்றாக புளுட்டோனியம்(III) புளோரைடு வீழ்படிவாக்கல் முறை ஆய்வு செய்யப்பட்டது.[4] இம்முறை பாரம்பரிய முறையை விட குறைவான பயனுள்ள மீட்பு முறை என்று அமெரிக்காவிலுள்ள இலாசு அலமோசு தேசிய ஆய்வகத்தின் 1957 ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது.[5] அதே நேரத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல் அமெரிக்க அலுவலகம் நல்கை வழங்கிய ஒரு சமீபத்திய ஆய்வு இம்முறை மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்று எனக் கண்டறிந்தது.[6]

உலோக புளுட்டோனியத்தை கையாள்வது மிகவும் கடினம் என்பதனால் அதற்குப் பதிலாக புளுட்டோனியம்-காலியம் கலப்புலோகம் தயாரிக்க புளுட்டோனியம்(III) புளோரைடு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chemistry: Periodic Table: Plutonium: compound data (plutonium (III) fluoride), WebElements, பார்க்கப்பட்ட நாள் 2008-06-20[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, p. 113, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2, பார்க்கப்பட்ட நாள் 2008-06-20
  3. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
  4. Gupta, C. K.; Mukherjee, T. K. (1990), Hydrometallurgy in Extraction Processes, vol. 2, CRC Press, pp. 206–208, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-6805-7, இணையக் கணினி நூலக மைய எண் 21197603, பார்க்கப்பட்ட நாள் 2008-06-20
  5. Winchester, R. S. (1957), Aqueous Decontamination of Plutonium from Fission Product Elements (PDF), Los Alamos, NM: Los Alamos Scientific Laboratory of the University of California (published 1958), pp. 9–10, பார்க்கப்பட்ட நாள் 2008-06-20
  6. Martella, L. L.; Saba, M. T.; Campbell, G. K. (1984), Laboratory-scale evaluations of alternative plutonium precipitation methods, United States Office of Scientific and Technical Information, OSTI 5318991