மாங்கனீசு(III) புளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(III) புளோரைடு
| |
வேறு பெயர்கள்
மாங்கனீசு முப்புளோரைடு, மாங்கனீசு புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
7783-53-1 | |
ChemSpider | 74193 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82213 |
வே.ந.வி.ப எண் | OP0882600 |
| |
பண்புகள் | |
MnF3 | |
வாய்ப்பாட்டு எடை | 111.938 கி/மோல் |
தோற்றம் | செவ்வூதா-இளஞ்சிவப்பு பொடி நீர் உறிஞ்சும் தன்மை உடையது |
அடர்த்தி | 3.54 கி/செமீ3 |
உருகுநிலை | > 600 °C (1,112 °F; 873 K) (சிதைவுறுகிறது) |
நீராற்பகுப்பு | |
+10,500·10−6 செமீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு, mS48 |
புறவெளித் தொகுதி | C2/c, No. 15 |
ஒருங்கிணைவு வடிவியல் |
வடிவஞ்சிதைந்த எண்முகி |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சுத்தன்மையுள்ள புகை |
R-சொற்றொடர்கள் | 8-20/21/22-36/37/38 |
S-சொற்றொடர்கள் | 17-26-36/37/39 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | மாங்கனீசு(III) ஆக்சைடு, மாங்கனீசு(III) அசிட்டேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | குரோமியம்(III) புளோரைடு, இரும்பு(III) புளோரைடு. கோபால்ட்டு(III) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாங்கனீசு(III) புளோரைடு (Manganese(III) fluoride also known as Manganese trifluoride) MnF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இந்த சிவப்பு நிற/கருஞ்சிவப்பு நிறத் திண்மம் நீரகக்கரிமங்களை புளோரோகார்பன்களாக மாற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, அதாவது, இது ஒரு புளோரினேற்றக் காரணியாக உள்ளது[1] இச்சேர்மம் ஐதரேட்டையும் உருவாக்குகிறது.
தொகுப்புமுறை, அமைப்பு மற்றும் வினைகள்
[தொகு]தொகுப்பு
[தொகு]MnF3 ஆனது ஐதரசன் புளோரைடில் கரைந்த MnF2 கரைசலுடன் புளோரினை வினைப்படுத்துவதால் தயாரிக்கப்படுகிறது:[2]
- MnF2 + 0.5 F2 → MnF3
இச்சேர்மமானது தனிம நிலை புளோரினுடன் மாங்கனீசு(II) ஆலைடை ~250 °செ வெப்பநிலையில் வினைப்படுத்துவதன் மூலமும் தயாரிக்கப்படுகிறது.[3]
அமைப்பு
[தொகு]படிக நிலையில், MnF3 யானது வனேடியம்(III) புளோரைடை ஒத்திருக்கிறது. இரண்டு சேர்மங்களின் எண்முகி உலோக மையங்கள் ஒரே மாதிரியான சராசரி M-F பிணைப்பு நீளங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், ஜான் டெல்லர் விளைவின் காரணமாக மாங்கனீசு சேர்மத்தைப் பொறுத்தவரை, ஒரு உருக்குலைந்த அமைப்பாகத் தான் (மேலும், இறுதியில் ஒற்றைச்சாய்வுள்ள ஓரலகு படிகம் மற்றும் உயர் ஒருங்கமைவுள்ள மற்றொரு வடிவம்) உள்ளது. Mn-F பிணைப்பு நீளங்கள் 1.79, 1.91, 2.09 Å என்ற அளவில் உள்ளன [4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Burley, G. A.; Taylor, R. "Manganese(III) fluoride" in Encyclopedia of Reagents for Organic Synthesis (Ed: L. Paquette) 2004, J. Wiley & Sons, New York. எஆசு:10.1002/047084289
- ↑ Z. Mazej (2002). "Room temperature syntheses of MnF3, MnF4 and hexafluoromanganete(IV) salts of alkali cations". Journal of Fluorine Chemistry 114 (1): 75–80. doi:10.1016/S0022-1139(01)00566-8.
- ↑ Inorganic chemistry, Catherine E. Housecroft, A.G. Sharpe, pp.711-712, section Manganese (III) , googlebooks link
- ↑ Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
- ↑ Hepworth, M. A.; Jack, K. H.; Nyholm, R. S. (1957). "Interatomic Bonding in Manganese Trifluoride". Nature 179 (4552): 211–212. doi:10.1038/179211b0.
- ↑ M. A. Hepworth; K. H. Jack (1957). "The crystal structure of manganese trifluoride, MnF3". Acta Crystallographica 10 (5): 345–351. doi:10.1107/S0365110X57001024.