ஆர்சனிக் ஐம்புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்சனிக் ஐம்புளோரைடு
Structural formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆர்சனிக் பென்டாபுளோரைடு
வேறு பெயர்கள்
ஆர்சனிக்(V) புளோரைடு,
ஐம்புளோரோ ஆர்சோரேன்
இனங்காட்டிகள்
7784-36-3 Yes check.svgY
ChEBI CHEBI:30530 Yes check.svgY
ChemSpider 74203 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82223
பண்புகள்
AsF5
வாய்ப்பாட்டு எடை 169.9136 கி மோல்−1
தோற்றம் நிறமற்ற வாயு
அடர்த்தி 2.138 g cm−3[1]
உருகுநிலை
கொதிநிலை -52.8 ˚C[1]
கரைதிறன் எத்தனால், இருமெத்தில் ஈதர், பென்சீன் ஆகியவற்றில் கரையும்.
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Toxic (T)
சூழலுக்கு அபாயமானவை (N)
R-சொற்றொடர்கள் R23/25, R50/53
S-சொற்றொடர்கள் (S1/2), S20/21, S28, S45, S60, S61
தொடர்புடைய சேர்மங்கள்
group 5 புளோரைடுகள்
தொடர்புடையவை
பாசுபரசு ஐம்புளோரைடு
ஆண்டிமனி ஐம்புளோரைடு
பிசுமத் ஐம்புளோரைடு
தொடர்புடைய சேர்மங்கள் ஆர்சனிக் ஐங்குளோரைடு
ஆர்சனிக் முப்புளோரைடு
ஆர்சனிக் ஐந்தாக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆர்சனிக் ஐம்புளோரைடு (Arsenic pentafluoride) என்பது AsF5 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக் மற்றும் புளோரின் தனிமங்கள் இணைந்து இச்சேர்மம் உண்டாகிறது. ஆர்சனிக் ஐம்புளோரைடில் +5. ஆக்சிசனேற்ற நிலையில் ஆர்சனிக் காணப்படுகிறது,

தயாரிப்பு[தொகு]

நேரடியாக ஆர்சனிக்கும் புளோரினும் வினைபுரிவதால் ஆர்சனிக் ஐம்புளோரைடு உருவாகிறது:[2].

2As + 5F2 → 2AsF5

ஆர்சனிக் முப்புளோரைடுடன் புளோரினைச் சேர்த்து வினைபுரியச் செய்வதாலும் இதைத் தயாரிக்கலாம்.

AsF3 + F2 → AsF5

ஆர்செனிக் ஆக்சைடுகளுடன் தனிமநிலை புளோரினைச் சேர்த்து வினைப்படுத்துவதாலும் ஆர்சனிக் ஐம்புளோரைடைத் தயாரிக்கலாம்.

2As2O5 + 10F2 → 4AsF5 + 5O2
2As2O3 + 10F2 → 4AsF5 + 3O2

பண்புகள்[தொகு]

நிறமற்ற வாயுவாகக் காணப்படும் ஆர்சனிக் ஐம்புளோரைடு , முக்கோண இரட்டைப்பட்டைக் கூம்பு அமைப்பைப் பெற்றுள்ளது[2] In the solid state the axial As-F bond lengths are 171.9 pm and the equatorial 166.8 pm.[2]. திண்ம நிலையில் As-F அச்சு நீளம் 171.9 பை.மீ ஆகவும் நடுவரை அச்சு நீளம் 166.8 பை.மீ ஆகவும் இருக்கிறது.

வினைகள்[தொகு]

ஆலைடு அணைவுச் சேர்மங்களாக ஆர்சனிக் ஐம்புளோரைடு உருவாகிறது. கந்தக நான்கு புளோரைடுடன் ஆர்சனிக் ஐம்புளோரைடு வினைபுரிந்து அயனி அணைவுச்சேர்மமாக உருவாகும் வினை இச்சேர்மம் ஒரு வலிமைமிக்க ஏற்பி என்பதை வெளிப்படுத்துகிறது.[3]

AsF5 + SF4 → SF3+ + AsF6

பாதுகாப்பு[தொகு]

ஆர்ச்னிக் ஐம்புளோரைடு மிகவும் நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகும். குறிப்பாக இச்சேர்மம் கல்லீரல் செல்களைப் பாதிக்கிறது எனக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Record of Arsenic(V) fluoride in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA), accessed on 24/12/2007
  2. 2.0 2.1 2.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  3. An investigation of the structures of the adducts of SF4 with BF3, PF5, AsF5, and SbF5 in the solid state and in solution in HF, M. Azeem, M. Brownstein, and R. J. Gillespie Can. J. Chem. 47(22): 4159–4167 (1969), எஆசு:10.1139/v69-689