வனேடியம்(III) புளோரைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
வனேடியம் புளோரைடு, வனேடியம் முப்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
10049-12-4 ![]() | |
ChemSpider | 16057827 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66230 |
| |
பண்புகள் | |
F3V | |
வாய்ப்பாட்டு எடை | 107.94 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் பச்சை தூள்(நீரிலி) பச்சை தூள்(முந்நீரேற்று)[1] |
அடர்த்தி | 3.363 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 1,395 °C (2,543 °F; 1,668 K) 760 மி.மீ பாதரசம்(நீரிலி) ~ 100 °C (212 °F; 373 K) 760 மி.மீ பாதரசம்(முந்நீரேற்று) சிதைவடைகிறது.[1] |
கொதிநிலை | பதங்கமாகும் |
கரையாது [1] | |
கரைதிறன் | எத்தனாலில் கரையாது. [1] |
2.757·10−3 செ.மீ3/மோல்[1] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், hR24[2] |
புறவெளித் தொகுதி | R3c, No. 167[2] |
Lattice constant | a = 5.17 Å, c = 13.402 Å[2] |
படிகக்கூடு மாறிலி
|
|
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
H301, H311, H331, H314[3] | |
P261, P280, P301+310, P305+351+338, P310[3] | |
ஈயூ வகைப்பாடு | ![]() |
R-சொற்றொடர்கள் | R23/24/25, R32, R34 |
S-சொற்றொடர்கள் | S22, S26, S36/37/39, S45 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | வனேடியம்(III) குளோரைடு வனேடியம்(III) ஆக்சைடு வனேடியம்(III) நைட்ரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | வனேடியம்(IV) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வனேடியம்(III) புளோரைடு (Vanadium(III) fluoride) என்பது VF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் உள்ள இவ்வெப்பந்தாங்கும் பொருளை MnF2 போன்ற நிலைமாற்ற உலோக புளோரைடுகள் தயாரிப்பது போல V2O3 சேர்மத்தில் இருந்து இரண்டு படிநிலைகளில் தயாரிக்க முடியும்[4]. குறைந்த வெப்பநிலையில் இச்சேர்மம் காந்த ஒழுங்குகளை வெளிப்படுத்துகிறது. உதாரணம்: V2F6.4H2O நீரேற்று வடிவம் 12 கெல்வின் வெப்பநிலையில் காந்த ஒழுங்குகளை வெளிப்படுத்துகிறது.[5]).
தயாரிப்பு
[தொகு]வனேடியம்(III) ஆக்சைடுடன் அமோனியம் பைபுளோரைடு சேர்த்து முதல் படிநிலையில் அறுபுளோரோ வனேடேட்டு(III) உப்பு தயாரிக்கப்படுகிறது.
- V2O3 + 6 (NH4)HF2 → 2 (NH4)3VF6 + 3 H2O
இரண்டாவது படிநிலையில் இந்த அறுபுளோரோ வனேடேட்டு(III) உப்பு வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தப்படுகிறது.
- (NH4)3VF6 → 3 NH3 + 3 HF + VF3
கனிமவேதியியல் திண்மங்களைத் தயாரிப்பதற்கு அமோனியம் உப்புகள் வெப்பச் சிதைவுக்கு உட்படுத்துவது பொதுவான முறையாகும்.
வனேடியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் புளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் VF3 சேர்மத்தைத் தயாரிக்க இயலும். புளோரின் அணுக்களுடன் பாலம் அமைத்திருக்கும் ஆறு ஒருங்கிணைவு வனேடியம் அணுக்கள் கொண்ட VF3 ஒரு படிகத் திண்மமாகும். இச்சேர்மத்தில் இரண்டு பண்பிரட்டையாகா எலக்ட்ரான்கள் இருப்பதை காந்தத் திருப்புத்திறன் வெளிப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
- ↑ 2.0 2.1 2.2 Douglas, Bodie E.; Ho, Shih-Ming (2007). Structure and Chemistry of Crystalline Solids. New York: Springer Science+Business Media, Inc. p. 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-26147-8.
- ↑ 3.0 3.1 3.2 Sigma-Aldrich Co., Vanadium(III) fluoride. Retrieved on 2014-06-25.
- ↑ Sturm, B. J.; Sheridan, C. W. "Vanadium(III) Fluoride" Inorganic Syntheses 1963; Vol. 7, pages 52-54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88275-165-4.
- ↑ S. Nakhal et al., Z. Kristallogr. 228, 347 (2013).எஆசு:10.1524/zkri.2013.1664
- Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.