உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் நான்குபுளோரோ போரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் நான்குபுளோரோ போரேட்டு
Lithium tetrafluoroborate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் டெட்ராபுளோரோ போரேட்டு
வேறு பெயர்கள்
போரேட்டு(1-) டெட்ராபுளோரோ-இலித்தியம்
இனங்காட்டிகள்
14283-07-9 Y
ChemSpider 3504162 Y
InChI
  • InChI=1S/BF4.Li/c2-1(3,4)5;/q-1;+1 Y
    Key: UFXJWFBILHTTET-UHFFFAOYSA-N Y
  • InChI=1/BF4.Li/c2-1(3,4)5;/q-1;+1
    Key: UFXJWFBILHTTET-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4298216
  • [Li+].F[B-](F)(F)F
பண்புகள்
LiBF4
வாய்ப்பாட்டு எடை 93.746 கி/மோல்
தோற்றம் வெண்மை/சாம்பல் நிற படிகத் திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 0.852 கி/செ.மீ3 திண்மம்
உருகுநிலை 296.5 °C (565.7 °F; 569.6 K)
கொதிநிலை சிதைவடையும்
நன்றாகக் கரையும்[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீங்கானது, புண் உண்டாக்கும்,
நீருரிஞ்சும்.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நான்குபுளோரோபோரேட்டு,
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

இலித்தியம் நான்குபுளோரோ போரேட்டு (Lithium tetrafluoroborate) என்பது LiBF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் படிகத்தூளாகக் காணப்படுகிறது. வணிகமுறையில் இரண்டாம் நிலை மின்கலன்களில் இதைப்பயன்படுத்த விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது. மின்முனைவற்ற கரைப்பான்களில் [2] இச்சேர்மத்தின் உயர் கரைதிறனை வெளிப்படுத்தும் ஒரு பயன்பாடாக இது கருதப்படுகிறது.இலித்தியம் டெட்ராபுளோரோபோரேட்டு என்றும் இதை அழைப்பார்கள்.

பயன்பாடுகள்

[தொகு]

BF4- இன் அயனி நகர்திறன் அதிகமாக உள்ளது என்றாலும், இதனுடைய Li+ உப்புக் கரைசல்கள் தொடர்புடைய பிற உப்புகளைவிட குறைவான கடத்துத் திறனைக் கொண்டுள்ளன. இலித்தியம் – இரும்பு மின்கலன்களில் இலித்தியம் நான்குபுளோரோ போரேட்டு பொதுவாகப் பயன்படுத்தப்படும் இலித்தியம் அறுகுளோரோ பாசுபேட்டைக் காட்டிலும் சில கூடுதலான நன்மைகளைக் கொடுக்கிறது. உயர் வெப்ப நிலைப்புக்கும்[3] ஈரப்பதம் பொறுத்தமையும் பண்புக்கும்[4] சான்றாக இச்சேர்மம் விளங்குகிறது. உதாரணமாக அறை வெப்பநிலையில் இலித்தியம் நான்குபுளோரோ போரேட்டு பில்லியனுக்கு 620 பகுதிகள் அளவுக்கு ஈரப்பதத்தைத் தாங்கும் வல்லமையுடையதாக உள்ளது. அதேசமயத்தில் இலித்தியம் அறுகுளோரோ பாசுபேட்டு உடனடியாக நீராற்பகுப்பு அடைந்து பாசுபோரைல்புளோரைடு மற்றும் ஐதரசன் புளோரைடு போன்ற நச்சுவாயுக்களாக மாறுகிறது. பெரும்பாலும் மின்கலங்களின் மின்முனைகளைச் சேதப்படுத்திவிடுகிறது. ஒப்பீட்டளவில் குறைந்த கடத்துதிறன் மற்றும் கிராபைட் மின்முனைகளில் நிலையான திண்ம மின்பகுளி இடைமுகம் உருவாவதில் சிக்கல் போன்ற சிரமங்கள் குறைபாடுகளாகும்.

வெப்பநிலைப்புத் தன்மை

[தொகு]

இலித்தியம் நான்குபுளோரோ போரேட்டு மற்றும் மற்ற கார-உலோக உப்புகள் வெப்பச்சிதைவுக்கு உட்பட்டு போரான் முப்புளோரைடை வெளிவிடும் என்பதால் ஆய்வக அளவில் இவ்வுப்பு ஒரு போதுமான வேதியல் மூலமாகப் பயன்படுத்தப்படுகிறது. :[5] LiBF4 → LiF + BF3

தயாரிப்பு

[தொகு]

இருபோரேனை தொழிற்சாலைகளில் தொகுப்பு முறையில் தயாரிக்கும்போது இலித்தியம் நான்குபுளோரோ போரேட்டு ஒரு உடன்விளை பொருளாகப் உருவாகிறது:[5][6].

8 BF3 + 6 LiH → B2H6 + 6 LiBF4

BF3 சேர்மத்தால் நிகழும் புளோரினேற்றத்தைத் தடுக்கவல்ல பொருத்தமான ஒரு கரைப்பானின் (உதாரணம்: HF, BrF3, அல்லது திரவமாக்கப்பட்ட SO2) உதவியோடு LiF மற்றும் BF3 ஆகியனவற்றிலிருந்தும் LiBF4 தயாரிக்க முடியும்:[5].

LiF + BF3 → LiBF4

மேற்கோள்கள்

[தொகு]
  1. GFS-CHEMICALS
  2. name=Kang>Xu, Kang. "Nonaqueous Liquid Electrolytes for Lithium-Based Rechargeable Batteries."Chemical Reviews 2004, volume 104, pp. 4303-418. எஆசு:10.1021/cr030203g
  3. S. Zhang, K. Xu, T. Jow (2003). "Low-temperature performance of Li-ion cells with a LiBF4-based electrolyte". Journal of Solid State Electrochemistry 7 (3): 147–151. doi:10.1007/s10008-002-0300-9. http://www.researchgate.net/publication/241026936_061._Low-temperature_performance_of_Li-ion_cells_with_a_LiBF_4_-based_electrolyte/file/5046351d38dc83bb9b.pdf. பார்த்த நாள்: 16 February 2014. 
  4. S. S. Zhang;z K. Xu; and T. R. Jow (2002). "Study of LiBF4 as an Electrolyte Salt for a Li-Ion Battery". Journal of The Electrochemical Society 149 (5): A586-A590. doi:10.1149/1.1466857. http://www.researchgate.net/publication/244478865_044._Study_of_LiBF_4_as_an_Electrolyte_Salt_for_a_Li-Ion_Battery/file/5046351d3a44c137d3.pdf.. பார்த்த நாள்: 16 February 2014. 
  5. 5.0 5.1 5.2 Robert, Brotherton; Joseph, Weber; Clarence, Guibert; and John, Little (2000). "Boron Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: pg. 10. doi:10.1002/14356007.a04_309. 
  6. Brauer, Georg (1963). Handbook of Preparative Inorganic Chemistry Vol. 1, 2nd Ed. Newyork: Academic Press. p. 773. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0121266011.