இலித்தியம் நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் நைட்ரேட்டு

__ Li+__ N__ O
இனங்காட்டிகள்
7790-69-4 Y
ChemSpider 8305408 N
InChI
  • InChI=1S/Li.NO3/c;2-1(3)4/q+1;-1
    Key: IIPYXGDZVMZOAP-UHFFFAOYSA-N
  • InChI=1/Li.NO3/c;2-1(3)4/q+1;-1
    Key: IIPYXGDZVMZOAP-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10129889
வே.ந.வி.ப எண் QU9200000
SMILES
  • [Li+].[N+](=O)([O-])[O-]
UNII 68XG6U4533 Y
பண்புகள்
LiNO3
வாய்ப்பாட்டு எடை 68.946 கி/மோல்
தோற்றம் வெள்ளை முதல் இளமஞ்சள் நிற திண்மம்
அடர்த்தி 2.38 கி/செ.மீ3
உருகுநிலை 255 °C (491 °F; 528 K)
கொதிநிலை 600 °C (1,112 °F; 873 K) (சிதையும்)
52.2 கி/100 மில்லி (20 °செல்சியசு)
90 கி/100 மில்லி (28 °செல்சியசு)
234 கி/100 மி.லி (100 °செல்சியசு)
கரைதிறன் எத்தனால், மெத்தனால், பிரிடீன், அமோனியா, அசிட்டோன் கரைப்பான்களில் கரையும்.
−62.0·10−6 cm3/mol (+3 H2O)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.735
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−7.007 கிலோயூல்/கி or −482.3 கிலோயூல்/மோல்
Std enthalpy of
combustion
ΔcHo298
25.5 கிலோயூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
105 யூல்/(மோல் கெல்வின் )
வெப்பக் கொண்மை, C 64 யூல்/(மோல் கெல்வின்)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிசனேற்றி, எரிச்சலூட்டி
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
1426 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் நைட்ரேட்டு
பொட்டாசியம் நைத்திரேட்டு
உருபீடியம் நைட்ரேட்டு
சீசியம் நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

இலித்தியம் நைட்ரேட்டு (Lithium nitrate) என்பது LiNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நைட்ரிக் அமிலத்தின் இலித்தியம் உப்பான இச்சேர்மம் ஒரு கார உலோக நைட்ரேட்டு உப்பாக வகைப்படுத்தப்படுகிறது. ஈரம் உறிஞ்சியாகத் திகழும் இவ்வுப்பு நீரை உறிஞ்சி இலித்தியம் நைட்ரேட்டு முந்நீரேற்று என்ற நீரேற்றாக உருவாகிறது. இதன் ஈருறுப்புச் சேர்மங்கள் வெப்ப பரிமாற்று பாய்மங்களுக்காக ஆராயப்படுகின்றன.[1]

நைட்ரிக் அமிலத்துடன் இலித்தியம் கார்பனேட்டு அல்லது இலித்தியம் ஐதராக்சைடு சேர்மத்தைச் சேர்த்து சூடுபடுத்துவதால் இலித்தியம் நைட்ரேட்டு உருவாகிறது.

பயன்கள்[தொகு]

நிறமற்ற ஈரமுறிஞ்சும் இலித்தியம் நைட்ரேட்டு உப்பு சிவப்பு நிற பட்டாசு மற்றும் வெடிபொருள்கள் தயாரிப்பில் ஓர் ஆக்சிசனேற்றும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.

நீரேற்றப்பட்ட வடிவமான இலித்தியம் நைட்ரேட் முந்நீரேற்று 287±7 யூல்/கி இணைவின் மிக உயர்ந்த தன்வெப்பத்தைக் கொண்டுள்ளது, எனவே இதன் உருகும் வெப்பநிலையான 303.3 கெல்வினில் வெப்ப ஆற்றல் சேமிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[2][3]

சமையலுக்கு சூரியனில் இருந்து சேகரிக்கப்படும் வெப்பத்தை சமையலுக்குப் பயன்படுத்த சேமிக்கும் ஒரு ஊடகமாக இலித்தியம் நைட்ரேட்டு முன்மொழியப்பட்டுள்ளது. பிரெசுனல் விலையைப் பயன்படுத்தி திண்மநிலை இலித்தியம் நைட்ரேட்டை உருக்கி பின்னர் இது ஒரு "சூரிய மின்கலமாக" செயல்படுத்தப்படுகிறது. வெப்பச்சலனம் மூலம் வெப்பத்தை மறுபகிர்வு செய்ய இவ்வமைப்பு அனுமதிக்கிறது.[4]

தயாரிப்பு[தொகு]

நைட்ரிக் அமிலம் மற்றும் இலித்தியம் கார்பனேட்டை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இலித்தியம் நைட்ரேட்டை தயாரிக்க முடியும்.

Li2CO3 + 2 HNO3 → 2 LiNO3 + H2O + CO2

பொதுவாக LiNO3 சேர்மத்தை உருவாக்கும் போது, அமிலம் அனைத்தும் எப்போது நடுநிலையாக்கப்பட்டது என்பதை அறிய காடிகாரத்தனமை சுட்டெண் காட்டி பயன்படுத்தப்படுகிறது.[5] இருப்பினும், இந்த நடுநிலையாக்கத்தை கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி இழப்புடன் ஒப்பிட்டு கண்டறியலாம். அதிகப்படியான நீரின் இருப்பை அகற்ற விளைபொருளை சூடாக்கலாம்.

நச்சுத்தன்மை[தொகு]

இலித்தியம் நைட்ரேட்டு உட்கொள்வதால் மத்திய நரம்பு மண்டலம், தைராய்டு, சிறுநீரகங்கள் மற்றும் இருதய-நாள அமைப்பு ஆகியவற்றில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.[6] தோல், கண்கள் மற்றும் சளி சவ்வுகளுக்கு வெளிப்படும் போது, இலித்தியம் நைட்ரேட்டு எரிச்சலை ஏற்படுத்தும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wietelmann, Ulrich and Bauer, Richard J. (2005) "Lithium and Lithium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH: Weinheim. எஆசு:10.1002/14356007.a15_393.
  2. Shamberger, Patrick J.; Reid, Timothy (2012). "Thermophysical Properties of Lithium Nitrate Trihydrate from (253 to 353) K". Journal of Chemical & Engineering Data 57 (5): 1404–1411. doi:10.1021/je3000469. 
  3. Kenisarin, Murat; Mahkamov, Khamid (2016). "Salt hydrates as latent heat storage materials:Thermophysical properties and costs". Solar Energy Materials and Solar Cells 145 (3): 255–286. doi:10.1016/j.solmat.2015.10.029. 
  4. "A Solar Cooker Prototype for a Greener Tomorrow". 23 March 2011.
  5. "Synthesis database: Lithium nitrate synthesis". Amateur Science Network. பார்க்கப்பட்ட நாள் 18 June 2012.
  6. "Material Safety Data Sheet". Sigma-Aldrich Catalog. பார்க்கப்பட்ட நாள் April 12, 2012.
  7. "Chemical Datasheet". CAMEO Chemicals. பார்க்கப்பட்ட நாள் April 26, 2012.

மேலும் வாசிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_நைட்ரேட்டு&oldid=3937286" இலிருந்து மீள்விக்கப்பட்டது