உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் ஐதராக்சைடு
Lithium hydroxide
Lithium-hydroxide.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் ஐதராக்சைடு
வேறு பெயர்கள்
இலித்தின்
இனங்காட்டிகள்
1310-65-2 Y
1310-66-3 (ஒருநீரேற்று) N
ChEBI CHEBI:33979 Y
ChemSpider 3802 Y
InChI
  • InChI=1S/Li.H2O/h;1H2/q+1;/p-1 Y
    Key: WMFOQBRAJBCJND-UHFFFAOYSA-M Y
  • InChI=1/Li.H2O/h;1H2/q+1;/p-1
    Key: WMFOQBRAJBCJND-REWHXWOFAT
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3939
வே.ந.வி.ப எண் OJ6307070
  • [Li+].[OH-]
UNII 903YL31JAS Y
UN number 2680
பண்புகள்
LiOH
வாய்ப்பாட்டு எடை 23.95 கி/மோல் (நீரிலி)
41.96 கி/மோல் (ஒருநீரேற்று)
தோற்றம் நீருறிஞ்சும் வெண்மையான திண்மம்
நெடியற்றது
அடர்த்தி 1.46 கி/செ.மீ3 (நீரிலி)
1.51 கி/செ.மீ3 (ஒருநீரேற்று)
உருகுநிலை 462 °C (864 °F; 735 K)
கொதிநிலை 924 °C (1,695 °F; 1,197 K) சிதைவடையும்
நீரிலி:
12.7 கி/100 மி.லி (0 °C)
12.8 கி/100 மி.லி (20 °C)
17.5 கி/100 மி.லி (100 °C)
ஒருநீரேற்று:
22.3 கி/100 மி.லி (10 °C)
26.8 கி/100 மி.லி (80 °C)[1]
methanol-இல் கரைதிறன் நீரிலி:
9.76 கி/100 கி (20 °C, 48 மணிநேரம் கலப்பு)
ஒருநீரேற்று:
13.69 கி/100 கி (20 °C, 48 மணிநேரம் கலப்பு)[2]
எத்தனால்-இல் கரைதிறன் நீரிலி:
2.36 கி/100 கி (20 °C, 48 மணிநேரம் கலப்பு)
ஒருநீரேற்று:
2.18 கி/100 கி (20 °C, 48 மணீநேரம் கலப்பு)[2]
சமபுரொப்பனால்-இல் கரைதிறன் நீரிலி:
0 கி/100 கி (20 °C, 48 மணிநேரம் கலப்பு)
ஒருநீரேற்று:
0.11 கி/100 கி (20 °C, 48 மணிநேரம் கலப்பு)[2]
காரத்தன்மை எண் (pKb) -0.63[3]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.464 (நீரிலி)
1.460 (ஒருநீரேற்று)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-20.36 கியூ/கி
வெப்பக் கொண்மை, C 2.071 யூ/கி கெ
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0913
ICSC 0914 (ஒருநீரேற்று)
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
Lethal dose or concentration (LD, LC):
210 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[4]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இலித்தியம் அமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் ஐதராக்சைடு
பொட்டாசியம் ஐதராக்சைடு
ருபீடியம் ஐதராக்சைடு
சீசியம் ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இலித்தியம் ஐதராக்சைடு (Lithium hydroxide) என்பது LiOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் நீருறிஞ்சும் திறன் கொண்ட படிகமாகக் காணப்படுகிறது. தண்ணீரில் நன்றாகவும் எத்தனாலில் சிறிதளவும் இலித்தியம் ஐதராக்சைடு கரைகிறது. காரவுலோக ஐதராக்சைடுகளில் மிகவும் வலிமை குறைந்த காரமாக இது செயல்படுகிறது. வர்த்தகரீதியாக இச்சேர்மம் நீரிலி வகையாகவும் ஒருநீரேற்று வடிவிலும் கிடைக்கிறது. இவ்விரண்டுமே வலிமையான காரங்களாகும்.

தயாரிப்பு

[தொகு]

இலித்தியம் கார்பனேட்டு மற்றும் கால்சியம் ஐதராக்சைடு சேர்மங்கள் இணைந்து இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் மூலமாக இலித்தியம் ஐதராக்சைடை உருவாக்குகின்றன.[5]

Li2CO3 + Ca(OH)2 → 2 LiOH + CaCO3

தொடக்கத்தில் உற்பத்தியாகும் நீரேற்றானது வெற்றிடத்தில் 180 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி நீர்நீக்கம் செய்யப்படுகிறது. ஆய்வகத்தில் இலித்தியம் அல்லது இலித்தியம் ஆக்சைடுடன் தண்ணீர் சேர்த்து வினைப்படுத்துவதால் இலித்தியம் ஐதராக்சைடு தோன்றுகிறது. இவ்வினைக்கான சமன்பாடுகள் இங்கு தரப்பட்டுள்ளன.:

2 Li + 2 H2O → 2 LiOH + H2
Li2O + H2O → 2 LiOH

குறிப்பாக இவ்வினைகள் தவிர்க்கப்படுகின்றன. இலித்தியம் கார்பனேட்டு பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் இலித்தியம் ஐதராக்சைடு சேர்மமே இலித்தியம் உப்புகள் தயாரிப்பதற்கான முன்னோடியாக பயன்படுத்தப்படுகிறது. எ.கா:

LiOH + HF → LiF + H2O.

பயன்பாடுகள்

[தொகு]

இலித்தியம் மசகு தயாரிப்பதற்கு இலித்தியம் ஐதராக்சைடு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் சிடியரேட்டு என்ர மசகு மிகவும் பிரபலமானதொரு மசகு ஆகும். தண்ணீர் மீதான உயர் எதிர்ப்பு தன்மை காரணமாகவும் உயர் மற்றும் தாழ் வெப்பநிலைகளில் மிகவும் உபயோகமுள்ளதாகவும் இருப்பதால் இம்மசகு எண்னெய் பொதுப் பயன்பாட்டு உயவு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது.

வளிமக் கழுவல்

[தொகு]

விண்கலன்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றும் சுவாசக் கருவிகள் போன்றவற்றிற்குத் தேவையான சுவாசக் காற்றை தூய்மைப்படுத்தும் அமைப்புகளில் இலித்தியம் ஐதராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் கார்பனேட்டு மற்றும் தண்ணீரை உருவாக்குவதன் மூலம் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடை இச்சேர்மம் நீக்குகிறது.:[6]

2 LiOH·H2O + CO2 → Li2CO3 + 3 H2O

அல்லது,

2LiOH + CO2 → Li2CO3 + H2O

நீரிலி வகை இலித்தியம் ஐதராக்சைடு அதனுடைய குறைவான எடை மற்றும் குறைவான நீர் உற்பத்தித் திறன் போன்ற காரனங்களால் விண்கலன் சுவாசக் கருவிகளில் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு கிராம் நீரிலி வகை இலித்தியம் ஐதராக்சைடு 450 செ.மீ3 கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. ஒரு நீரேற்றானது 100 -110 பாகை செல்சியசு வெப்பநிலையில் அதனுடைய தண்ணீரை இழக்கிறது.

பிற பயன்கள்

[தொகு]

வெப்பநிலை மாற்றும் ஊடகம் மற்றும் சேமிப்புமின்கல மின்பகுளியாகவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்பாண்டத் தொழில் மற்றும் சில வகை சிமெண்ட் கலவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அழுத்த நீர் உலைகளிலும் இலித்தியம் ஐதராக்சைடு பயனாகிறது.

விலை

[தொகு]

2012 ஆம் ஆண்டில் இலித்தியம் ஐதராக்சைடு ஒரு டன் சுமார் 5000 முதல் 6000 அமெரிக்க டாலர்கள் வரை விற்பனை செய்யப்பட்டது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
  2. 2.0 2.1 2.2 Khosravi, Javad (2007). "9: Results". PRODUCTION OF LITHIUM PEROXIDE AND LITHIUM OXIDE IN AN ALCOHOL MEDIUM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-494-38597-5.
  3. Lew. Kristi., Acids and Bases (Essential Chemistry). Infobase Publishing (2009). p43.
  4. http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/1310-65-2
  5. Wietelmann, U; Bauer, RJ (2000). "Lithium and Lithium Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a15_393. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-30673-0.
  6. Jaunsen, JR (1989). "The Behavior and Capabilities of Lithium Hydroxide Carbon Dioxide Scrubbers in a Deep Sea Environment". US Naval Academy Technical Report. USNA-TSPR-157. http://archive.rubicon-foundation.org/4998. பார்த்த நாள்: 2008-06-17. 
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-03-11. பார்க்கப்பட்ட நாள் 2016-02-28.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_ஐதராக்சைடு&oldid=3992621" இலிருந்து மீள்விக்கப்பட்டது