சோடியம் மாங்கனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் மாங்கனேட்டு
பண்புகள்
MnNa2O4
வாய்ப்பாட்டு எடை 164.91 g·mol−1
தோற்றம் ஆழ்ந்த பச்சைநிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சோடியம் மாங்கனேட்டு (Sodium manganate) என்பது Na2MnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆழ்ந்த பச்சை நிறமுள்ள பொட்டாசியம் மாங்கனேட்டு சேர்மத்தையொத்த இத்திண்மம் அரிதாகக் கிடைக்கிறது. மாங்கனீசு டை ஆக்சைடுடன் சோடியம் ஐதராக்சைடு சேர்மத்தைச் சேர்க்கும் ஆக்சிசனேற்ற வினையின் மூலம் இச்சேர்மத்தை தயாரிக்க முடிவதில்லை. மாறாக இவ்வாக்சிசனேற்ற வினை Na3MnO4 உருவானதும் நிறுத்தப்படுகிறது. இந்த Mn(V) உப்பு நிலைப்புத் தன்மையற்றதாக காணப்படுகிறது[1]. சோடியம் பெர்மாங்கனேட்டை காரச்சூழலில் ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக சோடியம் மாங்கனேட்டைத் தயாரிக்க முடியும்.

4 NaOH + 4NaMnO4 → 4 Na2MnO4 + 2 H2O + O2

சோடியம் மாங்கனேட்டைத் தயாரிப்பது மிகவும் கடினம் ஆகும். தவிர சோடியம் பெர்மாங்கனேட்டு, பொட்டாசியம் பெர்மாங்கனேட்டை விடவும் அதிக விலைமதிப்பும் கொண்டதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Arno H. Reidies, "Manganese Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_123
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_மாங்கனேட்டு&oldid=2487360" இருந்து மீள்விக்கப்பட்டது