சோடியம் பிசுமத்தேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் பிசுமத்தேட்டு
Sodium bismuthate
NaBiO3.jpg
பெயர்கள்
வேறு பெயர்கள்
சோடியம் பிசுமத் ஆக்சைடு
இனங்காட்டிகள்
12232-99-4 N
EC number 235-455-6
InChI
  • InChI=1S/Bi.Na.3O/q;+1;;;-1
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [O-][Bi](=O)=O.[Na+]
பண்புகள்
NaBiO3
வாய்ப்பாட்டு எடை 279.97 கி/மோல்
தோற்றம் இலேசான பழுப்பு நிற தூள்
அடர்த்தி 6.50 கி/செ.மீ3
குளிர் நீரில் கரையாது. சூடான நீரில் சிதையும்.
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு தீங்கானது (Xn)
R-சொற்றொடர்கள் R22, R36/37/38
S-சொற்றொடர்கள் S26, S36
Lethal dose or concentration (LD, LC):
420 மி.கி/கி.கி (எலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சோடியம் பிசுமத்தேட்டு (Sodium bismuthate) என்பது NaBiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறம் கொண்ட ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாக இது வினைபுரிகிறது[1]. குளிர்ந்த நீரில் சோடியம் பிசுமத்தேட்டு கரைவதில்லை. நீரில் கரையாத சோடியம் உப்புகள் சிலவற்றில் இதுவும் ஒன்றாகும். இதனால் சிலசமயங்களில் ஒரு வினைநிகழ்ந்து முடிந்த பின்னர் இவ்வினைப்பொருளை அகற்றுவது எளிமையாக இருக்கும். நீரில் கரையாத சோடியம் உப்புகள் சிலவற்றில் இதுவும் ஒன்றாகும். வர்த்தக முறையிலும் இச்சேர்மம் விற்பனைக்குக் கிடைக்கிறது. இருப்பினும் இவ்வர்த்தக மாதிரிகளில் பிசுமத்(V) ஆக்சைடு, சோடியம் கார்பனேட்டு, சோடியம் பெராக்சைடு போன்ற மாசுக்கள் கலந்திருக்க சாத்தியங்கள் உண்டு[2]. இதனோடு தொடர்புடைய Na3BiO4 என்ற தோராயமான மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு சேர்மமும் அறியப்படுகிறது.

கட்டமைப்பு[தொகு]

எண்முக பிசுமத்(V) மையங்களும் சோடியம் நேர்மின் அயனிகளும் கொண்ட இல்மனைட்டு கட்டமைப்பில் சோடியம் பிசுமத்தேட்டு காணப்படுகிறது. Bi-O பிணைப்பு இடைவெளிகள் சராசரியாக 2.116 Å நீளம் கொண்டவையாக உள்ளன. நெருக்கப் பொதிவு ஆக்சிசன் அணுக்கள் உடன் இரண்டு வேறுபட்ட நேர்மின் அயனிகள் எண்முக தளத்தில் ஒன்று விட்டு ஒன்றாக அமைந்து உருவாகும் குருந்தம் (Al2O3) கட்டமைப்பை ஒத்த அடுக்கு கட்டமைப்பில் இல்மனைட்டு கட்டமைப்பு தோன்றுகிறது.

தயாரிப்பு மற்றும் பண்புகள்[தொகு]

NaBiO3 குப்பி

+V ஆக்சிசனேற்ற நிலை பிசுமத் ஆக்சைடுகள் உருவாதல் கடினமானது. எனவே காரமற்ற நிலையில் இச்சேர்மம் குறைவாகவே விவரிக்கப்பட்டுள்ளது.

பிசுமத்(III) ஆக்சைடு மற்றும் சோடியம் ஆக்சைடு ஆகியவற்றின் கலவையை காற்றில் ஆக்சிசனேற்றம் செய்வதால் சோடியம் பிசுமத்தேட்டு உருவாகிறது:[3]

Na2O + O2 + Bi2O3 → 2 NaBiO3.

இச்செயல்முறை சோடியம் மாங்கனேட்டு சேர்மத்தை தயாரிக்க உதவும் மாங்கனீசு டையாக்சைடை ஆக்சிசனேற்றம் செய்யும் செயல்முறையை ஒத்த செயல்முறையாகக் கருதப்படுகிறது.

சோடியம் பிசுமத்தேட்டு நீருடன் சேர்க்கப்படும் போது ஆக்சிசனேற்றம் அடைந்து பிசுமத்(III) ஆக்சைடு மற்றும் சோடியம் ஐதராக்சைடாக சிதைவடைகிறது.

2 NaBiO3 + H2O → 2 NaOH + Bi2O3 + O<s

அமிலங்களால் இது மிக விரைவாக சிதைவடைகிறது.

வலிமையான ஆக்சிசனேற்ரியாக இருப்பதனால் மாங்கனீசு சேர்மம் எதையும் நேரடியாக நிறமாலை ஆய்வுகளுக்கு உகந்த பெர்மாங்கனேட்டாக மாற்றுகிறது[3]. ஆய்வகங்களுக்குத் தேவையான சிறிய அளவு புளுட்டோனியம் பிரித்தெடுப்புக்குசோடியம் பிசுமத்தேட்டு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sodium bismuthate". Mallinckrodt Baker. June 19, 2007.
  2. Suzuki, Hitomi (2001). "Introduction". in Suzuki, Hitomi; Matano, Yoshihiro. Organobismuth Chemistry. எல்செவியர். பக். 1–20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-444-20528-5. https://books.google.com/books?id=qODswAbaBmsC&pg=PA8. 
  3. 3.0 3.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419.