மாங்கனீசு(II) அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு(II) அசிட்டேட்டு Manganese(II) acetate[1]
Manganese acetate.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
மாங்கனீசு டையசிட்டேட்டு
இனங்காட்டிகள்
638-38-0 (நீரிலி) Yes check.svgY
19513-05-4 (இருநீரேற்று) N
6156-78-1 (நான்கு நீரேற்று) N
ChemSpider 12008 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12525
பண்புகள்
Mn(CH3CO2)2 (நீரிலி)
Mn(CH3CO2)2•4H2O (நான்கு நீரேற்று)
வாய்ப்பாட்டு எடை 173.027 கி/மோல் (நீரிலி)
245.087 கி/மோல் (நான்கு நீரேற்று)
தோற்றம் வெண்மையான படிகங்கள் (நீரிலி)
இளம் ரோசு நிற ஒற்றைச்சரிவு படிகங்கள் (நான்கு நீரேற்று)
அடர்த்தி 1.74 கி/செ.மீ3 (நீரிலி)
1.59 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று)
உருகுநிலை
கரைதிறன் நீர், மெத்தனால், அசிட்டிக் அமிலம் (நீரிலி)
நீர், எத்தனால் கரையும் (நான்கு நீரேற்று)
+13,650•10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை > 130 °C (266 °F; 403 K) (நான்கு நீரேற்று)
Lethal dose or concentration (LD, LC):
2940 மி.கி/கி.கி (எலி,வாய்வழி)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் மாங்கனீசு(II) புளோரைடு
மாங்கனீசு(II) குளோரைடு
மாங்கனீசு(II) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக அசிட்டேட்டு
பாதரச(II) அசிட்டேட்டு
வெள்ளி அசிட்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மாங்கனீசு(II) அசிட்டேட்டு (Manganese(II)acetate) என்பது Mn(CH3CO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் நீரேற்றுகள் Mn(CH3CO2)2.(H2O)n என்ற பொதுவாய்ப்பாட்டுடன் காணப்படுகின்றன. இங்குள்ள n = 0, 2, 4. என்ற எண்களைக் குறிக்கிறது. ஒரு வினையூக்கியாகவும் உரமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது[3].

தயாரிப்பு[தொகு]

மாங்கனீசு(II,III) ஆக்சைடு அல்லது மாங்கனீசு(II) கார்பனேட்டு போன்ற சேர்மங்களில் ஒன்றை அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தி மாங்கனீசு(II) அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது :[4] </ref>

MnCO3 + 2 CH3CO2H → Mn(CH3CO2)2 + CO2 + H2O.

கட்டமைப்பு[தொகு]

நீரற்ற மாங்கனீசு(II) அசிட்டேட்டும் இருநீரேற்று மாங்கனீசு(II) அசிட்டேட்டும் (Mn(CH3CO2)2.2H2O) ஒருங்கிணைவுப் பலபடிகளாகும். இருநீரேற்று வடிவம் எக்சு கதிர் படிகவியல் ஆய்வு மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாங்கனீசு(II) மையமும் ஆறு ஆக்சிசன் மையங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த ஆக்சிசன் மையங்கள் நீர் ஈந்தணைவிகளாலும் அசிட்டேட்டுகளாலும் வழங்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–354, 4–68, ISBN 0-8493-0594-2
  2. "Manganese compounds (மாங்கனீசாக)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Thomas Scott; Mary Eagleson (1994), Concise encyclopedia chemistry, Walter de Gruyter, p. 620, ISBN 3-11-011451-8, 2009-07-20 அன்று பார்க்கப்பட்டது
  4. "Manganese Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2002). Wiley-VCH. DOI:10.1002/14356007.a16_123.