சீசியம் பெர்குளோரேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சிசியம் பெர்குளோரேட்டு
| |
வேறு பெயர்கள்
சிசியம் பெர்குளோரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13454-84-7 | |
ChemSpider | 109912 |
EC number | 236-643-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3035378 |
| |
பண்புகள் | |
CsClO4 | |
வாய்ப்பாட்டு எடை | 232.36 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
அடர்த்தி | 3.327 கி/செ.மீ3 |
உருகுநிலை | 250 °C (482 °F; 523 K) (சிதைவடையும்) |
1.974 கி/100 மி.லி (25 ºசெ) | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4887 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர் சாய்சதுரம் (<219 °செ) கனசதுரம் (>219 ºC, a = 798 pm) |
புறவெளித் தொகுதி | Pnma (<219 °C) F43m (>219 ºC) |
Lattice constant | a = 982 pm, b = 600 pm, c = 779 pm (orthorhombic, <219 °C) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சீசியம் குளோரைடு சீசியம் குளோரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் பெர்குளோரேட்டு சோடியம் பெர்குளோரேட்டு பொட்டாசியம் பெர்குளொரேட்டு ருபீடியம் பெர்குளோரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் பெர்குளோரேட்டு (Caesium perchlorate) என்பது CsClO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சீசியத்தின் பெர்குளோரேட்டு உப்பாகும். வெண்மை நிறப் படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் நீரிலும் எத்தனாலிலும் குறைவாகக் கரைகிறது. ஆனால் சூடான நீரில் நன்றாகக் கரைகிறது.
ருபீடியம், பொட்டாசியம், இலித்தியம் மற்றும் சோடியம் வரிசைத் கார உலோக பெர்குளோரேட்டுகளில் மிகக் குறைவான கரைதிறன் கொண்டது சீசியம் பெர்குளோரேட்டு ஆகும். இப்பண்பே எடையறி பகுப்பாய்வு[3] மற்றும் தனித்துப் பிரித்தல் செயல்பாடுகளில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இக்குறை கரைதிறன் பண்பு பிரான்சீயத்தை ஒரு கார உலோகம் என வகைப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. சீசியம் பெர்குளோரேட்டுடன் பிரான்சீயம் பெர்குளோரேட்டும் இணையாக வீழ்படிவாகிறது என்பது கவனிக்கத்தக்கது[4].
வெப்பநிலை (°செ) | 0 | 8.5 | 14 | 25 | 40 | 50 | 60 | 70 | 99 |
---|---|---|---|---|---|---|---|---|---|
கரைதிறன் (கி / 100 மி.லி) | 0.8 | 0.91 | 1.91 | 1.974 | 3.694 | 5.47 | 7.30 | 9.79 | 28.57 |
250 0 செல்சியசு|செ]] வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும்போது சிசியம் பெர்குளோரேட்டானது சீசியம் குளோரைடாகச் சிதைவடைகிறது. மற்ற பெர்குளோரேட்டுகள் போலவே உயர் வெப்பநிலைகளில் இது வலிமையான ஆக்சிசனேற்றியாகவும், கரிமப்பொருட்களுடனும் ஆக்சிசன் ஒடுக்கிகளுடனும் தீவிரமாக வினைபுரிகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Perry, Dale L.; Phillips, Sidney L. (1995), Handbook of Inorganic Compounds, CRC Press.
- ↑ 2.0 2.1 Brezina, F.; Mollin, J.; Pastorek, R.; Sindelar, Z. (1986), Chemicke tabulky anorganickych sloucenin, SNTL.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. p. 1017. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-022057-6.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help). - ↑ Hyde, E. K. (1952), "Radiochemical Methods for the Isolation of Element 87 (Francium)", J. Am. Chem. Soc., 74 (16): 4181–84, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1021/ja01136a066
வெளி இணைப்புகள்
[தொகு]- Sigma-Aldrich MSDS பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்