உருபீடியம் புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ருபீடியம் புரோமைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உருபீடியம் புரோமைடு
Rubidium bromide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் புரோமைடு
வேறு பெயர்கள்
ருபீடியம்(I) புரோமைடு
இனங்காட்டிகள்
7789-39-1 Yes check.svgY
ChemSpider 74217 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4670918
பண்புகள்
RbBr
வாய்ப்பாட்டு எடை 165.372 கி/மோல்
தோற்றம் வெண்மை படிகத் திடப்பொருள்
அடர்த்தி 3.350 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 1,340 °C (2,440 °F; 1,610 K)
98 கி/100 மி.லி
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ருபீடியம் புளோரைடு
ருபீடியம் குளோரைடு
ருபீடியம் அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் புரோமைடு
சோடியம் புரோமைடு
பொட்டாசியம் புரோமைடு
சீசியம் புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ருபீடியம் புரோமைடு (Rubidium bromide) என்பது RbBr என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஓரு வேதிச் சேர்மம் ஆகும். இது ருபீடியத்தினுடைய புரோமைடு உப்பாகும். ருபீடியம் புரோமைடு, சோடியம் குளோரைடு உப்பின் படிக வடிவத்தைக் கொண்டுள்ளது. இப்படிகத்தின் அணிக்கோவை மாறிலியின் மதிப்பு 685 பைக்கோ மீட்டர்கள் ஆகும்[1].

ருபீடியம் புரோமைடைத் தயாரிப்பதற்கு பல்வேறு தொகுப்பு முறைகள் காணப்படுகின்றன. ருபீடியம் ஐதராக்சைடுடன் ஐதரோபுரோமிக் அமிலம் சேர்த்து ருபீடியம் புரோமைடு தயாரிக்கும் முறையும் ஒரு வழிமுறையாகும்.

RbOH + HBr → RbBr + H2O

ருபீடியம் கார்பனேட்டை, ஐதரோ புரோமிக் அமிலம் சேர்த்து நடுநிலையாக்கித் தயாரிப்பது மற்றொரு முறையாகும

Rb2CO3 + 2HBr → 2RbBr + H2O + CO2

ருபீடியம் உலோகம் நேரடியாக புரோமினுடன் வினை புரிந்து ருபீடியம் புரோமைடைத் தருகிறது. ஆனால் இம்முறையில் ருபீடியம் புரோமைடு தயாரிப்பது சிறந்த வழிமுறையாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில், கார்பனேட்டு அல்லது ஐதராக்சைடை விட ருபீடியம் உலோகம் விலைமதிப்பு மிக்கதாகும் அதுமட்டுமின்றி இவ்வினையில் வெடிக்கும் விபத்துகள் நிகழவும் வாய்ப்பு இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. G. Chern, J. G. Skofronick, W. P. Brug ,S. A. Safron (1989). "Surface phonon modes of the RbBr(001) crystal surface by inelastic He-atom scattering". Phys. Rev. B 39 (17): 12838–12844. doi:10.1103/PhysRevB.39.12838. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்_புரோமைடு&oldid=3318398" இருந்து மீள்விக்கப்பட்டது