சோடியம் சயனோபோரோ ஐதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் சயனோபோரோ ஐதரைடு
சோடியம் சயனோபோரோ ஐதரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சோடியம் சயனோடிரை ஐதரிடோபோரேட்டு
இனங்காட்டிகள்
25895-60-7 Y
EC number 247-317-2
InChI
  • InChI=1S/CBN.Na/c2-1-3;/q-1;+1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20587905
SMILES
  • [B-]C#N.[Na+]
பண்புகள்
NaBH3CN
வாய்ப்பாட்டு எடை 62.84 கி மோல்−1
தோற்றம் வெண்மை மற்றும் அரை வெண்மை, நீருறிஞ்சும்
அடர்த்தி 1.20 கி/செ.மீ3
உருகுநிலை 241 °C (466 °F; 514 K) சிதைவடையும்
212 கி/100 மி.லி (29 °செல்சியசு)
கரைதிறன் டிக்லைம், டெட்ரா ஐதரோபியூரான் மெத்தனால் போன்றவற்றில் கரையும்.
மெத்தனாலில் சிறிதளவு கரையும்
டை எத்தில் ஈதரில் கரையாது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் விழுங்க நேர்ந்தால் அபாயம், தோலில் படநேர்ந்தால் தீங்கு
அமிலங்களுடன் வினைப்பட்டால் நச்சு வாயு வெளியாகும்.
தண்ணிருடன் எனில் எளிதில் தீப்பிடிக்கும் வாயு வெளியாகும்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Sigma Aldrich[1]
GHS pictograms
GHS signal word அபாயம்
H228, H300, H310, H330, H314, H410
P210, P260, P264, P273, P280, P284
Threshold Limit Value
5 மி.கி/மீ3 (TWA)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் போரோ ஐதரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

சோடியம் சயனோபோரோ ஐதரைடு (Sodium cyanoborohydride) என்பது NaBH3CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற ஓர் உப்பு என்றாலும் வர்த்தக மாதிரிகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. பரவலாக கரிமத் தொகுப்பு வினைகளில் இமீன்களை ஒடுக்குவதற்கு இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. நீரிய நிபந்தனைகளிலும் கூட இவ்வுப்பு நிலைத்து நிற்கிறது [2].

பயன்கள்[தொகு]

எலக்ட்ரானை-திரும்பப் பெறும் சயனைடு பதிலீடான [B(CN)H3] அயனியைக் கொண்டிருப்பதால் சோடியம் போரோ ஐதரைடில் இடம்பெற்றுள்ள [BH4] – அயனியைக் காட்டிலும் குறைவான ஒடுக்கும் பண்பை வெளிப்படுத்துகிறது[3]. ஓர் இலேசான ஒடுக்கும் முகவர் என்பதால் குறிப்பாக இமீன்களை அமீன்களாக மாற்ற இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

R2CO + R'NH2 + NaBH3CN + CH3OH → R2CH-NHR' + "NaCH3OBH2CN"

மேலும், குறிப்பாக ஒடுக்க அமைனாக்கல் வினைகளுக்கு சோடியம் சயனோபோரோ ஐதரைடு சாதகமாகச் செயல்படுகிறது. இங்கு வினையாக்கி சோடியம் சயனோபோரோ ஐதரைடு முன்னிலையில் ஓர் ஆல்டிகைடு அல்லது கீட்டோன் ஓர் அமீனுடன் சேர்த்து சூடுபடுத்தப்படுகிறது. குறிப்பாக இவ்வினையில் மிகையளவு வினையாக்கி பயன்படுத்தப்படுகிறது. pH 7-10 என்ற அளவில் அமிலக் காரத்தன்மை கொண்ட கரைசல் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒடுக்க அமைனேற்ற வினை (போர்ச்சு வினை) திறம்பட நிகழும்[4].

டோசில் ஐதரசீனுடன் இணைத்து சோடியம் சயனோபோரோ ஐதரைடைப் பயன்படுத்தினால் கீட்டோன்களின் ஒடுக்க ஆக்சிசனேற்றம் நிகழ்கிறது.

கட்டமைப்பு[தொகு]

நான்முக எதிர்மின் அயனியான BH3(CN) இச்சேர்மத்தை உருவாக்குகிறது.

தயாரிப்பு[தொகு]

சோடியம் சயனோபோரோ ஐதரைடை எளிதாக தயார் செய்ய முடியும் என்றாலும் எப்போதும் கொள்முதல் செய்யப்பட்டும் வருகிகிறது. சோடியம் சயனைடுடன் போரேன் சேர்த்து தயாரிப்பது ஒரு முறையாகும். சோடியம் போரோ ஐதரைடுடன் பாதரசம்(II) சயனைடு சேர்த்து சூடுபடுத்தி தயாரிப்பது மற்றொரு தயாரிப்பு முறையாகும். வர்த்தக மாதிரிகளை தூய்மைப்படுத்த இயலும் என்றாலும் ஒடுக்க அமைனாக்கல் விளைபொருட்களின் தூய்மையை மேம்படுத்த முடிவதில்லை[5].

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sigma-Aldrich Co., Sodium cyanoborohydride. Retrieved on 2014-11-09.
  2. "Sodium Cyanoborohydride". Encyclopedia of Reagents for Organic Synthesis. (2007). John Wiley & Sons. DOI:10.1002/047084289X.rs059.pub2. 
  3. Ellen W. Baxter, Allen B. Reitz Reductive Aminations of Carbonyl Compounds with Borohydride and Borane Reducing Agents in Organic Reactions, 2002, John Wiley and Sons. எஆசு:10.1002/0471264180.or059.01
  4. Richard F. Borch (1988). "Reductive Amination with Sodium Cyanoborohydride: N,N-Dimethylcyclohexylamine". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV6P0499. ; Collective Volume, vol. 6, p. 499
  5. Richard F. Borch and Mark D. Bernstein and H. Dupont Durst (1971). "Cyanohydridoborate Anion as a Selective Reducing Agent". J. Am. Chem. Soc. 93 (12): 2897–2904. doi:10.1021/ja00741a013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_சயனோபோரோ_ஐதரைடு&oldid=2749947" இலிருந்து மீள்விக்கப்பட்டது