சோடியம் செலீனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் செலீனைட்டு
Sodium selenite.jpg
இனங்காட்டிகள்
(hydrate: 26970-82-1) 10102-18-8 (hydrate: 26970-82-1) N
ChEBI CHEBI:48843 Yes check.svgY
ChEMBL ChEMBL112302 Yes check.svgY
ChemSpider 23308 Yes check.svgY
EC number 233-267-9
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D10530 N
பப்கெம் 24934
வே.ந.வி.ப எண் VS7350000
UNII HIW548RQ3W Yes check.svgY
UN number 2630
பண்புகள்
Na2O3Se
வாய்ப்பாட்டு எடை 172.95 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 3.1 கி/செ.மீ3
உருகுநிலை
85 கி/100 மி.லி (20 °செ)
கரைதிறன் ஆல்ககால், எத்தனால் ஆகியனவற்றில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணகம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0698
ஈயூ வகைப்பாடு மிக நச்சு (T+)
சூழலுக்கு அபாயகரமானது. (N)
R-சொற்றொடர்கள் R23, R28, R31, R43, R51/53
S-சொற்றொடர்கள் (S1/2), S28, S36/37, S45, S61
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சோடியம் செலீனைட்டு (Sodium selenite) என்பது Na2SeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திண்மமாக இவ்வுப்பு காணப்படுகிறது. Na2SeO3(H2O)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பென்டா ஐதரேட்டு மட்டும் தண்ணிரில் கரையக்கூடிய செலீனியம் சேர்மமாக உள்ளது.

தயாரிப்பும் வேதி வினைகளும்[தொகு]

செலீனியம் டை ஆக்சைடுடன் செலீனியம் ஐதராக்சைடு வினைபுரிவதால் சோடியம் செலீனைட்டு உருவாகிறது :[1]

SeO2 + 2 NaOH → Na2SeO3 + H2O

இந்நீரேற்றை 40 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் நீரிலி உப்பாக மாற்றமடைகிறது. தொடர்புடைய சோடியம் சல்பைட்டை ஒத்த சோடியம் செலீனைட்டு பட்டக ஈரெதிரயனி போலத் தோற்றமளிக்கிறது [2]. இவ்வெதிரயனியை ஆக்சிசனேற்றம் செய்வதால் சோடியம் செலினேட்டு (Na2SeO4) உருவாகிறது.

பயன்கள்[தொகு]

பேரியம் செலீனைட்டு மற்றும் துத்தநாக செலீனைட்டுடன் சேர்த்து நிறமற்ற கண்ணாடிகள் பெருமளவில் தயாரிப்பில் சோடியம் செலீனைட்டு பயன்படுத்தப்படுகிறது. இரும்பு மாசுக்களால் கொண்டுவரப்படும் பச்சை நிறத்தை செலீனைட்டுகள் வெளிப்படுத்தும் மஞ்சள் நிறம் நீக்கிவிடுகிறது [3].

சில உணவுச் சேர்க்கைப் பொருள்களில் செலீனியம் கலந்திருப்பதால் இது அத்தியாவசியமான தனிமமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் விலங்கு உணவுகளில் செலீனியம் சேர்க்கைப் பொருளை அணுமதிக்கிறது. எனினும் சோடியம் செலீனைட்டு என்ற பொது வடிவமே வலர்ப்பு விலங்குகளின் உணவாகக் கருதப்படுகிறது. எத்தகைய செலீனியம் சேர்மங்கள் விலங்குணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பது 1970 களில் சரியாக அறியப்படவில்லை என்று ஒரு செய்தித் துணுக்கு தெரிவிக்கிறது. அந்த நேரத்தில் முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கையில் சோடியம் செலீனைட்டும் சோடியம் செலீனேட்டும் மட்டுமே விலங்குணவாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டது [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. F. Féher, "Sodium Selenite" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 432.
  2. Wickleder, Mathias S. (2002). "Sodium selenite, Na2SeO3". Acta Crystallographica Section E 58 (11): i103–i104. doi:10.1107/S1600536802019384. பன்னாட்டுத் தர தொடர் எண்:1600-5368. 
  3. Bernd E. Langner "Selenium and Selenium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry (published on-line in 2000) Wiley-VCH, Weinheim, 2002 எஆசு:10.1002/14356007.a23_525
  4. Schrauzer, GN (2001). "Nutritional selenium supplements: product types, quality, and safety". Journal of the American College of Nutrition 20 (1): 1–4. doi:10.1080/07315724.2001.10719007. பப்மெட்:11293463. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_செலீனைட்டு&oldid=3403077" இருந்து மீள்விக்கப்பட்டது