சோடியம் டைதயோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் டைதயோனேட்டு
இரண்டு சோடியம் நேர்மின் அயனிகளும் ஒரு டைதயோனேட்டு எதிர்மின் அயனியும்
Ball-and-stick model of the component ions
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் டைதயோனேட்டு
வேறு பெயர்கள்
சோடியம் ஐப்போசல்பேட்டு
இனங்காட்டிகள்
7631-94-9 N
ChemSpider 128833 Yes check.svgY
EC number 231-550-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 146045
பண்புகள்
Na2S2O6
வாய்ப்பாட்டு எடை 206.106 கி/மோல்
தோற்றம் வெண்மையான படிகத் திண்மம்
அடர்த்தி 2.19 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 267 °C (513 °F; 540 K) சிதைவடையும்
6.27 கி/100 மி.லி (0 ° செ)
15.12 கி/100 மி.லி (20 ° செ)
64.74 கி/100 மி.லி (100 °செ)
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

சோடியம் டைதயோனேட்டு (Sodium dithionate) என்பது Na2S2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டைசோடியம் டைதயோனேட்டு, இருசோடியம் இருதயோனேட்டு, சோடியம் ஐப்போசல்பேட்டு, சோடியம் மெட்டாபைசல்பேட்டு போன்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. சோடியம் டைதயோனேட்டில் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் கந்தகம் உள்ளது.

சோடியம் டைதயோனைட்டும் (Na2S2O4) சோடியம் டைதயோனேட்டும் (Na2S2O6 ) வெவ்வேறான வகை சேர்மங்களாகும். சோடியம் டைதயோனேட்டு வேதியியல் மற்றும் உயிர் வேதியியலில் பல பயன்பாடுகளைக் கொண்ட சக்திவாய்ந்த ஓர் ஒடுக்கும் முகவராகும். இச்சேர்ம உற்பத்தியாளர்களின் பெயர்ப்பட்டியல்களில் கூட, சோடியம் டைதயோனைட்டு மற்றும் சோடியம் டைதயோனேட்டு பெயர்களுக்கிடைய குழப்பம் பொதுவாக எதிர்கொள்ளப்படுகிறது.

படிகத் திண்மமான இச்சேர்மம் வெண்மை நிறப் பொடியாக காணப்படுகிறது. இதன் உருகுநிலை 190 பாகை செல்சியசு வெப்பநிலையாகும். 267 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது கொதிக்கிறது.

தயாரிப்பு[தொகு]

சோடியம் பைசல்பைட்டை மாங்கனீசு டையாக்சைடைக் கொண்டு ஆக்சிசனேற்றம் செய்வதால் சோடியம் டைதயோனேட்டு உருவாகிறது:[1]

2 NaHSO3 + MnO2 → Na2S2O6 + MnO + H2O

மாறாக சோடியம் சல்பைட்டை வெள்ளி(I) நேர்மின் அயனியை பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்தும் சோடியம் டை தயோனேட்டை தயாரிக்கலாம்:[1]

Na
2
SO
3
+ 2 Ag+
+ SO2−
3
Na
2
S
2
O
6
+ 2 Ag

சோடியம் தயோசல்பேட்டை சோடியம் ஐப்போ குளோரைட்டு கரைசலுடன் சேர்த்து சூடுபடுத்தியும் மற்றொரு தயாரிப்பு முறையில் சோடியம் டை தயோனேட்டை தயாரிக்கலாம்.

கட்டமைப்பு[தொகு]

டைதயோனேட்டு அயனி என்பது ஒருவகையில் கந்தகத்தின் பிரதிநிதியாக கருதப்படுகிறது. இது அடிப்படையான தனிமநிலை கந்தகத்துடன் ஒப்பிடப்படும்போது ஆக்சிசனேற்றப்பட்ட கந்தகமாக தோன்றுகிறது. ஆனால் இது முற்றிலும் ஆக்சிசனேற்றப்படவில்லை. கந்தகத்தை சல்பைடாகக் குறைக்க முடியும் அல்லது சல்பேட்டாக முற்றிலும் ஆக்சிசனேற்றம் செய்ய முடியும். பல இடைநிலை ஆக்சிசனேற்ற நிலைகள் எண்ணற்ற கனிம வேதியியல் மற்றும் கரிம வேதியியல் பகுதிக் கூறுகளுடன் இவ்வினை நிகழ்கிறது. உதாரணமாக கனிம வேதியியல் அயனிகளில் சல்பைட்டும் தயோசல்பேட்டும் அடங்கும். சோடியம் டைதயோனேட்டு ஓர் இருநீரேற்றாக (Na2S2O6) செஞ்சாய்சதுர படிகங்களாக படிகமாகிறது. 90 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும் போது படிகங்களிலுள்ள நீர் இழப்பு ஏற்படுகிறது. இவ்விழப்பால் கட்டமைப்பு அறுகோண கட்டமைப்புக்கு மாறுகிறது[2].

{{chem|Na|2|S|2|O|6 .2|H|2|O} நீரேற்று சேர்மத்தின் பெரிய ஒற்றைப் படிகங்கள் வளர்க்கப்பட்டு தொடர்ச்சியான அலைகளல்லாத சீரொளி நோக்கங்களுக்காக பைக்கோ வினாடி நிறமாலையியலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இ அவுசுகுல் மற்றும் கால்சு என்பவர்கள் வெற்றிகரமாக இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்[3].

பண்புகள்[தொகு]

சோடியம் டைதயோனேட்டு என்பது மிகவும் நிலைப்புத்தன்மை கொண்ட ஒரு சேர்மமாகும். இது பெர்மாங்கனேட்டு, டைகுரோமேட்டு அல்லது புரோமின் போன்ற வேதிவினைக் குழுக்கலால ஆக்சிசனேற்றம் அடைவதில்லை. வலிமையான ஆக்சிசனேற்றும் நிபந்தனைகளில் இது சல்பேட்டாக ஆக்சிசனேற்றம் அடைகிறது. 5 மோலார் கந்தக அமிலத்துடன் மிகையளவு பொட்டாசியம் டைகுரோமேட்டும் சோடியம் டைதயோனேட்டும் சேர்த்து ஒரு மணி நேரத்திற்கு சூடுபடுத்துவது அல்லது மிகையளவு ஐதரசன் பெராக்சைடு சேர்த்து சுடுபடுத்தி பின்னர் அடர் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்த்து சூடுபடுத்துவது உள்ளிட்டவை இந்த வலிமையான ஆக்சிசனேற்றும் நிபந்தனைகளில் அடங்கும்.

சல்பேட்டின் கிப்சு கட்டற்ற ஆற்றல் மாற்றம் -300 கிலோயூல்.மோல் ஆகும். S2O6 எதிர்மின் அயனி ஒரு நல்ல ஒடுக்கும் குழுவைச் சேர்ந்தது அல்ல என கருதப்படுகிறது. எனவே ஆகையால் உலோக அணைவுகளை குறைக்காமல் உயர் ஆக்சிசனேற்ற நிலைகளில் பெரிய நேர்மின் அயனி அணைவுச் சேர்மங்களை ஒற்றை படிகங்களாக உருவாக்க இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 W. G. Palmer (1954). Experimental Inorganic Chemistry. CUP Archive. பக். 361–365. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-05902-X. 
  2. D. W. Larson; A. B. VanCleave (February 1963). "X-Ray Diffraction Data for Alkali Dithionates". Canadian Journal of Chemistry (The National Research Council of Canada) 41 (2). doi:10.1139/v63-035. 
  3. Haussühl, E.; A. A. Kaminskii (2010). Laser Physics 15 (5): 714–727. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_டைதயோனேட்டு&oldid=2877103" இருந்து மீள்விக்கப்பட்டது