சாபுயெலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாபுயெலைட்டு
Zabuyelite
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுLi2CO3
இனங்காணல்
மோலார் நிறை73.89
நிறம்நிறமற்றது
படிக அமைப்புஒற்றைச்சரிவு (2/m), இடக்குழு: C2/c
பிளப்பு{100} சரியானது; {011} நன்று
விகுவுத் தன்மைஉடையும்
மோவின் அளவுகோல் வலிமை3
கீற்றுவண்ணம்வெண்மை
ஒப்படர்த்தி2.09
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (–)
ஒளிவிலகல் எண்nα = 1.4285, nβ = 1.5672, nγ = 1.5743
இரட்டை ஒளிவிலகல்δ = 0.1458
பலதிசை வண்ணப்படிகமைஇல்லை
2V கோணம்25°
மேற்கோள்கள்[1][2][3]

சாபுயெலைட்டு (Zabuyelite) என்பது Li2CO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இலித்தியத்தின் கார்பனேட்டு வகை கனிமமாகும். திபெத்தில் உள்ள சாபுயெ உப்புநீர் ஏரியில் இக்கனிமம் கண்டறியப்பட்டு பின்னர் சாபுயெலைட்டு எனப் பெயரிடப்பட்டது. நிறமற்ற கண்ணாடி போன்ற ஒற்றைச் சரிவு படிகங்களாக இக்கனிமம் உருவாகிறது.

ஏலைட்டு எனப்படும் பாறை உப்பில் இலித்தியம் மிகுந்திருக்கும் உப்புபடர் பாறைகளில் உட்பொருளாக இக்கனிமம் காணப்படுகிறது. சிப்பொடுமென் கனிமத்தின் திரவ உட்பொருளில் திண்மநிலை சாபுயெலைட்டு காணப்படுகிறது. திபெத் பகுதியில் கிடைக்கும் தொடர்புடைய கனிமங்களில் ஏலைட்டு, கேலூசைட்டு மற்றும் நார்துப்பைட்டு முதலான கனிமங்களும் கலந்துள்ளன.

திபெத்தின் உப்புநீர் ஏரியைத் தவிர்த்து சிம்பாப்வே நாட்டின் பைகிட்டா, காமாடிவி, ஐக்கிய அமெரிக்காவின் வடக்குக் கரோலினாவிலுள்ள கிளீவ்லேண்டு மாகாணம் சார்ந்த கிங்சு மௌண்டெய்ன் என்ற சிறிய நகரம் மற்றும் கனடாவின் மானிட்டோபா மாகாணத்திலுள்ள பெர்னிக் ஏரியில் தான்கோ பெகாடைட்டு சுரங்கத்திலும் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபுயெலைட்டு&oldid=2918744" இலிருந்து மீள்விக்கப்பட்டது