இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு
Lithium hexafluorophosphate.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு
இனங்காட்டிகள்
21324-40-3 Yes check.svgY
ChemSpider 146939 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23688915
பண்புகள்
LiPF6
வாய்ப்பாட்டு எடை 151.905 கி/மோல்
தோற்றம் வெண்மையான தூள்
அடர்த்தி 1.5 கி/செ.மீ3
உருகுநிலை
கரையும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H314
P280, P310, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இலித்தியம் டெட்ராபுளோரோபோரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு
பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு
அமோனியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு (Lithium hexafluorophosphate ) என்பது LiPF6. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் படிகத்தூளாக இது காணப்படுகிறது. முனைவுக் கரைப்பான் மற்றும் நீர் தவிர்த்த ஏனைய கனிம வேதியியல் கரைப்பான்கள் ஆகியவற்றில் இதன் கரைதிறன் காரணமாக, வணிக முறையிலான இரண்டாம் நிலை மின்கலன்களில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[1]. குறிப்பாக புரோப்பைலீன் கார்பனேட்டு மற்றும் டைமெத்தாக்சியீத்தேனில் உள்ள இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு இலித்தியம் வகை மின்கலன்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இலித்தியம் உலோகம் போன்ற வலிமையான ஒடுக்கும் முகவர்களுடன் எக்சாபுளோரோ பாசுப்பேட்டு எதிர்மின் அயனி மந்தத்தன்மையுடன் இருப்பதும் இம்முறையில் வெளிப்படுகிறது.

வெப்பச்சூழலில் இவ்வுப்பு நிலைத்தன்மையுடன் காணப்படுகிறது. ஆனால் 200° செல்சியசு வெப்பநிலையில் 50% எடையை இழக்கிறது. 70° செல்சியசு வெப்பநிலையில் பின்வருமாறு நீராற்பகுப்பு அடைகிறது.

LiPF6 + H2O → HF + PF5 + LiOH

Li+ அயனிகளின் இலூயிசு அமிலத்தன்மையால் LiPF6 சேர்மமும் மூவிணைய ஆல்ககால்களின் டெட்ராயைதரோபைரனேற்ற வினையில் வினையூக்கியாகச் செயல்படுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Goodenough, John B.; Kim, Youngsik (9 February 2010). "Challenges for Rechargeable Li Batteries". Chemistry of Materials 22 (3): 587–603. doi:10.1021/cm901452z. 
  2. Nao Hamada; Sato Tsuneo (2004). "Lithium Hexafluorophosphate-Catalyzed Efficient Tetrahydropyranylation of Tertiary Alcohols under Mild Reaction Conditions". Synlett (10): 1802–1804. doi:10.1055/s-2004-829550.