உள்ளடக்கத்துக்குச் செல்

எளிமைப்படுத்தப்பட்ட மூலக்கூறு-உள்ளீடு வரி-நுழைவு அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு எளிமைப்படுத்தப்பட்ட மூலக்கூறு-உள்ளீட்டு வரி-நுழைவு அமைப்பு வரைபடம்

எளிமைப்படுத்தப்பட்ட மூலக்கூறு-உள்ளீட்டு வரி-நுழைவு அமைப்பு (SMILES) என்பது குறுகிய அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையைப் பயன்படுத்தி இரசாயனங்களின் கட்டமைப்பை விவரிப்பதற்கான ஒரு வரி குறியீட்டு வடிவமாகும். இம்முறையில் பெரும்பாலான மூலக்கூறுகளை இரு பரிமாண வரைபடங்கள் அல்லது முப்பரிமாண மாதிரிகளாக வடிவமைக்கலாம். இந்த முறை 1980 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

வரலாறு[தொகு]

1980களில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள துலுத் நகரத்தின் சூழலியல் பிரிவு ஆய்வகத்தின் டேவிட் வெய்னிங்கர் என்ற ஆராய்ச்சியாளரால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.[1][2][3] இதை உருவாக்குவதற்கான ஆரம்ப திட்டத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் நிதியளித்தது.[4][5] இது பின்னர் மற்றவர்களால் மாற்றியமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வரைமுறை[தொகு]

அணுக்கள் அடைப்புக்குறிகளில் இரசாயன தனிமங்களின் சுருக்கமான சின்னங்களால் குறிக்கப்படுகின்றன, எடுத்துக்காட்டாக தங்கம் [Au] எனக்குறிக்கப்படுகிறது. விதிவிலக்காக கரிம இரசாயனங்கள் மற்றும் ஓரிடத்தான்கள் அடைப்புக்குறி இல்லாமால் பயன்படுத்தப்படலாம். கனிமங்கள் இடையான பிணைப்புகள் - = #$:/\. ஆகிய சின்னங்களில் ஒன்றைப் பயன்படுத்தி குறிப்பிடப்படுகின்றன. இரசாயங்களின் வளைய வடிவ கட்டமைப்புகள் ஏதோ ஒரு புள்ளியில் வளையத்தை உடைத்து, பின் நேர் கோட்டில் அணுக்கள் மாற்றும் அதன் பிணைப்புகளுடன் எழுதப்படுகின்றன. இவற்றில் கிளைகள் இருப்பின், அவை அடைப்புக்குறிகளுடன் விவரிக்கப்படுகின்றன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SMILES, a chemical language and information system. 1. Introduction to methodology and encoding rules". Journal of Chemical Information and Computer Sciences 28 (1): 31–6. February 1988. doi:10.1021/ci00057a005. 
  2. "SMILES. 2. Algorithm for generation of unique SMILES notation". Journal of Chemical Information and Modeling 29 (2): 97–101. May 1989. doi:10.1021/ci00062a008. 
  3. "SMILES. 3. DEPICT. Graphical depiction of chemical structures". Journal of Chemical Information and Modeling 30 (3): 237–43. August 1990. doi:10.1021/ci00067a005. 
  4. "Acknowledgements on Daylight Tutorial smiles-etc page". 1998. பார்க்கப்பட்ட நாள் 24 June 2013.
  5. "SMILES Tutorial: What is SMILES?". U.S. EPA. Archived from the original on 28 March 2008. பார்க்கப்பட்ட நாள் 2012-09-23.
  6. Helson HE (1999). "Structure Diagram Generation". In Lipkowitz KB, Boyd DB (eds.). Reviews in Computational Chemistry. Vol. 13. New York: Wiley-VCH. pp. 313–398. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470125908.ch6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-12590-8.