சோடியம் சிலிசைடு
Jump to navigation
Jump to search
சோடியம் சிலிசைடு (Sodium silicide) என்பது (NaSi, Na2Si, Na4Si4) என்ற வாய்ப்பாடு கொண்ட இருதனிம கனிமச் சேர்மமாகும். சோடியம் மற்றும் சிலிக்கான் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. கருப்பு நிறத்தில் அல்லது சாம்பல்நிறத்தில் படிகத் திண்மமாக சோடியம் சிலிசைடு காணப்படுகிறது.[1]
சோடியம் சிலிசைடு, தண்ணீருடன் உடனடியாக வெப்பம் உமிழ்வினை புரிந்து வாயுநிலை ஐதரசன் மற்றும் நீர்த்த சோடியம் சிலிக்கேட்டுகளை உண்டாக்குகிறது. இவ்வெப்ப உமிழ் வினையில் (~175 கியூ•மோல்−1) வெப்பம் வெளிவிடப்படுகிறது.:[2]
- 2 NaSi + 5 H2O → 5 H2 + Na2Si2O5
ஐதரசனை எரிபொருளாகப் பயன்படுத்த உற்பத்தி செய்யப்படும் தொழில் நுட்பத்தில் இம்முறை உபயோகமாகிறது.