உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் சிட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் சிட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
மூன்று இலித்தியம் சிட்ரேட்டு
மூன்று இலித்தியம் 2-ஐதராக்சிபுரொப்பேன்-1,2,3-முக்கார்பாக்சிலேட்டு
இனங்காட்டிகள்
919-16-4 Y
ChEMBL ChEMBL1201170 N
ChemSpider 12932 Y
InChI
  • InChI=1S/C6H8O7.3Li/c7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10;;;/h13H,1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12);;;/q;3*+1/p-3 Y
    Key: WJSIUCDMWSDDCE-UHFFFAOYSA-K Y
  • InChI=1/C6H8O7.3Li/c7-3(8)1-6(13,5(11)12)2-4(9)10;;;/h13H,1-2H2,(H,7,8)(H,9,10)(H,11,12);;;/q;3*+1/p-3
    Key: WJSIUCDMWSDDCE-DFZHHIFOAV
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13520
வே.ந.வி.ப எண் TZ8616000
  • [Li+].[Li+].[Li+].O=C([O-])CC(O)(C([O-])=O)CC(=O)[O-]
பண்புகள்
Li3C6H5O7
வாய்ப்பாட்டு எடை 209.923 கி மோல்−1
தோற்றம் நெடியற்ற வெண் தூள்
உருகுநிலை சிதைவடையும் 105 °C (221 °F; 378 K)
தீங்குகள்
தொழில்சார் நலமும் பாதுகாப்பும்:
முக்கிய இடர்கள்
நச்சு
தீப்பற்றும் வெப்பநிலை N/A
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

இலித்தியம் சிட்ரேட்டு (Lithium citrate) என்பது Li3C6H5O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இலித்தியம் மற்றும் சிட்ரேட்டு அயனிகள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் உளவியல் மருத்துவத்தில் பித்துநிலை, இருமுனையப் பிறழ்வு முதலான நோய்களுக்கான சிகிச்சையில் மனநிலை நிலைப்படுத்தியாக பயன்படுகிறது.[1] இவ்வுப்பில் உள்ள பகுதிப்பொருள்களில், இலித்தியம் விரிவான மருந்தியல் பண்புகளுடன் செயல்திறன் மிக்க பகுதியாக உள்ளது.

இலித்திய நீரில் சிட்ரேட்டு உள்ளிட்ட பல இலித்தியம் உப்புகள் கலந்துள்ளன. மருந்தகங்களில் கிடைக்கும் பழைய இலித்திய கோக் மென்பானத்தில் கொக்கக் கோலா திரவமும் இலித்திய நீரும் கலந்துள்ளது[2]. 7அப் மென்பானம் முதலில் இலித்தியமேற்றிய எலுமிச்சை சுண்ணாம்பு சோடா என்றே பெயரிடப்பட்டது. 1929 இல் இப்பானம் உருவாக்கப்பட்டபோது இதில் இலித்தியம் சிட்ரேட்டு கலந்து இருந்தது. மீத்தங்கல் பிரச்சினை சிகிச்சைக்கு இப்பானமே காப்புரிமை பெற்ற மருந்தாக ஒரு காலத்தில் விற்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டில் 7 அப் பானத்தில் இருந்து இலித்தியம் சிட்ரேட்டு நீக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Medical use". Archived from the original on 2006-06-15. Retrieved 2021-08-14.
  2. "And Now Lithium in Water". Archived from the original on 2014-02-23. Retrieved 2015-12-09.
  3. Gielen, Marcel; Edward R. T. Tiekink (2005). Metallotherapeutic drugs and metal-based diagnostic agents: The use of metals in medicine. John Wiley and Sons. p. 3. ISBN 0-470-86403-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_சிட்ரேட்டு&oldid=4325046" இலிருந்து மீள்விக்கப்பட்டது