இலித்தியம் மெட்டாபோரேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
boric acid, lithium salt
| |
இனங்காட்டிகள் | |
13453-69-5 ![]() | |
ChemSpider | 109911 ![]() |
EC number | 236-631-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 123308 |
SMILES
| |
பண்புகள் | |
LiBO2 | |
வாய்ப்பாட்டு எடை | 49.751 கி/மோல் |
தோற்றம் | வெண்மை நீருறிஞ்சும் ஒற்றைச்சரிவு படிகங்கள் |
அடர்த்தி | 2.223 கி/செ.மீ3 |
உருகுநிலை | |
0.89 கி/100 மி.லி (0 °செ) 2.57 கி/100 மி.லி (20 °செ) 11.8 கி/100 மி.லி (80 °செ) | |
கரைதிறன் | எத்தனாலில் கரையும் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-1022 கியூ/மோல் |
Std enthalpy of combustion ΔcH |
33.9 கியூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
51.3 யூல்/மோல் கெ |
வெப்பக் கொண்மை, C | 59.8 யூல்/மோல் கெ |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
இலித்தியம் மெட்டாபோரேட்டு (Lithium metaborate) என்பது LiBO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும்.
பயன்கள்[தொகு]
இலித்தியம் மெட்டா போரேட்டு அல்லது இலித்தியம் டெட்ரா போரேட்டு (Li2B4O7) அல்லது இவ்விரண்டின் கலவையை போரேட்டு உருக்கிப் பிணைத்தல் மாதிரிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. எக்சு கதிர் உடனொளிர்வு (XRF), அணு உறிஞ்சி நிறமாலைக்காட்டி(AAS), விதிவருநிலை இணைப்பு பிளாசுமா ஒளியுமிழ்வு நிறமாலையியல் (ICP-OES), விதிவருநிலை இணைப்பு பிளாசுமா அணு உமிழ்வு நிறமாலையியல் (ICP-AES), விதிவருநிலை இணைப்பு பிளாசுமா நிறை நிறைமாலையியல் போன்ற ஆய்வுகளுக்குத் தேவையான பல்வேறு மாதிரிகள் தயாரிக்கப் பயனாகிறது. ஒரே நேரத்தில் Cr, As, Cd மற்றும் Pb போன்ற தனிமங்களின் மில்லியனுக்குப் பகுதிகள் நிலையை உறுதிப்படுத்தவும், பிரதான தனிமங்கள் மண்ணில் குறைந்த அளவு கலந்திருப்பதை போரேட்டு உருக்கிப் பிணைத்தல் முறையிலும், முனைவுற்ற கிளர்ச்சிப் பிரிகை அமைப்பு எக்சு கதிர் உடனொளிர்வு நிறமாலையியல் முறையிலும் உறுதிப்படுத்த முடியும்[2].
எங்கெல்லாம் ஆக்சிசன், நேரயனி விகிதவியல் வீதம் (MxOy இல் y/x) ஒன்றைவிட அதிகமாக உள்ளதோ அங்கு இலித்தியம் மெட்டா போரேட்டு SiO2 , Fe2O3 போன்ற அமில ஆக்சைடுகளைக் கரைக்கிறது. இவ்வாறே எங்கெல்லாம் y/x ≤ 1 இருக்கிறதோ அங்கெல்லாம் இலித்தியம் டெட்ராபோரேட்டு CaO, MgO போன்ற கார உலோகங்கள், காரமண் உலோகங்களின் ஆக்சைடுகளைக் கரைக்கிறது. நிறமாலை வேதியியல் பகுப்பாய்வுக்குத் தேவையான பல ஆக்சைடுகள் இலித்தியம் போரேட்டு உப்புகளின் கலவையில் கரைகின்றன[3].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–66, ISBN 0-8493-0594-2
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-09-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-06-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Fernand Claisse, "Fusion and fluxes," Comprehensive Analytical Chemistry: Sample Preparation for Trace Element Analysis, Vol. 41, Elsevier, 2003, p 301-311.