உள்ளடக்கத்துக்குச் செல்

சோடியம் செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் செலீனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் செலீனைடு
இனங்காட்டிகள்
1313-85-5 Y
ChEBI CHEBI:77773 N
EC number 215-212-0
InChI
  • InChI=1S/2Na.Se/q2*+1;-2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 73973
  • [Na+].[Na+].[Se-2]
பண்புகள்
Na2Se
வாய்ப்பாட்டு எடை 124.95 g·mol−1
தோற்றம் வெண்மையிலிருந்து சிவப்பு நிறத்திண்மம்
மணம் unpleaseant
அடர்த்தி 2.625 g cm−3[1]
உருகுநிலை 875 °C (1,607 °F; 1,148 K)
தண்ணீருடன் வினைபுரிகிறது.
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-343 கியூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
105 யூ/மோல் கெ
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் சல்பைடு
சோடியம் தெலூரைடு
சோடியம் ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஐதரசன் செலீனைடு
ஆன்டிமணி செலீனைடு
அலுமினியம் செலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

சோடியம் செலீனைடு (Sodium selenide) என்பது Na2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் மற்றும் செலீனியம் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

-40 பாகை செல்சியசு வெப்பநிலையில், திரவ அமோனியா கரைசலில் உள்ள சோடியத்துடன் செலீனியம் சேர்த்து வினைபுரியச் செய்வதனால் நிறமற்ற திண்மமான சோடியம் செலீனைடைத் தயாரிக்கலாம்.[2]

வாயுநிலையில் உள்ள ஐதரசன் செலீனைடுடன் சோடியம் உலோகத்தைச் சேர்த்து 100 பாகை செல்சியசு வெப்பநிலையில் சூடுபடுத்துவதன் மூலமாகவும் மாற்றுவழியில் சோடியம் செலீனைடு தயாரிக்க முடியும்.

வினைகள்[தொகு]

மற்ற கார உலோக சால்கோசென்கள் போலவே இச்சேர்மமும் தண்ணீரால் எளிதில் தூண்டப்படக்கூடியச் சேர்மமாக, எளிதில் நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு சோடியம் இருசெலீனைடு (NaSeH) மற்றும் ஐதாக்சைடு கலவைகளைத் தருகிறது. Se2− அயனியின் உச்சமான காரத்தன்மையே இந்நீராற்பகுப்பு வினைக்கு காரணமாகிறது.

Na2Se + H2O → NaHSe + NaOH

இதேபோல, சோடியம் செலீனைடு உடனடியாக ஆக்சிசனேற்றம் அடைந்து பல்செலீனைடுகளாக மாறுகிறது. அரையளவு வெண்மை மாதிரிகள் இம்மாற்றத்தை அடையாளப்படுத்துகின்றன.

சோடியம் செலீனைடு அமிலங்களுடன் வினைபுரிந்து நச்சு மிகுந்த ஐதரசன் செலீனைட்டு வாயுவை உற்பத்தி செய்கிறது.

Na2Se + H2O → NaHSe + NaOH

மின்னணு கவரிகளுடன் இது வினைபுரிந்து செலீனியம் சேர்மங்களைக் கொடுக்கிறது. ஆல்க்கைல் ஆலைடுகளுடன் வினைபுரிந்து பல்வேறு வகையான கரிம செலீனியம் சேர்மங்களைக் கொடுக்கிறது.

Na2Se + 2 HCl → H2Se + 2 NaCl

கரிம வெள்ளீயம் மற்றும் கரிம சிலிக்கன் ஆலைடுகளும் இதேபோல வினைபுரிந்து தேவையான பொருட்களைக் கொடுக்கின்றன.

Na2Se + 2 RBr → R2Se + 2 NaBr

பாதுகாப்பு[தொகு]

ஈரம் மற்றும் காற்றினால் சோடியம் செலீனைடு பாதிப்படையும் என்பதால் இச்சேர்மத்தை அவற்றிடமிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. David R. Lide (ed.). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-9084-0.
  2. Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 421.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_செலீனைடு&oldid=2049231" இலிருந்து மீள்விக்கப்பட்டது