சோடியம் பெர்யிரேனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் பெர்யிரேனேட்டு
இனங்காட்டிகள்
13472-33-8 Y
ChEMBL ChEMBL444819 N
InChI
  • InChI=1S/Na.4O.Re/q+1;;;;-1;
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5107658
வே.ந.வி.ப எண் WD3675000
  • [O-][Re](=O)(=O)=O.[Na+]
பண்புகள்
NaReO4
வாய்ப்பாட்டு எடை 273.194 கி/மோல்
தோற்றம் வெண்மையான படிகத்தூள்
அடர்த்தி 5.39 கி/செ.மீ3
உருகுநிலை 414 °C (777 °F; 687 K)
103.3 கி/100 மி.லி (0 °செ)
145.3 கி/100 மி.லி (30 °செ)
173.0 கி/100 மி.லி (50 °செ)
கரைதிறன் எத்தனாலில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிகரணி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

சோடியம் பெர்யிரேனேட்டு (Sodium perrhenate) என்பது NaReO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். சோடியம் இரேனேட்டு(VII) என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. வெண்மை நிறத்தில் படிகத்திண்மமாகக் காணப்படும் இது நீரில் கரைகிறது. இரேனியம் சேர்மங்கள் பலவற்றைத் தயாரிக்க இதுவொரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. சோடியம் பெர்குளோரேட்டு, சோடியம் பெர்மாங்கனேட்டு போன்ற சேர்மங்களின் கட்டமைப்பை ஒத்ததாக சோடியம் பெர்யிரேனேட்டின் கட்டமைப்பும் உள்ளது.

தயாரிப்பு[தொகு]

இரேனியம்(VII) ஆக்சைடுடன் ஒரு காரம் சேர்த்து அல்லது பொட்டாசியம் உப்பிலிருந்து அயனிப் பரிமாற்றம் செய்து சூடுபடுத்துவதால் சோடியம் பெர்யிரேனேட்டு தயாரிக்கப்படுகிறது.

வினைகள்[தொகு]

எத்தனாலில் உள்ள சோடியத்துடன் இது வினைபுரிந்து நோனா ஐதரிடோயிரேனேட்டு சேர்மத்தை உருவாக்குகிறது [1]. இதேபோல பாலிசல்பைடு கரைசல்களுடன் சேர்ந்து வினைபுரிந்து டெட்ராதயோயிரேனேட்டைக் கொடுக்கிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. A. P. Ginsberg, C. R. Sprinkle, Nonahydridorhenate Salts" Inorganic Syntheses 1972, vol. 13, pp. 219–225. எஆசு:10.1002/9780470132449.ch45 10.1002/9780470132449.ch45
  2. Goodman, J. T.; Rauchfuss, T. B. (2002). "Tetraethylammonium-tetrathioperrhenate [Et4N][ReS4]". Inorganic Syntheses 33: 107–110. doi:10.1002/0471224502.ch2. 

மேலும் படிக்க[தொகு]

  • Ahluwalia, J. C.; Cobble, J. W. (1 December 1964). "The Thermodynamic Properties of High Temperature Aqueous Solutions. II. Standard Partial Molal Heat Capacities of Sodium Perrhenate and Perrhenic Acid from 0 to 100o". Journal of the American Chemical Society 86 (24): 5377–5381. doi:10.1021/ja01078a001. 
  • Dwek, Raymond A.; Luz, Z.; Shporer, M. (1 May 1970). "Nuclear magnetic resonance of aqueous solutions of sodium perrhenate". The Journal of Physical Chemistry 74 (10): 2232–2233. doi:10.1021/j100909a038. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_பெர்யிரேனேட்டு&oldid=3850396" இலிருந்து மீள்விக்கப்பட்டது