இலித்தியம் அமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் அமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் அமைடு
வேறு பெயர்கள்
இலித்தமைடு
இனங்காட்டிகள்
7782-89-0 N
ChemSpider 22939 Y
InChI
  • InChI=1S/Li.H2N/h;1H2/q+1;-1 Y
    Key: AFRJJFRNGGLMDW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Li.H2N/h;1H2/q+1;-1
    Key: AFRJJFRNGGLMDW-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24532
SMILES
  • [Li+].[NH2-]
பண்புகள்
LiNH
2
வாய்ப்பாட்டு எடை 22.96 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.178 கி/செ.மீ3
உருகுநிலை 375 °C (707 °F; 648 K)
கொதிநிலை 430 °C (806 °F; 703 K) சிதைவடையும்
வினைபுரியும்
கரைதிறன் எத்தனாலில் சிறிதளவு கரையும்
அமோனியாவில் கரையாது
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-182 கி.யூ/மோல்
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

இலித்தியம் அமைடு (Lithium amide) என்பது Li+NH2−, என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியல் சேர்மமாகும். இலித்தியம் நேர்மின் அயனியும் அதனுடைய இணை காரமான அமோனியமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வெள்ளை நிறத்தில் நான்முக படிகவமைப்புடன் இச்சேர்மம் காணப்படுகிறது.

இலித்தியம் அமைடுகள்[தொகு]

எதிர்மின்மம் சார்ந்த இணை காரங்களின் அமீன்கள் அமைடுகள் என்றழைக்கப்படுகின்றன. எனவே இலித்தியம் அமைடுகள் என்பதை அமீன்களின் இலித்தியம் உப்புகள் என்றும் அழைக்கலாம். உதாரணம்; Li+NR2−. இலித்தியம் அமைடுக்கு ஒரு உதாரணமாகக் கூறப்படும் இலித்தியம் இருசமபுரோபைலமைடு பொதுவாக, பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இலித்தியம் உலோகத்தை திரவ அமோனியாவுடன் சேர்ப்பதால் இலித்தியம் அமைடு உருவாகிறது.

2Li + 2NH3 → 2LiNH2 + H2

இங்ஙனமே, அமோனியாவிற்குப் பதிலாகத் தேவையான உகந்த அமீனை பதிலிட்டு இலித்தியம் அமைடுகள் பொதுவாகத் தயாரிக்கப்படுகின்றன.

2Li + 2R2NH → 2LiNR2 + H2

இலித்தியம் அமைடுகள் பொதுவாக அதிக வினைத்திறன் மிக்க காரங்களாகச் செயல்படுகின்றன. இலித்தியம் அமைடில் உள்ள நைட்ரசன் அணுவை தடை செய்யாமல் இருக்கும்வரை இவைகளால் மின்னணு மிகுபொருட்களாகவும் செயல்பட முடியும்.

உதாரணங்கள்[தொகு]

2,2,6,6- நான்குமெத்தில்பிப்பெரிடினின் இலித்தியம் உப்பு நாற்படியாக படிகமாக்கப்பட்டுள்ளது.

நாற்படி இலித்தியம் அமைடு.[1]

மறுபுறத்தில் இலித்தியம் வழிபொருள் இரு-(1-பினைல் எத்தில்) அமைன் முப்படியாக படிகமாக்கப்பட்டுள்ளது.

முப்படி இலித்தியம் அமைடு.[2]

உலோக ஆல்காக்சைடுகளின் கலப்பு சில்படிமங்கள் மற்றும் அமைடுகள்[3] ஆகியவற்றையும் உருவாக்க முடியும். இவை மீவீரிய காரங்களுடன் தொடர்புடையவையாக கருதப்படுகின்றன. உலோக ஆல்காக்சைடுகள் மற்றும் ஆல்கைல்கள் இவற்றின் கல்வையே மீவீரிய காரங்கள் எனப்படுகின்றன. அமைடில் உள்ள நைட்ரசன் அணு இலித்தியத்துடன் சிக்மா பிணைப்பாகவும், தனித்த இரட்டை நைட்ரசன் அணுக்கள் வேறொரு உலோக மையத்துடனும் பிணையுமெனில் வளைய சில்படிமங்கள் தோன்றுகின்றன.

பியூட்டைல் இலித்தியம் போன்ற பிற கரிம இலித்தியம் சேர்மங்கள் உயர்வரிசை தொகுப்பினங்கள் வழியாக செயல்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. M.F. Lappert, M.J. Slade, A. Singh, J.L. Atwood, R.D. Rogers and R. Shakir (1983). "Structure and reactivity of sterically hindered lithium amides and their diethyl etherates: crystal and molecular structures of [Li{N(SiMe3)2}(OEt2)]2 and tetrakis(2,2,6,6-tetramethylpiperidinatolithium)". Journal of the American Chemical Society 105 (2): 302–304. doi:10.1021/ja00340a031. 
  2. D.R. Armstrong, K.W. Henderson, A.R. Kennedy, W.J. Kerr, F.S. Mair, J.H. Moir, P.H. Moran and R. Snaith, Dalton Transactions, 1999, 4063.
  3. K.W. Henderson, D.S. Walther and P.G. Williard (1995). "Identification of a Unimetal Complex of Bases by 6Li NMR Spectroscopy and Single-Crystal Analysis". Journal of the American Chemical Society 117 (33): 8680–8681. doi:10.1021/ja00138a030. 

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_அமைடு&oldid=2183872" இலிருந்து மீள்விக்கப்பட்டது