பொட்டாசியம் அசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் அசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் அசைடு
இனங்காட்டிகள்
20762-60-1 Y
InChI
 • InChI=1S/K.N3/c;1-3-2/q+1;-1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10290740
SMILES
 • [N-]=[N+]=[N-].[K+]
பண்புகள்
KN
3
வாய்ப்பாட்டு எடை 81.1184 கி/மோல்
தோற்றம் நிறமற்ற படிகங்கள்[1]
அடர்த்தி 2.038 கி/செ.மீ3
[1]
உருகுநிலை 350 °C (662 °F; 623 K) (in vacuum)[1]
கொதிநிலை சிதைவடையும்
41.4 கி/100 மி,லி (0 °செ)
50.8 கி/100 மி.லி (20 °செ)
105.7 கி/100 மி.லி (100 °செ)
கரைதிறன் எத்தனாலில் கரையும்
ஈதரில் கரையாது
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-1.7 கியூ/மோல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அதிக நச்சு, அதிகமாக சூடாக்கினால் வெடிக்கும்
Lethal dose or concentration (LD, LC):
27 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் அசைடு, தாமிர(II) அசைடு, ஈய(II)அசைடு, வெள்ளி அசைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பொட்டாசியம் அசைடு (Potassium azide) என்பது KN3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் தண்ணீரில் கரைகிறது. ஆய்வுக்கூடங்களில் வினைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மண்ணில் நைட்ரசன் ஏற்றத்தை தடுக்கும் வேதிப்பொருளாக விளங்குகிறது[3].

அமைப்பு[தொகு]

KN3, RbN3, CsN3, மற்றும் TlN3 ஆகிய சேர்மங்கள் யாவும் ஒரே வகையான நாற்கோண மூலக்கூற்று [4]அமைப்பிலேயே படிகமாகின்றன. அசைடானது நேரெதிரான மறைக்கப்பட்ட திசையமைவுகளில் எட்டு நேர்அயனிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இந்நேர் அயனிகள் விளிம்புநிலை எட்டு நைட்ரசன் மையங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன[5].

K,Rb,Cs,TlN3ஆகியனவற்றில் அசைடின் ஒருங்கிணைவு

தயாரிப்பு மற்றும் வினைகள்[தொகு]

பொட்டாசியம் கார்பனேட்டை அவ்விடத்தில்[6] உருவான ஐதரசோயிக் அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்துவதால் பொட்டாசியம் அசைடு தயாரிக்கலாம். மாறாக இதனையொத்த சோடியம் அசைடோ விசுலைசெனசு செயல்முறையில் சோடியம் அசைடையும் நைட்ரசு ஆக்சைடையும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது[7] .

சூடுபடுத்தும் போது அல்லது புற ஊதாக்கதிர் கதிர்வீச்சுக்கு உட்படுத்தும் போது பொட்டாசியம் உலோகமாகவும் நைட்ரசன் வாயுவாகவும் சிதைவடைகிறது[8] . கார உலோக அசைடுகள் சிதைவடையும் வெப்ப அளவுகள் வருமாறு: NaN3 (275 °செ), KN3 (355 °செ), RbN3 (395 °செ), CsN3 (390 °செ).[9]

தீங்குகள்[தொகு]

சோடியம் அசைடு போலவே பொட்டாசியம் அசைடும் நச்சுத்தன்மை மிக்கது ஆகும். இதனுடன் தொடர்புடைய சோடியம் அசைடின் அதிகபட்ச அடர்த்தி ஏற்பு மதிப்பு மில்லியன் பகுதிகளுக்கு 0.07 பகுதிகளாகும். அசைடுகளின் நச்சுத்தன்மை அவற்றின் சைட்டோகுரோம் ஆக்சிடேசு எதிர்ப்பில் இருந்து தோன்றுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Dale L. Perry; Sidney L. Phillips (1995). Handbook of inorganic compounds. CRC Press. பக். 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-8671-3. https://archive.org/details/handbookofinorga0000unse. 
 2. http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/20762-60-1
 3. T. D. Hughes; L. F. Welch (1970). "Potassium Azide as a Nitrification Inhibitor". Agronomy Journal (American Society of Agronomy) 62: 595–599. doi:10.2134/agronj1970.00021962006200050013x. 
 4. Khilji, M. Y.; Sherman, W. F.; Wilkinson, G. R. (1982). "Variable temperature and pressure Raman spectra of potassium azide KN
  3
  "
  . Journal of Raman Spectroscopy 12 (3): 300–303. doi:10.1002/jrs.1250120319. Bibcode: 1982JRSp...12..300K. https://archive.org/details/sim_journal-of-raman-spectroscopy_1982-06_12_3/page/300.
   
 5. Ulrich Müller "Verfeinerung der Kristallstrukturen von KN3, RbN3, CsN3 und TIN3" Zeitschrift für anorganische und allgemeine Chemie 1972, Volume 392, 159–166. எஆசு:10.1002/zaac.19723920207
 6. P. W. Schenk "Alkali Azides from Carbonates" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 475.
 7. Horst H. Jobelius, Hans-Dieter Scharff "Hydrazoic Acid and Azides" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a13_193
 8. Tompkins, F. C.; Young, D. A. (1982). "The Photochemical and Thermal Formation of Colour Centres in Potassium Azide Crystals". Proceedings of the Royal Society of London. Series A, Mathematical and Physical Sciences 236 (1204): 10–23. 
 9. E. Dönges "Alkali Metals" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 475.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொட்டாசியம்_அசைடு&oldid=3581446" இலிருந்து மீள்விக்கப்பட்டது