உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பொட்டாசியம்டிரையாக்சோகுளோரோகுரோமேட்டு[1][2][3] பெலிகாட் உப்பு, பெலிகாட்டின் உப்பு.
இனங்காட்டிகள்
16037-50-6
பப்கெம் 23689123
பண்புகள்
ClCrKO3
வாய்ப்பாட்டு எடை 174.54 g·mol−1
தோற்றம் ஆரஞ்சு நிறத்திண்மம்
அடர்த்தி 2.5228 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு (Potassium chlorochromate) என்பது KCrClO3 [4] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். குளோரோகுரோமேட்டு [CrO3Cl]− அயனியின் பொட்டாசியம் உப்பு பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு எனக் கருதப்படுகிறது. ஆரஞ்சு நிறமுடைய இச்சேர்மம் தண்ணீரில் கரையும். கரிமச் சேர்மங்களை ஆக்சிசனேற்றம் செய்யவும் அரிதாக இது பயன்படுத்தப்படும். கண்டுபிடிப்பாளர் யூகின் மெல்ச்சியர் பெலிகாட் என்பவரின் நினைவாக சில சமயங்களில் இதை பெலிகாட் உப்பு என்று அழைக்கிறார்கள்.

தயாரிப்பு

[தொகு]

பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் ஐதரோகுளோரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தி பொதுவாக பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு தயாரிக்கப்படுகிறது. குரோமைல் குளோரைடுடன் பொட்டாசியம் குரோமேட்டைச் சேர்த்து பொட்டாசியம் குளோரோகுரோமேட்டைத் தயாரிக்கும் பாதை மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு முறையாகக் கருதப்படுகிறது:[5]

K2CrO4 + CrO2Cl2 → 2 KCrO3Cl.

கட்டமைப்பு

[தொகு]

நான்முக குளோரோகுரோமேட்டு எதிர்மின் அயனியை இவ்வுப்பு கொண்டுள்ளது. சராசரியாக Cr=O பிணைப்பின் நீளம் 159 பைக்கோமீட்டர்களும் மற்றும் Cr-Cl இடையிலான இடைவெளி 219 பைக்கோ மீட்டர்களுமாக உள்ளது[6].

வினைகள்

[தொகு]

காற்றில் நிலைப்புத்தன்மையுடன் இருந்தாலும் இச்சேர்மத்தின் நீரிய கரைசல்கள் நீராற்பகுப்புக்கு உட்படுகின்றன. அடர் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது இது குரோமைல் குளோரைடாக மாறுகிறது. 18-கிரௌன்-6 என்றழைக்கப்படும் 1,4,7,10,13,16- எக்சாக்சாசைக்ளோக்டாடெக்கேன் என்ற கரிமச் சேர்மத்துடன் சேர்த்து சூடுபடுத்தும்போது கொழுப்பு விரும்பி உப்பான [K(18-கிரௌன்-6]CrO3Cl.உருவாகிறது[7].

பென்சைல் ஆல்ககாலை ஓர் அமில வினையூக்கியின் முன்னிலையில் இது ஆக்சிசனேற்றம் செய்கிறது. இதனுடன் தொடர்புடைய உப்பான பிரிடினியம் குளோரோகுரோமேட்டு பொதுவாக இவ்வினையில் பயன்படுத்தப்படுகிறது[8].

பாதுகாப்பு

[தொகு]

உடலுக்குள் செலுத்தப்பட்டால் பொட்டாசியம் குளோரோகுரோமேட்டு ஒரு நச்சாக உடலை பாதிக்கிறது. பல்வேறு தீங்குகளுடன் உடலை நஞ்சாக்குவதோடு சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. மனித தோலில் பட நேர்ந்தாலும் குறிப்பாக சுவாசிக்க நேர்ந்தாலும் ஒவ்வாமை, கண் எரிச்சல், தோல் அரிப்பு முதலான பாதிப்புகள் உண்டாகின்றன [9].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Synonyms Of Chemicals பரணிடப்பட்டது 2007-08-27 at the வந்தவழி இயந்திரம். Csudh.edu (2003-09-16). Retrieved on 2011-06-01.
  2. Merck & Co (1930). Merck's index: an encyclopedia for the chemist, pharmacist and physician. Merck & Co. பார்க்கப்பட்ட நாள் 1 June 2011.
  3. Arthur Rose; Elizabeth Rose (1966). The Condensed chemical dictionary. Reinhold. பார்க்கப்பட்ட நாள் 1 June 2011.
  4. Norm Stanley Colorful Chromium Compounds, 23 August 2002
  5. Harry H. Sisler; Louis E. Marchi (1946). "Potassium Monochlorochromate". Inorg. Synth. 2: 208–210. doi:10.1002/9780470132333.ch64. 
  6. U. Kolitsch (2002). "Redetermination of potassium chlorochromate, KCrO3Cl". Acta Crystallogr. E58 (11): i105–i107. doi:10.1107/S1600536802019396. 
  7. Kotlyar, Sergei A.; Zubatyuk, Roman I.; Shishkin, Oleg V.; Chuprin, Gennady N.; Kiriyak, Andrey V.; Kamalov, Gerbert L. (2005). "(18-Crown-6)potassium chlorochromate". Acta Crystallographica E 61 (2): m293–m295. doi:10.1107/S1600536805000085. 
  8. Özgün, B.; Pek, A. (1991). "Kinetics and mechanism of the oxidation of benzyl alcohol by potassium chlorochromate". Reaction Kinetics & Catalysis Letters 43 (2): 589–594. doi:10.1007/BF02064733. https://archive.org/details/sim_reaction-kinetics-and-catalysis-letters_1991-04_43_2/page/589. 
  9. Susan Shaw; Susan D. Shaw; Monona Rossol (1 September 1991). Overexposure: health hazards in photography. Allworth Communications, Inc. pp. 122–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9607118-6-4. பார்க்கப்பட்ட நாள் 1 June 2011.