பொட்டாசியம் சயனேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
590-28-3 ![]() | |
ChEBI | CHEBI:38904 ![]() |
ChemSpider | 11053 ![]() |
EC number | 209-676-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19067 ![]() |
பப்கெம் | 11378442 |
வே.ந.வி.ப எண் | GS6825000 |
| |
பண்புகள் | |
KOCN | |
வாய்ப்பாட்டு எடை | 81.1151 கி/மோல் |
தோற்றம் | வெண்மை, படிகத்தூள் |
அடர்த்தி | 2.056 கி/செ.மீ3 |
உருகுநிலை | 315 °C (599 °F; 588 K) |
கொதிநிலை | ~ 700 °C (1,292 °F; 973 K) சிதைவடையும் |
75 கி/100 மி.லி | |
கரைதிறன் | ஆல்க்காலிக் சிறிதளவு கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணம் |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R22 |
S-சொற்றொடர்கள் | S24, S25 |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
841 மி.கி/கி.கி (வாய்வழி, எலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் சயனேட்டு (Potassium cyanate) என்பது KOCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாய்ப்பாட்டை KCNO என்றும் எழுதுவார்கள். பொட்டாசியம் சயனேட்டு நிறமற்ற ஒரு திண்மமாகும். பல வேதிச் சேர்மங்கள் குறிப்பாக களைக் கொல்லிகள் தயாரிப்பதற்கு இவ்வுப்பு பயன்படுகிறது. 2006 ஆம் ஆண்டு மட்டும் உலக அளவில் சோடியம், பொட்டாசியம் உப்புகள் 20000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன[1].
கட்டமைப்பு
[தொகு]சயனேட்டு எதிர்மின் அயனி கார்பன் டை ஆக்சைடுக்கு நிகரான சம எலக்ட்ரான் அமைப்பை கொண்டுள்ளது. அசைடு எதிர்மின் அயனியை போல நேர்கோட்டு அமைப்பையும் பெற்றுள்ளது. C-N பிணைப்புகளுக்கு இடையே 121 பைக்கோமீட்டர் இடைவெளி உள்ளதால் இது சயனைடை விட 5 பைக்கோமீட்டர் நீளம் அதிகமாக கொண்ட பிணைப்பாகக் கருதப்படுகிறது[2][3].பொட்டாசியம் சயனேட்டும் பொட்டாசியம் அசைடும் சமகட்டமைப்பை ஏற்றவையாக உள்ளன[4].

பயன்கள்
[தொகு]பெரும்பாலான வேதியியல் பயன்பாடுகளுக்கு, பொட்டாசியம் மற்றும் சோடியம் உப்புகள் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. . பொட்டாசியம் சயனேட்டு பெரும்பாலும் சோடியம் உப்புக்காக விரும்பப்படுகிறது, இது தண்ணீரில் குறைவாக கரையக்கூடியது மற்றும் தூய்மையான வடிவத்திலும் கிடைக்கிறது. பொட்டாசியம் சயனேட்டு, யூரியா வழித்தோன்றல்கள், செமிகார்பசைடுகள், கார்பமேட்டுகள் மற்றும் ஐசோசயனேட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கரிம தொகுப்பு வினைகளுக்கான அடிப்படை மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஐதராக்சியூரியா என்ற மருந்தை தயாரிக்க பொட்டாசியம் சயனேட்டு பயன்படுத்தப்படுகிறது. இது உலோகங்களின் வெப்பப் பதனிடல் செயல்முறையிலும் பயன்படுத்தப்படுகிறது. பெர்ரைட்டு எஃகை நைட்ரோகரியூட்டல் செயல்முறையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்>
பிணி நீக்கும் பயன்கள்
[தொகு]பொட்டாசியம் சயனேட்டு சில நிபந்தனைகளின் கீழ் அருவாள் வகை எரித்ரோசைட்டுகளின் சதவீதத்தைக் குறைக்கப் பயன்படுகிறது, மேலும் இவற்றின் குறைபாடுகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது. வேதித்துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணாடிக் குழாயில் ஒரு நீரிய கரைசலில் ஆக்சிசனேற்ற நீக்கத்தின்போது மனித எரித்ரோசைட்டுகளைக் கொண்ட ஈமோகுளோபின்களிலிருந்து .அருவாள் அணுவை மீளமுடியாமல் தடுக்கிறது. பறவைகள் மற்றும் பாலூட்டிகள் இரண்டிலும் சயனேட்டு உப்புகள் மற்றும் ஐசோசயனேட்டுகள் ஒட்டுண்ணி நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்பதை போல கால்நடை மருத்துவர்கள் பொட்டாசியம் சயனேட்டையும் பயனுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்[6].
தயாரிப்பும் வினைகளும்
[தொகு]பொட்டாசியம் கார்பனேட்டுடன் யூரியாவை சேர்த்து 400 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்குவதன் மூலம் KOCN தயாரிக்கப்படுகிறது.
- 2 OC(NH2)2 + K2CO3 → 2 KOCN + (NH4)2CO3.
இவ்வினை ஒரு திரவத்தை உருவாக்குகிறது. இடைநிலை வேதிப்பொருட்கள் மற்றும் பையூரெட், சயனூரிக் அமிலம், மற்றும் பொட்டாசியம் அல்லோபேனேட்டு, வினையில் ஈடுபடாத தொடக்க வினைபொருள் யூரியா போன்ற அசுத்தங்கள் இத்திரவத்தில் கலந்துள்ளன. ஆனால் இந்த இனங்கள் 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் நிலையற்றவையாகும்[1]. புரோட்டானேற்றம் செய்யப்பட்டால் அறை வெப்பநிலையில் இரண்டு இயங்கு சமநிலை படிகள் 97:3 என்ற விகிதத்தில் உருவாகின்றன, (HNCO மற்றும் NCOH). முதலாவது ஒருமம் முப்படியாக மாற்றமடைந்து சயனூரிக் அமிலத்தை கொடுக்கிறது.
பண்புகள்
[தொகு]பொட்டாசியம் கார்பனேட் படிகங்கள் உருகும் செயல்முறையால் அழிக்கப்படுகின்றன, இதனால் யூரியா கிட்டத்தட்ட அனைத்து பொட்டாசியம் அயனிகளுடனும் வினைபுரிந்து பொட்டாசியம் சயனேட்டாக, உப்பு வடிவத்தில் இருப்பதை விட அதிக விகிதத்தில் உருவாகிறது. இது 95% க்கு மேல் அதிக தூய்மை அடைவதையும் எளிதாக்குகிறது. ஆக்சிசன் முன்னிலையில் அல்லது ஈயம், வெள்ளீயம் அல்லது மாங்கனீசு டை ஆக்சைடு போன்ற எளிதில் குறைக்கப்பட்ட ஆக்சைடுகள் முன்னிலையில் அதிக வெப்பநிலையில் பொட்டாசியம் சயனைடை ஆக்சிசனேற்றுவதன் மூலமும் இதை உருவாக்கமுடியும்.. நீரிய கரைசலில் ஐப்போகுளோரைட்டுகள் அல்லது ஐதரசன் பெராக்சைடுடன் வினைபுரிவதன் மூலமும் இதை தயாரிக்கலாம். கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் நிக்கல் கொள்கலன்களில் கார உலோக சயனைடுடன் ஆக்சிசனை வினைபுரிய அனுமதிப்பதன் மூலமும், பெர்ரோ சயனைடை ஆக்சிசனேற்றுவதன் மூலமும் இது உருவாகலாம். பொட்டாசியம் சயனைடை ஈய ஆக்சைடுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலமும் இதை உருவாக்க முடியும்[7].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Peter M. Schalke1, "Cyanates, Inorganic Salts" Ullmann's Encyclopedia of Industrial Chemistry2006, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a08_157.pub2. Article Online Posting Date: July 15, 2006
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. ISBN 0080379419.
- ↑ Jursík, F. (2001). Anorganická chemie nekovů (1. vydání). VŠCHT Praha. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 80-7080-417-3
- ↑ T. C. Waddington "Lattice parameters and infrared spectra of some inorganic cyanates" J. Chem. Soc., 1959, 2499-2502. எஆசு:10.1039/JR9590002499
- ↑ Ulrich Müller "Verfeinerung der Kristallstrukturen von KN3, RbN3, CsN3 und TIN3" Zeitschrift für anorganische und allgemeine Chemie 1972, Volume 392, 159–166. எஆசு:10.1002/zaac.19723920207
- ↑ "Potassium Cyanate"
- ↑ "Potassium cyanate" https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=11378442&loc=ec_rcs