யூரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Urea
Urea Structural Formula V2.svg
Urea-3D-balls.png
Urea-3D-vdW.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Diaminomethanal (as organic compound), Carbonyl diamide (as inorganic compound)
வேறு பெயர்கள்
Carbamide, carbonyl diamide, carbonyldiamine
இனங்காட்டிகள்
57-13-6 N
ChemSpider 1143
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 1176
வே.ந.வி.ப எண் YR6250000
பண்புகள்
CH4N2O
வாய்ப்பாட்டு எடை 60.06 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 1.32 g/cm3
உருகுநிலை
108 g/100 ml (20 °C)
167 g/100 ml (40 °C)
251 g/100 ml (60 °C)
400 g/100 ml (80 °C)
733 g/100 ml (100 °C)
காரத்தன்மை எண் (pKb) pKBH+ = 0.18[1]
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 4.56 D
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் JT Baker
தீப்பற்றும் வெப்பநிலை தீப் பறாதது
தொடர்புடைய சேர்மங்கள்
ureas
தொடர்புடையவை
Thiourea
Hydroxycarbamide
தொடர்புடைய சேர்மங்கள் கார்பாமைடு பெராக்சைடு
யூரியா பாசுப்பேட்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

யூரியா அல்லது கார்பமைடு (carbamide) என்பது ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இதன் வேதியியல் குறியீடு (NH2)2CO. இந்த மூலக்கூறில் இரண்டு அமைன் (-NH2) பகுதிகள், ஒரு கார்போனைல் செயல் தொகுதியினால் (-CO-) இணைக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் நைட்ரசன் உள்ள சேர்மங்களைச் செரிக்கும்போது அவற்றின் வளர்சிதை மாற்றத்தில் யூரியா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதுவே பாலூட்டிகளின் சிறுநீரில் கலந்திருக்கும் நைட்ரசன் உள்ள முதன்மையான பொருளாகும். திண்மமாக இருக்கும்போது, நிறமற்றதாகவும், மணமற்றதாகவும் இருக்கும் (ஆனாலும் நீருடன் சேரும்போது உருவாகும் அமோனியா, நீராவியுடன் இணைந்து கடுமையான மணத்தைத் தோற்றுவிக்கும்). காடியாவோ காரமாகவோ இருப்பதில்லை, நீரில் நன்றாகக் கரையும். பொதுவாக நச்சுத்தன்மையற்றது யூரியா உரங்களில் எளிய நைட்ரசன் மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. வேதித் தொழிற்சாலைகளிலும் பல பொருட்களின் மூலப்பொருளாக பயன்படுகிறது. ஃப்ரைடிரிக் வோஃகுலர் என்பவர் 1828 ஆம் ஆண்டு இந்த சேர்மத்தை கனிம செயல்முறைகளின் மூலம் செயற்கை முறையில் படைக்கப்ப்பட்டது வேதியியலின் மிக முக்கிய ஒரு மைல்கல்லாகும்.

இதே செயல் தொகுதி RR'N-CO-NRR' யைச் சேர்ந்த பிற வேதிச் சேர்மங்களை வகைப்படுத்தவும் யூரியா மற்றும் கார்பமைடு என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது இரண்டு கரிம அமைன் பகுதிகளுடன் இணைந்த கார்பனைல் குழுக்கள் இதற்கான எடுத்துக்காட்டுகளாவன: கார்பமைடு பெராக்சைடு, அல்லன்டோய்ன் மற்றும் ஹைடான்டோய்ன், யூரியா பையூரெட்களுடன் நெருக்கமாக தொடர்புடையது மற்றும் அமைடுகள், கார்பாமேட்கள், டைமைடுகள், கார்பாடிமைடுகள் மற்றும் தியோகார்பாமைடுகள் போன்றவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது.

வரலாறு[தொகு]

1773 ஆம் ஆண்டு பிரெஞ்சு வேதியியலாளர், ஹிலாரி ரூல்லே என்பவர் முதன்முதலாக யூரியாவை சிறுநீரில் கண்டறிந்தார். 1828 ஆம் ஆண்டில் ஜெர்மானிய வேதியியலாளர் ஃப்ரைடெரிக் வோஹ்லர், வெள்ளி சயனேட்டை அம்மோனியம் குளோரைடுடன் வினைப்படுத்தி யூரியாவைப் பெற்றார். இது உண்மையில் அம்மோனியம் சயனேட்டை உருவாக்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியாகும்:[2]

AgNCO + NH4Cl → (NH2)2CO + AgCl

இதுவே கனிம தொடக்க பொருட்களைக் கொண்டு உயிரி பொருட்கள் எதுவுமின்றி கரிம சேர்மங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் முறையாகும். இந்த சோதனையின் முடிவுகள் விரிவாக உயிர் விசைக் கொள்கையில் மறுக்கப்படுகிறது: அதாவது வாழும் உயிரினங்களில் உள்ள வேதிப்பொருட்கள் அடிப்படையிலேயே உயிரற்ற பொருட்களிலிருந்து வேறுபட்டுள்ளது. இந்த அகப்பார்வையானது கரிம வேதியியலுக்கு முக்கியமானதாகும். இந்த கண்டுபிடிப்பால் வோஹ்லர் வெற்றியைப் பற்றி பெர்ஜீலியஸுக்கு எழுதினார்: "மனிதனின் அல்லது நாயின் சிறுநீரகத்தின் உதவியின்றி என்னால் யூரியாவை உருவாக்க முடியும் என்று உன்னிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். அம்மோனியம் சயனேட் என்பது யூரியாவாகும்". இந்த கண்டுபிடிப்பின் காரணமாக வோஹ்லர் கரிம வேதியியலின் தந்தை என்று பலராலும் கருதப்படுகிறார்.

உடலியக்கவியல்[தொகு]

யூரியா சுழற்சியின் ஒரு பகுதியாக பல உயிரிகளின் உடலில் யூரியா உருவாக்கப்படுகிறது. இது அமினோ அமிலங்கள் ஆக்சிஜனேற்றம் அடைவது அல்லது அமோனியாவிலிருந்து உருவாகக்கூடும். இந்த சுழற்சியில் அமோனியா மற்றும் எல்-அஸ்பார்டேட்டிலிருந்து வரும் அமினோ குழுக்கள் யூரியாவாக மாறுகின்றன. அதே நேரத்தில் எல்-ஆர்னிதின், சிட்ருலின், எல்-ஆர்ஜினினோசக்சினேட் மற்றும் எல்-ஆர்ஜினின் ஆகியவை இடைநிலைப் பொருட்களாக பயன்படுகின்றன. யூரியா உற்பத்தி கல்லீரலில் நடைபெறுகிறது. இது என் - அசிடைல்குளூடாமேட்டால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. யூரியா ரத்தத்தில் கரைந்த நிலையில் காணப்படுகிறது (சான்று வரம்பில் ஒரு லிட்டருக்கு 2.5 இலிருந்து 7.5 மி.மோல் வரை காணப்படுகிறது) மற்றும் சிறுநீரகங்களால் சிறுநீரின் ஒரு பகுதியாக பிரித்தெடுக்கப்பட்டு அகற்றப்படுகிறது. மேலும் வியர்வையில் சிறிதளவு யூரியா (சோடியம் குளோரைடு மற்றும் நீருடன் சேர்ந்து) வெளியேறுகிறது.

ரத்த பரிசோதனைகளில் ரத்தத்தில் யூரியாவின் அளவை பிற பொருட்களின் அளவுடன் ஒப்பிடுதல் (மஞ்சள் நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது).
இதே தகவலானது நிறைக்கு பதிலாக மோலாரிட்டியின் அடிப்படையில் காண்பிக்கப்பட்டுள்ளது.

செரிக்கப்பட்ட உணவிலிருந்து பெறப்படும் புரதம் மற்றும் பிற உயிரியல் பொருட்களின் உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படாத அமினோ அமிலங்கள் உடலால் ஆக்சிஜனேற்றம் செய்யப்படுகின்றன. இதனால் மாற்று ஆற்றல் மூலமாக, யூரியாவும் கார்பன் டைஆக்சைடும் உருவாகின்றன.[3] ஆக்சிஜனேற்ற பாதையானது அமினோஅமில மாற்று குழுவில் தொடங்குகிறது. பின்னர் இந்த அமினோ குழுவானது யூரியா சுழற்சியில் சேர்க்கப்படுகிறது.

நைட்ரசன் நிறைந்த பொருட்களின் வளர்சிதை மாற்றங்களின் மற்றொரு துணைப்பொருளாக அமோனியா (NH3) உருவாகிறது. அமோனியா மூலக்கூறுகள் யூரியாவை விட சிறிதாகவும் அதிக வினைத் திறன் மிக்கதாகவும் நகரக்கூடியதாகவும் இருக்கின்றன. தொடர்ந்து படிந்து வந்தால், அம்மோனியா செல்களின் அமில கார சமநிலையை மாற்றி நச்சு நிலைகளுக்கு உயர்த்தக்கூடும். எனவேதான் பல உயிரிகள் ஆற்றல் செலவானாலும் கூட அமோனியாவை யூரியாவாக மாற்றி விடுகின்றன. இது நடைமுறையில் செயலற்றப் பொருளாகவும் நீரில் கரையத்தக்கதாகவும் இருக்கிறது. இதனால் தேவைக்கதிகமான நைட்ரசனை உடலிலிருந்து வெளியேற்றவும் கடத்தவும் யூரியா சிறந்த வழியாக இருக்கிறது.

நீரில் அமைன் குழுக்கள், நீர் மூலக்கூறுகளால் மெதுவான இடப்பெயர்ச்சியை அடைகின்றன. இதனால் அமோனியாவும் கார்பனேட் நேர்அயனியும் உருவாகின்றன. இந்த காரணத்தினாலேயே பழைய தேங்கி நிற்கும் சிறுநீர் அதிக நாற்றம் அடிக்கிறது.

மனிதர்களில்[தொகு]

யூரியாவை சிறுநீரகங்கள் கையாள்வது வளர்சிதை மாற்றத்தின் மிக முக்கிய பகுதியாகும். கழிவு நைட்ரசனைக் கடத்துவது மட்டுமின்றி நெஃப்ரான்களில் எதிர் ஊடுருவல் பரிமாற்ற நிகழ்விலும் யூரியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிகழ்வு வெளியேற்றப்படும் சிறுநீரிலிருந்து முக்கியமான அயனிகள் மற்றும் நீர் ஆகியவை மீண்டும் உறிஞ்சப்படும். நெஃப்ரான்களின் அக மெடுல்லரி சேகரிப்பு குழாய்களில் யூரியா மீண்டும் உறிஞ்சப்படுகிறது.[4] இதனால் மெல்லிய ஹென்லே வளைவின் மேலே செல்லும் நீட்சியைச் சுற்றிலும் உள்ள மெடுல்லரி இன்டஸ்டிடியத்தின் சவ்வூடுபரவல் அழுத்தத்தை உயர்த்துவதால் நீர் மீண்டும் உறிஞ்சப்படுகிறது. யூரியா இடமாற்றி 2 -இன் செயல்பாடுகள் மூலமாக, மீண்டும் உறிஞ்சப்பட்ட யூரியாவில் சிறிதளவு ட்யூபிலின் மெல்லிய மேலேறும் நீட்சியில் மீண்டும் பாயும், இது சேகரிப்பு குழாய்களின் வழியாகவும், வெளியேற்றப்படும் சிறுநீரிலும் சென்று சேரும்.

இந்த செயல்முறை ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் உடலில் மிகை சவ்வூடு பரவல் அழுத்தச் சிறுநீர் உருவாக்கப்படுகிறது, அதாவது குருதி பிளாஸ்மாவை விட அதிக கரைந்த பொருட்கள் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. இந்த செயல்பாடு நீர் இழப்பைத் தடுப்பதற்கும், இரத்த அழுத்தம் நிர்வகிப்பதற்கும், இரத்த பிளாஸ்மாவில் பொருத்தமான அளவு சோடியம் அயனிகளின் அளவை நிர்வகிக்கவும் மிகவும் முக்கியமானது ஆகும்.

பிற உயிரினங்களில்[தொகு]

நீர்வாழ் உயிரினங்களில் மிகப்பொதுவான நைட்ரசன் கழிவின் வடிவம் அமோனியாவாகும். ஆனால் நிலத்தில் வாழும் உயிரிகள், நச்சு நிறைந்த அமோனியாவை, யூரியா அல்லது யூரிக் அமிலமாக மாற்றி விடுகின்றன. பாலூட்டிகள் மற்றும் நீர்நில வாழ்வன மற்றும் சில மீன்கள் ஆகியவற்றின் சிறுநீரில் யூரியா காணப்படுகிறது. பறவைகள் மற்றும் சௌரியன் ஊர்வன ஆகியவை வேறு வகையான நைட்ரஜன் வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுள்ளன. இந்த செயல்முறைக்கு குறைவான நீரே தேவைப்படுகிறது. இதனால் நைட்ரஜன் யூரிக் அமிலமாக வெளியேற்றப்படுகிறது. தலைப்பிரட்டைகள் அம்மோனியாவை கழிவாக வெளியேற்றுகின்றன, ஆனால் அவை உருமாற்றத்தின் போது யூரியா உற்பத்திக்கு மாறிவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். மேலே விவரிக்கப்பட்ட பொதுமயமாக்கத்தைத் தவிர யூரியா பாதையானது, பாலூட்டிகள், நீர்நில வாழ்வன மட்டுமின்றி, பிற உயிரிகளிலும் கண்டறிந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பறவைகள், மெல்லுடலிகள், பூச்சிகள், தாவரங்கள், ஈஸ்ட், பூஞ்சை மற்றும் சில நுண்ணுயிரிகளிலும் காணப்பட்டுள்ளன.[சான்று தேவை]

பயன்கள்[தொகு]

வேளாண்மை[தொகு]

உலகெங்கிலும் உற்பத்தி செய்யப்படும் யூரியாவில் 90% நைட்ரசன் வெளியேற்ற உரமாக இதைப் பயன்படுத்துவதற்காகவே செய்யப்படுகிறது. எல்லாவகையான திண்ம நைட்ரஜன் உரங்களிலும் யூரியாவிலேயே அதிக அளவிலான நைட்ரசன் உள்ளடக்கம் இருக்கிறது (46.7%). எனவே இதுவே நைட்ரசன் ஊட்டத்தின் ஒவ்வொரு அலகிற்கான கடத்துதல் செலவை மிகக்குறைவாகக் கொண்டிருக்கிறது.

மண்ணில் இது நீரேற்றம் அடைந்து அம்மோனியாவாகவும் கார்பன் டை ஆக்சைடு ஆகவும் மாறுகிறது. இந்த அமோனியா, மண்ணில் உள்ள பாக்டீரியாவினால் ஆக்சிஜனேற்றம் பெற்று நைட்ரேட்டாக மாறுகிறது. இது தாவரங்களால் உட்கவரப்படுகிறது. யூரியாவானது, பல பல் உறுப்பு திண்ம உர கலவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. யூரியா நீரில் அதிக அளவில் கரையக்கூடியது. இதனால் உரப் பொருட்களில் பயன்படுத்த மிகவும் ஏற்றது (இது அம்மோனியம் நைட்ரேட் உடன் சேர்த்து: UAN ஆகப் பயன்படுத்தப்படுகிறது), எ.கா., 'ஃபோலியார் ஃபீட்' உரப்பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. உரப் பயன்பாட்டிற்கு துகள்களாக பயன்படுத்துவது அதிக சிறப்பானது. ஏனெனில் சிறிய துகள் அளவினால் அதனை பரவலாக தெளிப்பது இயந்திரங்களுக்கு எளிதாக இருக்கிறது.

செயற்கை யூரியாவில் காணப்படும் மிகப்பொதுவான மாசுப்பொருள் பையூரெட் என்பதாகும், இது தாவர வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது.

யூரியாவானது ஒரு ஹெக்டேருக்கு 40 மற்றும் 300 கிலோகிராமுக்கு இடைப்பட்ட அளவில் பரப்பப்படுகிறது, ஆனால் இதன் விலைகள் மாறக்கூடியவை. சிறிய பயன்பாடுகளுக்கு ஊடுருவலின் காரணமாக இழப்புகள் குறைவாக காணப்படும். கோடைகாலத்தில், யூரியா பொதுவாக மழைக்கு முன்பாக அல்லது மழைக்காலத்தில் யூரியா போடப்படுகிறது. இதனால் ஆவியாதல் காரணமாக ஏற்படும் இழப்புகள் குறைவடையும் (இந்த செயல்முறையில் நைட்ரஜன் அம்மோனியா வாயுவாக வளிமண்டலத்தில் இழக்கப்படுகிறது). யூரியா மற்ற உரங்களுடன் இணக்கத்தன்மை இல்லாதது.

யூரியாவில் மிகவும் அதிகமான அம்மோனியா அடர்த்தி காணப்படுவதால் முறையாக பரவலை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு பயன்படுத்தப்படும் சாதனம் சரியானதாக இருக்க வேண்டும். விதையில் அல்லது விதைக்கு நெருக்கமான இடத்தில் துளையிடுதல் ஏற்படக்கூடாது, ஏனெனில் முளைத்தலில் பாதிப்பு ஏற்படக்கூடும். ஸ்ப்ரே முறையில் அல்லது நீர்பாய்ச்சல் முறைகளின் மூலம் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் யூரியா எளிதாக நீரில் கரையக்கூடியது.

தானியம் மற்றும் பருத்தி பயிர்களில், நாற்று நடுவதற்கு முந்தைய இறுதி நிலையில் யூரியா பயன்படுத்தப்படுகிறது. அதிக மழை மிகுந்த பகுதிகளிலும் மணல் மிகுந்த பகுதிகளில், (அதாவது அரிப்பின் காரணமாக நைட்ரஜன் இழக்கப்படும் வாய்ப்புள்ள பகுதிகளில்) நல்ல பருவமழை எதிர்பார்க்கப்படும் இடங்களில் யூரியா வளரும் காலத்தில் பக்கத்தில் அல்லது மேல்புற உரமாக இடுவதற்கு ஏற்றது. எல்லா வகை பயிர்களுக்கும் மேல் உரம் போடுதல் பிரபலமாகவே இருக்கிறது. கரும்பு வளர்த்தலில், நாற்று நடப்பட்ட பின்னர் யூரியா பக்கத்தில் போடப்படுகிறது, ஒவ்வொரு இளம் ரட்டூன் பயிருக்கும் போடப்படுகிறது.

பாசனம் செய்யப்படும் பயிர்களுக்கு, யூரியாவை ஈரமின்றி நேரடியாக நிலத்தில் போடலாம் அல்லது பாசனத்திற்கு செலுத்தப்படும் நீரில் கரைத்தும் பயன்படுத்தலாம். யூரியா இயல்பாக நீரில் கரையக்கூடியது, ஆனால் அதன் அடர்த்தி அதிகரிக்கும்போது அதைக் கரைப்பது மிகவும் கடினமாக இருக்கும். நீரில் யூரியாவைக் கரைப்பது வெப்பஏற்பு வினையாகும், இதனால் உருவாகும் கரைசலின் வெப்பநிலை குறைவடையும்.

ஒரு நடைமுறை உதவியாக, உரமாகப் பயன்படுத்த யூரியா கரைசல்களை உருவாக்கும்போது (நீர்பாய்ச்சல் பகுதிகளில் உரத்தை செலுத்தல்), 100 லிட்டர் நீருக்கு 30 கிகி யூரியாவுக்கு மேல் கரைக்கக்கூடாது.

ஃபோலியார் ஸ்ப்ரேக்களில் யூரியா அடர்த்தி அளவு 0.5% – 2.0% என்ற நிலையில் பெரும்பாலும் பருவ பயிர்களில் பயன்படுத்தப்படுகின்றன. குறைவான-பையூரெட் தரநிலைகள் பெரும்பாலும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

யூரியா வளிமண்டலத்திலிருந்து ஈரத்தை உறிஞ்சுகிறது, எனவே இது பொதுவாக மூடப்பட்ட/சீல் செய்யப்பட்ட பைகளில் சேகரிக்கப்படுகிறது அல்லது அதிக அளவில் சேகரிக்கப்பட்டால் தார்பாலின் மேலுறையின் கீழ் வைக்கப்படுகிறது. எல்லா திண்ம உரங்களையும் போலவே குளிர்ந்த, உலர்வான, நன்றாக காற்றுப்போகும் இடத்தில் வைப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

ரசாயனத் துறை[தொகு]

பல முக்கியமான வேதிச் சேர்மங்களின் உற்பத்திக்கு யூரியா மூலப்பொருளாக இருக்கிறது. அதாவது

தானியங்கி (ஆட்டோமொபைல்) அமைப்புகள்[தொகு]

உள்ளெரி எஞ்சின்களில் இருந்து வெளிவரும் வெளியாகும் வாயுக்கள் இருக்கும் NOx மாசுகளைக் குறைக்கும் விதமாக, SNCR மற்றும் SCR எதிர்வினைகளில் யூரியா பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் டீசன் எஞ்சின்கள் வரை. டீசல் எஞ்சின்களில், இது டீசல் துகள் வடிகட்டி மீளுருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது. புளூ டெக் அமைப்பு, எடுத்துக்காட்டாக நீர் அடிப்படையிலான யூரியா கரைசலை புகைபோக்கும் அமைப்பில் செலுத்துகிறது. யூரியாவின் சிதைவால் உருவாக்கப்படும் அம்மோனியா நைட்ரஜன் ஆக்சைடு வெளியீடுகளுடன் வினைபுரிந்து, அதனை நைட்ரஜன் மற்றும் நீராக மாற்றுகிறது.

பிற வர்த்தகரீதியான பயன்கள்[தொகு]

ஆய்வகப் பயன்கள்[தொகு]

10 M வரையிலான அடர்த்தி கொண்ட யூரியா சிறந்த புரத சிதைக்கும் பொருளாகும், ஏனெனில் இது புரதத்தில் உள்ள வேதிப்பிணைப்புகளைப் பாதிக்கிறது. இந்த பண்பைப் பயன்படுத்தி ஒரு சில புரதங்கள் கரைவதை அதிகரிக்க முடியும். யூரியா மற்றும் கோலைன் குளோரைடு ஆகியவற்றின் கலவை ஆழமான யூடெக்டிக் கரைப்பான் ஆகப் பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகை அயனி கரைசல் ஆகும்.

மின் கலங்களில் தொடர்ச்சியான ஆற்றல் உற்பத்திக்கு சிறந்த ஹைட்ரஜன் மூலமாக யூரியாவைப் பயன்படுத்த முடியும். (பாக்டீரியாக்கள் விரைவாக யூரியாவை சிதைக்கும் என்றாலும்) சிறுநீர்/கழிவுநீர் போன்றவற்றில் காணப்படும் யூரியாவை நேரடியாக பயன்படுத்த முடியும் குறைவான மின்னழுத்தங்களில் (0.37v) , மின்னாற்பகுப்பு முறையின் மூலம் ஹைட்ரஜன் உருவாக்கம் நிகழ்கிறது, இதனால் நீரின் மின்னாற்பகுப்பை விடவும் குறைவான ஆற்றலையேப் பயன்படுத்துகிறது. (1.2v).[5]

மருத்துவ பயன்பாடு[தொகு]

மேற்புற தோல்நோய் தயாரிப்புகளில், தோலை ஈரப்பசையுடன் வைக்க யூரியா பயன்படுகிறது. ஒரு மூடு பொருள் இருந்தால், 40% யூரியா தயாரிப்புகளை வெட்டுதல் இல்லாமல் நகங்களை பிரித்தெடுக்க முடியும். இந்த மருந்து காது அழுக்கு அகற்றுதல் உதவிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பயங்கரவாதம்[தொகு]

1999/2000 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமானநிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயற்சித்த அஹ்மத் ரெஸ்ஸாம் என்ற அல்-கொய்தா மில்லினியம் பாம்பர், யூரியாவை தன்னுடைய வெடிமருந்துகளில் ஒரு பகுதியாக சேர்த்திருந்தான்; ஒரு பயங்கரமான கார் வெடிகுண்டை விடவும் 40 மடங்கு அதிக அழிவை இந்த வெடிமருந்துகள் ஏற்படுத்தியிருக்கக்கூடும்.[6][7]

செயற்கை உற்பத்தி[தொகு]

உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 10,00,00,000 டன்கள் என்ற அளவில் யூரியா உற்பத்தி செய்யப்படுகிறது.[8]

யூரியா அதனுடைய பையூரெட் உள்ளடக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.

ஆய்வக செயல்முறைகள்[தொகு]

மிகப்பொதுவான வழியாக, யூரியாவை ஆய்வகத்தில், பாஸ்ஜேனை முதனிலை அல்லது இரண்டாம் நிலை அமைன்களுடன் வினைப்படுத்தி பெற முடியும், இதற்கு முன்பு ஒரு ஐசோசயனேட் இடைநிலைப்பொருள் தோன்றுகிறது. சமச்சீரற்ற யூரியாக்களை, முதனிலை அல்லது இரண்டாம் நிலை அமைன்களை ஐசோசயனேட்களுடன் வினைப்படுத்தி அணுக முடியும்.

வேதிப் பண்புகள்[தொகு]

எதிர்வினைகள்[தொகு]

யூரியா ஆல்கஹாலுடன் வினைபுரிந்து யுரெத்தேன்களை உருவாக்குகிறது. யூரியா மெலோனிக் எஸ்டர்களுடன் வினைபுரிந்து பார்பிடூரிக் அமிலங்களை உருவாக்குகிறது.

பாதுகாப்பு[தொகு]

யூரியாவானது, தோல், கண்கள் மற்றும் சுவாசக்குழாய் போன்றவற்றில் எரிச்சலைத் தோற்றுவிக்கக்கூடியதாக இருக்கக்கூடும். மீண்டும் மீண்டும் அல்லது நீண்டகாலம் யூரியாவை உரமாக கையாள்வதால், தோலில் அழற்சி தோன்றக்கூடும்.

ரத்தத்தில் அதிக அளவு கலந்திருத்தல் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மிகக்குறைந்த அளவில், யூரியாவை உட்கொள்வது, அதாவது மனித சிறுநீரில் காணப்படும் அளவிற்கு, கூடுதலான நீரை குறித்த நேரத்தில் உட்கொள்ளுதல் என்ற அளவில் ஆபத்தில்லாமல் இருக்கக்கூடும். பல விலங்குகள் (எ.கா., நாய்கள்) மனிதனை விட அதிக அடர்த்தியான சிறுநீரை கொண்டுள்ளன, அவற்றில் அதிக யூரியா காணப்படுகிறது. இம்மாதிரியானவற்றை உயிர்காக்க வேண்டிய சூழ்நிலைகளில் (பாலைவனம் போன்ற இடங்களில்) நீராதாரமாகப் பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

நச்சுகளை ஏற்படுத்தும் ஆல்கா வளர்ச்சியை யூரியா உருவாக்கக்கூடும், உரம்போடப்பட்ட நிலங்களிலிருந்து நீரில் கரைந்து ஓடுவதால் நச்சு நிறைந்த வளர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.[9]

உருகுநிலையைத் தாண்டி இதனை சூடுப்படுத்தும்போது, இந்த பொருள் சிதைவடைகிறது. இதனால் நச்சுநிறைந்த வாயுக்கள் தோன்றி வலுவான ஆக்சிடண்ட்கள், நைட்ரேட்கள், கனிம குளோரைடுகள், குளோரேட்கள் மற்றும் பெர்குளோரேட் ஆகியவற்றுடன் வினைபுரிகின்றன, இதனால் தீயும் வெடிப்பும் ஏற்படக்கூடும்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "pKa Data" (2001-10-24). பார்த்த நாள் 2009-11-27.
  2. K. C. Nicolaou; Tamsyn Montagnon (2008). Molecules That Changed The World. Wiley-VCH. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-527-30983-2. 
  3. Sakami W, Harrington H (1963). "Amino acid metabolism". Annual Review of Biochemistry 32: 355–98. doi:10.1146/annurev.bi.32.070163.002035. பப்மெட்:14144484. 
  4. Walter F. Boron. Medical Physiology: A Cellular And Molecular Approaoch. Elsevier/Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4160-2328-3.  Page 837
  5. Researchers develop urea fuel cell.
  6. U.S. Court of Appeals for the Ninth Circuit (February 2, 2010). "U.S. v. Ressam". பார்த்த நாள் February 27, 2010.
  7. "Complaint; U.S. v. Ressam". NEFA Foundation (December 1999). பார்த்த நாள் February 26, 2010.
  8. Jozef H. Meessen and Harro Petersen “Urea” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a27_333
  9. newscientist.com – US set to track toxic algal blooms

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரியா&oldid=2742942" இருந்து மீள்விக்கப்பட்டது